Friday, 31 August 2012

சுணைக்கேடு’ஒரு வித்தியாசமான அனுபவம்



‘சுணைக்கேடு’ஒரு வித்தியாசமான அனுபவம்

சோ.பத்மநாதன்


தொலைக்காடசி நிறுவனமொன்று அறிவிப்பானர்களுக்கான தேர்வு நடத்துகின்றது.மூன்று இளம் பெண்கள்-16,17 வயதினர்-நேர்முகத் தேர்வுக்கு வந்து சேர்கிறார்கள்.அவர்களை வரவேற்கவோ,ஆற்றுப்படுத்தவோ யாருமில்லை.ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்து கொள்கின்றனர்.தத்தம் திறன்களை முன்நிறுத்துகின்றனர்.சந்தர்ப்பம் வரும் போது அடுத்தவரை மட்டம் தட்டுகிறன்றனர்.

தொலைக்காட்சி நிறுவனத்தின் பணிப்பாளர் இப் பெண்களை நேரில் சந்திக்காவிடினும்,அவர்களின் ஒவ்வொரு அசைவையும் பேச்சையும் அவதானித்துக் கொள்கிறார்.அவர்கள் நடமாடும் வெளி(அரங்கு)வீடியோ பண்ணப்படுகிறது.ஒரு கட்டத்தின் பின் அவர் ‘குரல்’ அவர்களோடு தொடர்பு கொள்கிறது.அந்தப் புறக்குரல் தான் நாலாவது பாத்திரம்.

மரென்,லில்லி,பெட்றா ஆகிய மூன்று வேட்பாளர்களுடைய குணஇயல்புகளை - அவர்ககளுடைய சுயருபங்களை - வெளிக் கொணர்வதில் நாகாசிரியர்  (லுட்ஸ் கப்னர் )வெற்றி பெற்றிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.இக் கோணத்தில் பார்க்கும் பொது ‘சுணைக்கேடு’ ஓர் உளவியல் பரிமாணம் பெறுகின்றது.



நூடகத்தில்-ஏன்,புனைகதையிலும் கூட – ஒரு பாத்திரம்,அச்சொட்டாக,இன்னொரு பாத்திரம் போல் அமைவதில்லை,அமையவும் கூடாது There shouldn't be a duplication of character.ஒரே நோக்கத்துக்காக,ஒரே இடத்துக்கு வந்து சேரும்.ஒரே வயதினரான பெண்  பாத்திரங்களை,அவர்களுடைய குணசித்திர வேறுபாடுகள் தெரியும் படி வார்ததெடுப்பது சிரமமான காரியம்.இயக்குனர் தேர்ந்தெடுத்துள்ள நடிகைகள் தோற்றததில் மட்டுமல்ல,பேச்சு,நடை,அங்க அசைவுகள் ஆகியவற்றிலும் தம் சுயங்களை அடையாளப்படுத்துகின்றனர்.

‘சுணைக்கேடு’ஒரு சமகால Nஐர்மன் நாடகம்.2003இல் வொன்ஐpயோதிக்கா டலால் என்பவரால் ஆங்கிலத்துக்கு மொழி பெயர்க்கப்பட்டு,பம்பாயில் அரங்கேற்றப்பட்டது.இவ்வாண்டு சிங்களத்தில் மொழி பெயர்கப்பட்டு,கொழும்பில் அரங்கேற்றப்பட்டது.இப்போது ஈழத்தின் முன்னணி நாடகாசிரியராகிய கலாநிதி குழந்தை ம.சண்முகலிங்கத்தால் மொழிபெயர்க்கப்ட்டு கடந்த 26ஆம் திகதி கைலாசபதி கலையரங்கில் அளிக்கை செய்யப்பட்;டது.இதை நெறியாள்ளை செய்தவர் இனமுரண்பாடு-சமாதானம் பற்றி 09 நாடகங்களையும் 28 சிறுவர் நாடகங்களையும் இயக்கிய சாதனையாளர் தே.தேவானந்த்.நாடகத்தை சமூகத்துக்கு எடுத்துச் செல்வதில் தேவானந்த் ஆற்றியுள்ள பணி மிகப்பெரியது.
அனோஐh,மரீன்,துவாரகி மூவருமே தம் பாத்திரங்களை உணர்ந்து நடித்துள்ளனர்.இவர்கள் புதுமுக நடிகர்கைகள் என்று பார்க்கையில் அவர்களுடைய நடிப்புப் பாராட்டப்பட வேண்டியது தன்.மேலைத்தேய இசைக்கேற்ப்ப நடன அசைவுகள் செய்ய வேண்டிய சவாலை அனோஐh சமாளித்து வெற்றி கண்டுள்ளார்.

அசரீரியாக இயஙகிய தேவானநத்; நாடகத்தை முன் நகர்த்துகிறார்.சந்தர்ப்பத்துக் கேற்ப கண்டிப்பு,எள்ளல்,இணக்கம் முதலிய தொனிகளை அவர் குரல் வெளிப்படுத்துகிறது;
இவ்வளவும் சொன்ன பிறகு ஒரு விசயத்தைக் குறிப்பிட வேண்டும்.மேற்கத்தேய பண்பாட்டுக் கோலத்தை அ;ப்படியே எமது தமிழ்ச்சூழலில் காட்டும் போது,எந்த அளவுக்கு அது சுவைஞர்களை தொற்றும்?பாத்திரங்கள் அவையோடு உரையாட முயன்ற போது,அவை இறுகிப்போயிருந்ததற்கு கலாச்சார இடைவெளிதான் காரணமோ?அல்லது இளையோர் நாடகத்தில் முதியோர் பலர் பார்வையாளராக வந்த துரதிர்ஷ்டம் காரணமோ?சுணைக்கேட்டை சுதேசமயப் படுத்தியிருந்தால் சபை அதிகம் ஈர்க்கப்பட்டிருக்குமோ?

நாடகத்தின் தொழில்நுட்ப அம்சம் பாராட்டப்பட வேண்டியது. Video clippings வடிவில் காடசிகளை நடிகைகளுக்கே போட்டுக் காட்டியது நல்ல உத்தி.பொருத்தமான ளநவவiபெ பயன்படுத்தப்பட்டுள்ளன.
மோத்தத்தில் ஒரு வித்தியாசமான அனுபவம்.

No comments:

Post a Comment