வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கிணங்க, செயற்திறன் அரங்க இயக்கம் (Active Theatre Movement) மூலம் கிளிநொச்சி சிறுவர் பாதுகாப்பு இல்லம், அச்சுவேலி சான்றளிக்கப்பட்ட பாடசாலை மற்றும் சிறுவர் இல்லங்களில் தங்கியுள்ள ஆண், பெண் சிறுவர்களுக்கான உளசமூக மேம்பாட்டுப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் மொத்தமாக 220 சிறுவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு பயிற்சியும் ஆறு மணித்தியாலங்கள் கொண்டதாக அமைந்ததுடன், அவை செயற்திறன் அரங்க இயக்கத்தின் பணிப்பாளரும் அரங்கியல் பயிற்சியாளருமான கலாநிதி தே. தேவானந்த் அவர்களால் நெறிப்படுத்தப்பட்டன.
Tuesday, 2 June 2026
'குட்டி நல்ல சுட்டி' நாடக மேடையேற்றமும் அரங்கினூடான உளசமூகப்பணியும்
வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை மற்றும் சிறுவர் பாதுகாப்புத் திணைக்களத்தின் வேண்டுகோளுக்கிணங்க, செயற்திறன் அரங்க இயக்கம் (Active Theatre Movement) மூலம் கிளிநொச்சி சிறுவர் பாதுகாப்பு இல்லம், அச்சுவேலி சான்றளிக்கப்பட்ட பாடசாலை மற்றும் சிறுவர் இல்லங்களில் தங்கியுள்ள ஆண், பெண் சிறுவர்களுக்கான உளசமூக மேம்பாட்டுப் பயிற்சிகள் நடத்தப்பட்டன. இந்நிகழ்ச்சிகளில் மொத்தமாக 220 சிறுவர்கள் பங்கேற்றனர். ஒவ்வொரு பயிற்சியும் ஆறு மணித்தியாலங்கள் கொண்டதாக அமைந்ததுடன், அவை செயற்திறன் அரங்க இயக்கத்தின் பணிப்பாளரும் அரங்கியல் பயிற்சியாளருமான கலாநிதி தே. தேவானந்த் அவர்களால் நெறிப்படுத்தப்பட்டன.
புதுவை அன்பன்: கலைக்கும் கொள்கைக்கும் உண்மையாக வாழ்ந்த அரங்கக் கலைஞர்
கலாநிதி
தேவநாயகம் தேவானந்த்
அறிமுகம்
புதுவை அன்பன் யாழ்ப்பாணம் புத்தூரைச் சேர்ந்தவர் தனது சிறுவயதில் காவோலை கொழுத்தி அந்த வெளிச்சத்தில் கூத்தாடிய பரம்பரையில் வந்தவர். ஊரில் காத்தவராயன் கூத்தை அறுபது அடி நீள மேடையில் பிரமாண்டமாக நிகழ்த்தியவர். அந்தக் கூத்தை மேடையேற்றும்போது அதில் காணப்பட்ட பாலியல் விரசங்கள், சமூக ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தும் கூறுகள், மூடநம்பிக்கைகள் மற்றும் இரட்டை அர்த்த வசனங்கள் போன்றவற்றை நீக்கி, புதிய சமூகப் பார்வையுடன் மறுவடிவமைத்தார்.
கண்ணுக்குப்புலனாகா சமூகப் போராளி அமரர் ச. பாஸ்கரன்
கலாநிதி தே.தேவானந்த்
நாடகக் கலைஞரும் ஆயுள் வேத வைத்தியருமான ச. பாஸ்கரன் அவர்கள் 28 மே 2026 அன்று லண்டனில் காலமானார். அமைதியான சுபாவம், தமிழர் விடுதலையின் மீதான ஆழ்ந்த பற்றுறுதி, நாடகக் கலையின் மீதான அளப்பரிய ஈடுபாடு, சமூகச் சிந்தனை ஆகிய உயரிய பண்புகளைக் கொண்டவர் அவர். தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் புலமை பெற்றிருந்ததுடன், சிறந்த தொடர்பாடல் திறனும் மனிதநேயப் பண்பும் கொண்டவராக அறியப்பட்டார். உறவுகளைப் பேணுவதிலும் மனிதர்களை இணைத்துச் செயற்படுத்துவதிலும் தனித்திறன் மிக்கவராக விளங்கினார். சிறந்த சாரணர், சாரணப்பண்பாட்டின் வழி வந்தர்.
Saturday, 18 April 2026
நடிப்பு முறைகளின் கலப்பு புத்தாக்கம் அல்ல அது புரிதலற்ற செயற்பாடு
நடிப்பு முறைகளின் கலப்பு புத்தாக்கம் அல்ல அது புரிதலற்ற செயற்பாடு
------------------------------------------------
பேராசிரியர் மௌனகுரு அவர்கள் இன்று சமூக ஊடகங்களில் (17.04.2026) பிரசுரித்த ‘நடிப்பு முறைகளின் கலப்பு’ என்ற தலைப்பிலான கட்டுரைக்கான ஒரு விவாத களத்தை உருவாக்கும் நோக்குடன் இந்த பதிலிறுப்பு அமைகிறது. துறைசார்ந்தோருக்கிடையிலான மோதல்கள் ஆராக்கியமான விவாதங்களுக்கும் கற்றலுக்கும் வழிவகிக்கும் என்ற நம்பிக்கையில் இதனை பிரசுரிக்கிறேன்.
பேராசிரியர் மௌனகுருவின் இந்தக் கட்டுரை ‘நடிப்பு முறைகளின் கலப்பு’ என்று விளக்குகிறது. ஆனால் இந்த அணுகுமுறை நடிப்பின் அடிப்படை இயல்பை தவறாகப் புரிந்து கொள்ளும் ஒரு பொதுமைப்படுத்தலாகும். நடிப்பு என்பது வெளியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட பாணி/கூறுகளின் சேர்க்கை அல்ல; அது நடிகனின் உள்ளார்ந்த அனுபவத்தின் வெளிப்பாடு.
Sunday, 23 February 2025
2025-ஆம் ஆண்டின் ஜனாதிபதியின் வரவு செலவுத் திட்ட உரை - விமர்சனப் பார்வை
Dr.தேவநாயகம் தேவானந்த்
இலங்கையின் மலிந்து கிடக்கின்ற ஊழல், முறைகேடு போன்ற விடயங்களில் மாற்றத்தைக்கொண்டுவருவதற்கான முறைமை மாற்றத்தை முன்னினைப்படுத்தி பாராளுமன்றத் தேர்தலில் வெற்றிபெற்றிருந்த தேசிய மக்கள் சக்தி அதனை நோக்கி நகர்கிறதா? ஆல்லது ஏலவே இருக்கின்ற அதிகாரக்கட்டமைப்புக்களில் ஏறிக்குந்தியிருந்து அதனைச்சுவைக்கிறதா? ஏன்ற கேள்வி வலுவாகிறது. கடந்த வாரம் பிரதமமந்திரி யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்தார் அப்போது சிறுவர் உளநலமேம்பாடு தொடர்பான ஒரு கலந்துரையாடலுக்காக அவரைச்சந்திப்பதற்கு வாயப்புக்கேட்டு அமைச்சர் சந்திரசேகரத்தைத் தொடர்புகொண்டிருந்தோம். பின்னர் அவர் குறிப்பிட்ட ஒரு நபரைத் தொடர்பு கொண்டு இறுதியாக கந்தர்மடத்திலுள்ள மக்கள் தொடர்பு அலுவலகத்திற்கு சென்றிருந்தோம். என்னொடு ஊடக நண்பர் ஒருவரும் வந்திருந்தார். அந்த அலுவலகத்திற்குள் நுழைந்தபோது, அது ஏலவே சினிமாஅரங்கில் முன்னாள் அமைச்சர் ஒருவர் வைத்திருந்த அலுவலகத்திற்கு ஒப்பானதாக இருந்தது ஆச்சரியமாக இருந்தது. அதே கேள்விகள்,அதே அணுகுமுறைகள், அதே மூடிய அறைகள், முறைத்த முகங்கள் என்று எந்த மாற்றத்தையும் காணவில்லை. தெளிவான பதில்கள் இல்லை, தமது அலுவலத்திலேயே மக்கள் அணுகும் முறைமையில் மாற்றத்தை செய்ய முடியாதவர்கள் எப்படி நீண்ட காலம் புரையோடிப்போன நிலைத்த கட்டமைப்புக்களில் மக்கள் சார்பு நிலையை உருவாக்கப்போகிறார்கள் என்பது புரியவில்லை. அது நிற்க,
Monday, 26 September 2016
Reigniting theatrical interest in Jaffna’s younger generations
Monday, 16 September 2013
இளையோர் நாடக விழா -2013
ஈழத்து நாடக வரலாறு புதிய பண்டநுகர்வுக் பண்பாட்டுக்குள் தன்னை புதிப்பித்துக்கொள்ள வேண்டிய கட்டாய சூழலில் இருக்கிறது போலும்.
இலங்கையைப் பொறுத்தவரையில் வெளிப்பாட்டு சுதந்திரத்துக்கான ஏது நிலை மேலும் வளர்ச்சியடைய வேண்டிய நிலையிலேயே காணப்படுகிறது. அதிலும் நாடகம் என்ற பலர் இணைந்து பணிசெய்கின்ற கலையைப் பொறுத்தமட்டில் படைப்பு கருக்கொண்டு பிரசவித்தல் வரையில் தடைகள் ஏராளம். இதனால் படைப்பு தறுக்கணித்துவிடுவதற்கு வாய்ப்புக்கள் அதிகம். இலக்கியப்படைப்பாளி தன் கதையையோ, கட்டுரையையோ, கவிதையையோ தான்விரும்பிய படி எல்லை கடந்து பயணித்து படைக்க முடியும் அவற்றை இன்றைய தகவல் தொழிலநுட்பப் உலகில் பிரசுரிக்கவும் வாய்ப்புக்கள் ஏராளம்.





