தழிழில் ‘சுணைக்கேடு’ என்ற பெயரில் முதல் தடவையாக இந்த நாடகம் யாழ்ப்பாணபல்கலைக்கழகத்தில் மேடையேற்றப்படுகிறது.
இதனை யாழ்ப்பாணத்தில் இயங்கி வருகின்ற அரங்க நிறுவமான செயல்திறன் அரங்க இயக்கமும் கொழும்பில் இயங்கி வருகின்ற ஜேர்மன் கலாசார நிறுவனமான Gothe நிறுவனமும் இணைந்து தயாரித்து மேடையேற்றியிருக்கின்றன.
இதனை யாழ்ப்பாணத்தில் இயங்கி வருகின்ற அரங்க நிறுவமான செயல்திறன் அரங்க இயக்கமும் கொழும்பில் இயங்கி வருகின்ற ஜேர்மன் கலாசார நிறுவனமான Gothe நிறுவனமும் இணைந்து தயாரித்து மேடையேற்றியிருக்கின்றன.
ஓகஸ்ற் 26ம் திகதி அன்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் ‘சுணைக்கேடு’ நாடகம் மேடையேற்றப்பட்டது.
இந்த நாடகம் தொலைக்காட்சி ஒன்று எவ்வாறு உள்ளார்ந்த வாழ்க்கையை பாதிக்கின்றது. எவ்வாறு மக்களுடைய அடையாளங்களை திரைப்படங்களும் சின்னத்திரைகளும்; தவறாகப் பயன்படுத்துகின்றன என்ற விடயங்களை மூன்று பெண் பாத்திரங்களிற்கூடாக வெளிப்படுத்தியிருந்தது.
பெட்ரா, மரேன், லில்லி ஆகிய மூன்று பேர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றின் அறிவிப்பாளர் இறுதித்தேர்விற்காக தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றில் பங்குபற்றுகி;ன்றார்கள் இவர்கள் மூவருமே நவநாகரீக பகட்டாரவாரம் மிக்க இளையோர் பண்பாட்டை கொண்டவர்களாக காணப்படுகின்றனர்.
அதேவேளை வேறு சமூக மட்டங்களில் இருந்தும் வேறு வதிவிடப் பின்னணியில்; இருந்தும் வந்து ஒரு இடத்தில் சந்திக்கின்றார்கள் தங்களுக்கான வேலை ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காக ஆர்வமிகுதியால் தமது ஆற்றல்களை வெளிக்காட்ட போட்டிபோடுகிறார்கள் இந்த மூன்று பேரையும் தயாரி;ப்பாளர் ஒரு பரிசோதனைக்கூட மனிதர்களாகப் பாவித்து அவர்களை வேறு வேறு சந்தர்ப்பங்களிற்கு ஊடாக பரிசோதித்து பார்க்கிறார்.

தொலைக்காட்சியில் தோன்றிவிட வேண்டும் என்ற ஆர்வத்தால் கிளர்ச்சிகளைக் காட்டுவதோடு தமக்கிடையில் சண்டையிட்டுக் கொண்டும் ஒருவர் மனதை ஒருவர் துன்பப்படுத்திக்கொண்டும், அழுதும் ஆத்திரப்பட்டும் புலம்பியும் கொள்கிறார்கள்.
தமது ஆற்றல்களோடும் தமது இயலாமைகளோடும் மோதித்துக்கொள்கிறார்கள். இவை எல்லாம் ஒரு வீடியோக் கமரா முன் நடைபெறுகி;ன்றன. இறுதியாக தம்மை வழி நடத்துகின்ற நேரில் தோன்றாத குரலுக்குரியவருக்கு எதிராக கிளர்ந்தெழுகிறார்கள். இவை எல்லாவற்றுக்குமான வெகுமதியாக ஆத்திரம், அழுகை, எள்ளல,மகிழ்ச்சி; போன்ற உணர்வுகளின் கணங்கள் அடங்கிய செய்கைகளைப் பதிவு செய்த ஒரு வீடியோ காட்சித்தொகுப்பு அவர்களுக்கு வழங்கப்படுகிறது.

‘சுணைக்கேடு’ என்ற இந்த நாடகத்தை நெறியாள்கை செய்திருப்பவர் ஈழத்தி;ன் முக்கியமான நாடக நெறியாளர் தே.தேவானந்த அவர்கள்.
நாடக ரசிகர்களுக்கும், நாடக ஆர்வலர்களுக்கும் மற்றும் மாணவர்களுக்கும் புதியதொரு அனுபவத்தை; இந்த நாடகம் வழங்கியிருந்தது.
ஊடக நுட்பங்களோடும்,நவீன அரங்க நுட்பங்களோடும் இணைந்த நடிகர்களில் அபார நடிப்பின் இந்த நாடகம் பார்த்தோர் மனதை கொள்ளை கொண்டிருந்தது..
No comments:
Post a Comment