தமிழ் தலைவன் மு.கருணாநிதி -04
கருணாநிதியின் அரியல் வாழ்வில் திருப்பு முனையை ஏற்படுத்தியதில் சிவாஜி கணேசன் முதல் முதல் நடித்;து வெளிவந்த பராசக்திப் படம் முக்கியமானது. ஆதற்கு கருணாநிதியே வசனம் எழுதியிருந்தார். ஆதில் வரும் நீதிமன்றக்காட்சியினல் சிவாஜி கணேசன் மிக அற்புதமாக சமூகநீதிக்கருத்துக்களை கருணாநிதியின் வசனத்தில் அசத்துவார். அதில் ஒரு வசனம் தான் ‘தென்றல் என்னைத் தொட்டதில்லை தீயைத் தாண்டியிருக்கிறேன்.’ என்பது.
கருணாநிதியின் வாழ்வில் தென்றல் வீசுகிறது. அவரது ஆட்சியில் ஊழல் மலிந்து விட்டது என்று அவரது தோழனும் திராவிட முன்னேற்றக்கழகத்தின் அப்போதைய பொருளாளருமான எம்.ஜி.ஆர் போர்கொடி தூக்கினார். ஏம்.ஜி.ஆர் என்ற அந்த நெருப்பைத் தாண்டுவதற்கு கருணாநிதி படாதபாடுபட்டார். இருந்தாலும் கட்சியைக் காத்து தீயைத் தாண்டி வந்திருக்கிறார்.