Saturday, 7 December 2024

தமிழர்கள் சிங்களத் தேசத்தோடு ஒத்தோடத் தயாராகிவிட்டார்களா ???!!!!

Dr.தேவநாயகம் தேவானந்த்

இலங்கைப் பாராளுமன்ற தேர்தல் (2024) நிறைவடைந்துள்ளது. தேர்தல் பிரச்சாரத்திற்காக சுவர்களில் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளில் மூஞ்;சைகள் கிளிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் தேசியம், தாயகம், தன்னாட்சி, சுயநிர்ணயம் என்ற வார்த்தைகள் இன்னமும் சுவர்களில் கிடக்கின்றன. ஒரு புயல் வந்து போயிருக்கிறது. அதனோடு சேர்ந்து கனமழையும் வந்து போயிருக்கிறது. இத்தனைக்கு மத்தியிலும் சுவர்களில் உள்ள சுவரொட்டிகளில் மிச்சமும் சொச்சமுமாக இந்த வார்த்தைகள் காணப்படுகின்றன. அவை ஏதோ அர்த்தம் தருகின்றன. அல்லது புதிய அர்த்தத்திற்காக காத்திருக்கின்றன. ஆனால் தேர்தல் முடிவுகள் தமிழர்கள் சிங்கள தேசத்துடன் ஒத்தோடத் தயாராகிவிட்டார்கள் என்ற பிம்பத்தை ஆளும்தரப்புக்கு கொடுத்திருக்கிறது. இது பல கேள்விகளையும் புருவம் உயர்த்த வைக்கும் ஆச்சரியங்களையும்  தோற்றுவிக்கின்றன. சிங்கள தேசத்தோடு ஓத்தோடுதல் தமிழர்களுக்கு தீர்வைத் தருமா?  உண்மையில் தமிழர்தம் பிரச்னைதான் என்ன? எதனை இத்தனைகாலம் கோரினார்கள் என்பதை மீள் வாசிப்புக்கு உட்படுத்தியாக வேண்டும். இதற்கு நீண்ட, அகண்ட ஆய்வுகளும் விவாதங்களும் அவசியமாகிறது. உண்மையில் தமிழ்தேசம் நீர்த்துப் போயிருந்தால் அதனை உடற்கூற்றாய்வுக்கு உட்படுத்த வேண்டும். 

சரி சிங்களதேசத்தோடு ஒத்தோடுதல் என்றால் என்ன?

தமிழர்கள் தங்களின் அடையாள பிரச்சனைகளை மறந்து பெரும்பான்மையினரின் கொள்கைகளை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிலையை ஒத்தோடுதல் என்று வரையறுத்துக் கொள்ளலாம்.

தற்போதைய இலங்கை அரசியல் நிலைமைகளை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கு "தேசியம்", "தாயகம்;", "தன்னாட்சி" மற்றும் "சுயநிர்ணய உரிமை" போன்ற கருத்துகளைப் புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தச் சொற்கள், குறிப்பாக இலங்கையைப் பொறுத்தளவில் தமிழர் சமுதாயத்தின் வாழ்வியலின் ஒரு அங்கம். அதேவேளை அதுவே பிரச்சனைகளில் மையமாகவும் கடந்த பல தசாப்தங்களாக இருந்து வருகின்றது. இவை இலங்கையின் சிங்கள மற்றும் தமிழர் சமூகங்களுக்கிடையே எதிர்மறையான சம்பவங்களையும் நீடித்த அரசியல் மோதல்களையும் உருவாக்கியுள்ளன.

இங்கு, தேசியம் என்பது மொழி, மதம், வரலாறு போன்ற பொதுவான அடையாளங்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு மக்களின் ஒருமித்த உணர்வைக் குறிக்கிறது. இலங்கையின் மைய "தேசிய அடையாளம்" பெரும்பாலும் சிங்கள-பௌத்த அடையாளத்தின் சாரத்தில் அமைந்துள்ளது என்பதை நாம் முதலில் புரிந்து கnhள்ள வேண்டும்.

சிங்கள தேசியத்தின் உருவாக்கம், 1948-ஆம் ஆண்டு இலங்கை விடுதலையைத் தொடர்ந்து தீவிரமடைகிறது. குறிப்பாக 1956-ஆம் ஆண்டு சிங்களதான் ஒரே மொழி சட்டம் (ழுககiஉயைட டுயபெரயபந யுஉவ) அமுலுக்கு வந்த போது முனைப்புப்பெறுகின்றது. இது தமிழர் சமுதாயத்தின் மொழி உரிமைகளை நிராகரித்து இனமுரண்பாட்டை தீவிரப்படுத்தியது. இந்தச்சூழலில் தமிழ் தேசியம் என்ற எண்ணம் முனைப்புபெற ஆரம்பிக்கிறது. இலங்கைத் தீவில் தமிழர்களின்; உரிமைகளை பாதுகாப்பதற்காக சிங்கள தேசியத்திற்கு எதிரான, மறுப்பு சிந்தனையாக தமிழ் தேசியச் சிந்தனை உருவாகியது. தமிழ் தேசியவாதம் அரசியல், மொழி மற்றும் சமூக அடையாளங்களை முன்வைத்து சிங்கள தலைமையினால் புறக்கணிக்கப்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முயற்சித்தது. 

அதே வேளை தாயகக் கோட்பாடு மற்றும் உள்ளக சுயநிர்ணயத்தின் கருத்துகள் தமிழர் அரசியலில் முக்கியமான இடத்தைப் பெற்றிருந்தன. இவை தமிழர்களின் தனித்துவமான அரசியல், சமூக, மற்றும் கலாச்சார அடையாளத்தை முன்னிறுத்தும் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டவை. இதன் மூலம் தமிழர் சமூகம் தன் அடையாளத்தை மீட்டெடுத்து, சுயாட்சி வழியாக தன்னிகரற்ற முன்னேற்றத்தை அடைய முனைந்தது.

தாயகக் கோட்பாடு (ர்ழஅநடயனெ வுhநழசல) தமிழர் அரசியலில் 1970களில் முக்கியத்துவம் பெற்றது. இந்தக் கோட்பாடு தமிழர்களின் வரலாற்று ரீதியான பாரம்பரிய வாழ்விடங்களின் அடிப்படையில் உருவானது. வரலாற்றுத் தாயகம் என்ற முக்கியமான கோட்பாடு இந்தக்காலகட்டத்தில் முன்வைக்கப்படுகின்றது. தமிழர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை தமது வரலாற்றுத் தாயகமாகக் காண்கின்றனர்.

இங்கு, தாயகக் கோட்பாடு தனிநாட்டுக் கோரிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொள்ளவில்லை. மாறாக,  ஒற்றுமை உள்ள ஒரு கூட்டாட்சியில் தமிழர்களின் சுயாதிக்கத்தையும் விரும்பினர். தாயகப் பகுதி மக்களின் உரிமைகளை பாதுகாக்க வழிவகை செய்வது என்பது இதன் நோக்கம்.

அதே வேளை உள்ளக சுயநிர்ணயம் (ஐவெநசயெட ளுநடக-னுநவநசஅiயெவழைn); என்பது மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை தாங்களே நிர்ணயிக்கக் கூடிய ஒரு அமைப்பை உருவாக்கும் நோக்கம் கொண்டது. இது சர்வதேச சட்டங்கள் மற்றும் மக்களாட்சி கோட்பாடுகளின் அடிப்படையில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்தாகும். உள்ளக சுயநிர்ணயம் என்பது தமிழர்களின் தனிநாட்டு தேவை முழுமையாக நிறைவேறாதபோதிலும், அவர்களின் சுயாதிக்கத்தை அடையும் ஒரு வழியாகக் கருதப்பட்டது.

தாயகக் கோட்பாடு என்பது தமிழர்களின் வரலாற்று உரிமைகளை முன்வைக்கும் முக்கியக் கொள்கையாகும், அதே சமயம் உள்ளக சுயநிர்ணயம் அதன் நடைமுறை செயல்பாட்டிற்கு உகந்த வழியாகக் காணப்படுகிறது தாயகக் கோட்பாட்டுக்கும் உள்ளக சுயநிர்ணயத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது. தமிழர்கள் தங்களின் வரலாற்று அடையாளத்தையும் உரிமைகளையும் காக்க, இவை இரண்டும் ஒருங்கிணைந்த முறையில் முன்னேற்றப்பட வேண்டும் என்று விரும்பினார்கள். இவை தமிழர்களின் நீண்டகால அரசியல் கோரிக்கைகளுக்கான தீர்வுகளுக்கான முன்மொழிவுகளாக, கோரிக்கையாக இருந்துவந்திருக்கிறது. இந்தக் கோரிக்கைள் சிங்கத்தேசியத்தோடு ஒத்தோடுவதால் கிடைத்துவிடுமா? என்றால் இல்லையென்ற பதிலே கிடைக்கிறது. இப்போது புதிய அரசாங்கம்; பதவியேற்றிருக்கிறது. பல்சமூகம் வாழ்வதற்கான சமாதானத்திற்கான அரசியல் அமைப்பை உருவாக்கும் முயற்சியில் அது தன்னை அர்ப்பணிப்போடு ஈடுபடுத்தியாக வேண்டும். அதற்காக பெரும்பான்மையினரின் ஆதிக்க அரசியல் (ஆயதழசவையசயைn Pழடவைiஉள) மனப்பாங்கு முதலில் நீக்கப்பட வேண்டும். 

இலங்கையின் தற்போதைய அரசியல் சூழல் தமிழ்த்தேசியச் சிந்தனையை நிராகரித்து, சிங்கள தேசியத்தின் ஆதிக்க அரசியல் மற்றும் போர்க்கள வெற்றி ஆகியவற்றை தனது முதலீடாகக் கொண்டு முன்னகர முயற்சிக்கிறது. இது மீட்சிக்கான வழியாக எப்போதும் அமையப்போவதில்லை.

ஒத்தோடுதல் தமிழர்களின் அடையாளத்தை நீடிக்க உதவாது. இது தமிழர்களின் முக்கியமான அரசியல் மற்றும் சமூக உரிமைகளை மறுக்கும் ஒரு நிலையை உருவாக்கும் அபாயம் கொண்டது. ஒத்தோடுதல் தமிழர்களின் தனித்துவதன்மையின்மையை அதிகரிக்கலாம். இது இன ஒற்றுமைக்கான வாய்ப்புகளை மேலும் தகர்க்கக்கூடும்.

இதனால், தமிழர்கள் சிங்கள தேசத்தோடு ஒத்தோடுதல் என்பது ஒரு தற்காலிகத்தன்மை கொண்ட முடிவாகவே கருதப்பட வேண்டும். இலங்கையின் பல்துறை சமுதாயம் ஒருவரை ஒருவர் சமநிலை நின்று புரிந்துகொள்ள வேண்டிய ஒரு முக்கிய இடத்தில் உள்ளது.



No comments:

Post a Comment