Thursday, 29 April 2010

டென்மார்க் கலாசாரத்தைப் பின்பற்ற முயலும் ஈழத் தமிழர்கள்

உலகின் வடதுருவ நாடுகளில் ஒன்றாகக் கருதப்படும் நாடு டென்மார்க். கிட்டத்தட்ட ஐந்து மில்லியன் மக்கள் தொகையைக் கொண்ட இந்த நாட்டில் தலைநகர் கோர்பனேகன், அண்மையில் உலகச் சுற்றுச்சூழல் தொடர்பான ஐ.நா. மாநாடு இந்தப் பெருநகரில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இங்கு வாழும் மக்கள் ‘டனிஸ்’ மொழியைப் பேசுகிறார்கள். இங்கு கடந்த இருபது ஆண்டுகளாக தென்னாசிய நாடுகளில் ஒன்றான சிறிலங்காவில் வாழும் ஈழத் தமிழர்கள் ‘அரசியல் தஞ்சம்’ கோரிக் குடியேறுகிறார்கள். கிட்டத்தட்ட பதினெட்டு மணிநேர விமானப் பயணத்தின் பின்னரே ஈழத்திலிருந்து டென்மார்க் செல்ல முடியும். ஈழத்தின் தமிழ் கலாசாரமும் டென்மார்க்கின் தமிழர் கலாசாரமும் முற்றாக வேறுபட்டன. இதற்கு இடவமைப்பு, காலநிலை என்பன முக்கிய காரணமாக நோக்கப்படலாம்.

இலங்கையின் காலநிலை 30 – 40 பாகை செல்சியஸ் வரையான சராசரி வெப்பத்தைக் கொண்ட சீரான காலந்லை மாற்றத்தைக் கொண்டது. ஆனால், டென்மார்க் எப்போதும் குளிரான காலநிலையைக் கொண்டிருப்பதோடு, சீரற்ற காலநிலையை எப்போதும் கொண்டிருக்கும். டிசம்பர் மாதத்தில் பனிப்பொழிவையும் காணமுடியும்.



இந்த இரண்டு காலநிலைக்கும் அதற்குரியதான ஆடைகளையும் உணவையும் மற்றும் வசிப்பிடத்தையும் தேட வேண்டியிருக்கின்றது.



டென்மார்க், ஐரோப்பிய கலாசாரத்தின் அடிப்படையில் ‘வுiஅந ளை ஆழலெ’ நேரம் பணப் பெறுமானம் மிக்கது என்பதை அடிப்படையாகக் கொண்டு இயங்குகின்ற நாடு. பிள்ளைகள் மிகச் சுதந்திரமாக வளர்க்கப்படுகின்றனர். உட்கட்டுமான அமைப்புக்கள் நன்கு திட்டமிடப்பட்டு மக்கள் நலன்சார்ந்து காணப்படுகிறது.



ஆனால், ஈழத்தில் அவ்வாறு இல்லை உள்நாட்டுப் போர் காரணமாக உட்கட்டுமான வசதிகளைத் தொலைத்து நிற்கின்ற ஒரு நாடாக சிறிலங்கா காணப்படுகின்றது. தமிழ் மொழி பேசும் மக்கள் ‘நேரத்தை பல்பரிமான வெளி’ சார்ந்து நோக்குபவர்கள். தமது கடந்தகால வாழ்வு சார்ந்து எதிர்கால வாழ்வு சார்ந்து நோக்குபவர்கள். முற்பிறப்பு, மறுபிறப்பு பெறுமானங்கள் இதில் செல்வாக்குச் செலுத்தியிருக்கும்.



டென்மார்க்கில் பல ஆயிரம் ஈழத் தமிழர்கள் வாழ்கிறார்கள். இவர்கள் டனிஸ் மொழியை கற்றுக் கொண்டு, டனிஸ் கலாசாரத்துடன் தம்மை இரண்டறக் கலந்திருக்கிறார்கள். அதேவேளை தமது தனித்துவமான அடையாளத்தைப் பேணுவதற்கும் முயற்சிக்கிறார்கள். பிறந்த நாள் கொண்டாட்டங்கள் திருமண வீடுகளில் தமிழர்கள் ஒன்று கூடுகிறார்கள். கோயில்கள் கட்டி அங்கு திருவிழாக்களில் ஒன்று கூடுகிறார்கள். இதனையெல்லாம்விட சிறிலங்கா அரசுக்கெதிரான போராட்டங்களில் ஒன்றுகூடுகிறார்கள். தாம் ஒரு தனித்துவமான மொழி மற்றும் கலாசாரம் உடையோர் என்பதை இங்கு அவர்கள் அடையாளப்படுத்துவதைக் காணமுடிகிறது. தமிழ் மொழியைப் பேணுவதற்காக தமிழ் பாடசாலைகளை ஞாயிறு தோறும் நடத்துகிறார்கள். முதல் தலைமுறையினர் தவிர்ந்த அவர்களின் பிள்ளைகள் டனிஸ் மொழியையும் பண்பாட்டையும் பின்பற்றுகிறார்கள். இப்போது இந்த புதிய தலைமுறைக்கு தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் பலர் விரும்புகிறார்கள். இதனால் இங்கு சிறந்த ‘பண்பாட்டுத் தொடர்பாடல்’ விருத்தியாகியிருப்பதைக் காணலாம். இரண்டு கலாசாரங்களில் ஊடாடும் ஆற்றலுள்ளவர்களாக டென்மார்க்கில் உள்ள தமிழர்கள் விளங்குகிறார்கள்.



இந்தக் கலாசார அல்லது பண்பாட்டு தொடர்பாடல் ஆற்றலை வெளிப்படுத்துவதற்காக டென்மார்க்கின் வடபகுதியான ஒல்போக் என்ற ஒரு தொழில் நகரத்தில் வசிக்கும் ஒரு குடும்பத்தினரை விடய ஆய்வுக்காக எடுத்துக் கொண்டேன்.



பொன்னையா விக்னேஸ்வரன், அவர் மனைவி திலகவதி. இவர்களில் விக்னேஸ்வரன் 1987ம் ஆண்டு டென்மார்க்கிற்கு ‘அரசியல் தஞ்சம்’ கோரி இடம்பெயர்ந்திருந்தார். பின்னர், இவர் அங்கு வதிவதற்காகவும், தொழில்புரிவதற்காகவும் டனிஸ் மொழியைக் கற்றுக் கொள்கிறார். பின்னர் பல சிறு சிறு தொழில்களைச் செய்து தற்போது ‘கட்டுமான நிறுவனம்’ ஒன்றைச் சொந்தமாக நடத்துகிறார். 1995 காலப்பகுதியில் ஈழம் சென்று திலகவதியை திருமணம் செய்து ஒல்போர்க் அழைத்து வருகிறார். திலகவதி டனிஸ் மொழி கற்று சிறு தொழில்கள் செய்து தற்போது பல் மருத்துவ உதவியாளராகக் கற்றுத் தேறி இருக்கிறார். இவர்கள் இவருவரும் தமிழ் மொழி தவிர்ந்த ஏனைய மொழிகள் எதுவும் அறிந்திருக்காதவர்கள். ஆனால் இப்போது டனிஸ் மொழியில் பேசும் ஆற்றல் பெற்று டனிஸ் மக்களுடன் தொடர்பு கொள்கிறார்கள். இந்த ‘மொழி ஆற்றல்’ பண்பாட்டுத் தொடர்பாடலுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கிறது. டனிஸ் மக்கள் தமது நாட்டுக்கு வருபவர்கள் தமது மொழியைக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். ஏனைய மொழிகளை ‘ழவாநசள’ – பிற என்ற அடிப்படையில் பார்க்கிறார்கள்.

இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள். இவர்களுக்கு சிலான், லியான் என்று பெயர் சூட்டுகிறார்கள். இவை தமிழ்ப் பெயர்கள் அல்ல. முற்று முழுதாக டனிஸ் பெயர்கள். இதற்கான காரணமாக வின்னேஸ்வரன் குறிப்பிடுவது, ‘எனது பிள்ளைகள் நூற்றுக்கு நூறு வீதம் டனிஸ் பிள்ளைகள்’. இதனால், அவர்கள் டனிஸ் பிள்ளைகளுடன் ஊடாடுவதற்கு வசதியாக அவர்களில் இருந்து அன்னியமாகாமல் இருப்பதற்காக எமது தமிழ் பெயர்களை வைக்காமல் டனிஸ் பெயர்களை வைத்திருக்கிறோம்’ என்று குறிப்பிடுகிறார். இதேவேளை விக்னேஸ்வரன் தான் தமிழன் என்றும் தனது தாய் மொழி தமிழ் என்றும் டனிஸ் எப்போதும் தனது இரண்டாவது மொழி என்றும் குறிப்பிடுகிறார். இவர்களின் மூத்த மகன் சியானின் பிறந்தநாள் கொண்டாட்டத்தைப் பார்க்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதனை அவதானித்தபோது, வின்னேஸ்வரன் குடும்பம் பண்பாட்டு தொடர்பாடலில் மிகையாற்றல் கொண்டவர்கள் என்பதைத் தெளிவாக்கியது.



பிறந்த நாள் குறிப்பிட்ட நேரத்திற்குச் சரியாக ஆரம்பமானது. சியானின் பாடசாலை வகுப்பு மாணவர்களைப் பெற்றோர்கள் குறித்த நேரத்திற்குக் கார்களில் கொண்டுவந்து விட்டுச் சென்றார்கள். பிறந்த தினக் கொண்டாட்டம் முற்று முழுவதும் சிறார்களுடையதாக இருந்தது. விக்னேஸ்வரனும் அவரது மனைவியும் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குத் தேவையான வசதிகளை மட்டுமே செய்தார்கள். கொண்டாட்டம் எப்படி அமைய வேண்டும் என்று சிறுவர்களே தீர்மானித்தார்கள்.



டனிஸ் பண்பாட்டிற்கு ஏற்ப பிறந்தநாள் கேக் செய்யப்பட்டிருந்தது. வாழ்த்துப் பாடல் டனிஸ் வழக்கப்படி, டனிஸ் மொழியில் நிகழ்த்தப்பட்டது. கேக்கின் அருகில் டனிஸ் நாட்டுக் கொடி வைக்கப்பட்டிருந்தது. வாழ்த்துப் பாடல் முடிவுற்றதும் ஆள்வடிவில் செய்யப்பட்ட கேக்கின் தலையை சியான் வெட்டினான். மெழுகுதிரிகளை ஒரே தடவையில் ஊதி அணைக்க வேண்டும். எத்தனை மெழுகுதிரிகள் அணைக்கப்படாமல் இருக்கின்றனவோ அத்தனை எண்ணிக்கையான பெண்தோழிகள் இருப்பதாக சிறார்கள் கேலி செய்தார்கள். சியான் இரண்டு மெழுகுதிரிகளை அணைக்கவில்லை. அவணுக்கு இரண்டு தோழிகள் உள்ளனர் எனக் கேலி செய்தார்கள்.



தமிழ்ப் பண்பாட்டில் ஒரு குறித்த நன்நாளில் எல்லாமே நன்மையாக நடைபெற வேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள். டனிஸ் கலாசாரத்தில் செய்வது போன்று ஆளின் கழுத்தை வெட்டுவதாகப் பாவனை செய்யும் நிகழ்வு தமிழ்ப் பண்பாட்டின் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் நடைபெறாது.



விக்னேஸ்வரன் குடும்பம் இரண்டு பண்பாடுகளில் தம்மை ஈடுபடுத்திக் கொள்வதால் சிறந்த பண்பாட்டுத் தொடர்பாடல் மிக்கவர்களாக உள்ளார்கள். பிறந்த நாளில் டனிஸ் உணவுகளே பரிமாற்றப்பட்டன.


ஆனால், அவர்கள் தமது இரவுணவுக்காக தமிழ் பண்பாட்டின் உணவுகளான பிட்டு மற்றும் குழம்பு வகையறாக்களை தயாரித்திருந்ததையும் காணமுடிந்தது. தமிழ்ப் பண்பாட்டில் காணப்பட்ட பெண் சமையல் செய்தல், வீட்டு வேலைகளைப் பார்த்தல் போன்றதான ‘பிழையான முற்கற்பித வாதம்’ மாற்றமடைந்து, வின்னேஸ்வரனும் திகவதியும் இணைந்து உணவு தயாரிப்பில் ஈடுபட்டிருந்தார்கள்.


ஆக மொத்தத்தில் ஈழத் தமிழர்கள் தம் வாழ்வுக்கான வசதிகளைப் பெறுவதற்கான பண்பாட்டுத் தொடர்பாடல் திறன்வாய்ந்தவர்களாக டென்மார்க்கில் வாழ்க்கிறார்கள்.

No comments:

Post a Comment