Tuesday, 15 June 2010

தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்ய வேண்டியது என்ன?

ஈழத் தமிழ் அரசியல் பற்றிய நீண்ட நெடிய விவாதங்களை ஆரம்பிக்க வேண்டிய காலகட்டத்தில் தமிழ் மக்கள் இருக்கிறார்கள்.


விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்ட வீழ்ச்சி தமிழ் மக்களின் அரசியல் இயங்கு நிலையை ஒரு கையறு நிலைக்குத் தள்ளியது. இதனால், தமிழர் தம் அபிலாi~களையும் தேவைகளையும் அடைவதற்காக வாக்குகளைப் பயன்படுத்திக் கொள்வது தொடர்பான குளறுபடியான நிலைமைகள் தொடர்கின்றன.

கடந்த தேர்தலில் அதிகளவான தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை. இது தேசிய அரசியலில் அல்லது தேர்தல் ஜனநாயகத்தில் தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகின்றது. முஸ்லிம் மக்களுடன் ஒப்பிடும்போது வாக்குச் சீட்டுக்களைப் பேரம் பேசும் பலமாகத் தமிழ் மக்கள் இன்னும் கருதவில்லை என்பது தெளிவாகின்றது. இந்த நிலைமை நீடிக்கப் போகின்றதா? அல்லது படிப்படியாக தேர்தல் அரசியலுக்குள் தமிழ் மக்கள் வந்துவிடுவார்களா? வாக்குச்சீட்டை தமது தேவைகளையும் அபிலாi~களையும் நிலைநிறுத்துவதற்கான ஒரு துருப்புச் சீட்டாகக் கருதுவார்களா என்ற எழுவினாக்கள் இன்னமும் இருக்கின்றன. அதேவேளை தேர்தல் ஜனநாயகத்தை தெரிவு செய்ய வேண்டியவர்களாகவும் தமிழ் மக்கள் காணப்படுகின்றார்கள். இந்தச் சூழலில் மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாக உள்ளது. ஆயுதப் போராட்டம் வலுவாக இருந்த காலகட்டத்திலும் மக்களை அரசியல் மயப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டே வந்திருக்கின்றன.



இது சிறு குழு அழுத்தமாக அமைந்தமையும் ஆயுதப் போராட்டம் அந்த நம்பிக்கையும் இதனால் பிரதான நீரோட்டத்தில் இந்தக் கோரிக்கைகளின் புறக்கணிப்பும் தமிழ் மக்கள் ஒரு அரசியல் சூனிய வெளிக்குள் சிறைப்பட வேண்டியதாயிற்று. இன்று ஈழத் தமிழர் தம் அரசியலின் முக்கியமான பலமாகத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு காணப்படுகின்றது. கடந்த தேர்தல் வெற்றியைவிட இந்தத் தேர்தல் வெற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு ஒரு ஜனநாயகப் பெறுமானத்தை அதிகரித்திருக்கின்றது. ஷபுலிகளின் ஊதுகுழல் என்ற பெயரைத் தவிர்த்து ஜனநாயக முறைப்படி தெரிவான ஒரு தனிப்பெரும் கட்சியாக மிளிர்கிறது எனலாம். இருப்பினும் கடந்த ஆறு வருடங்களாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இருந்தது போன்று இனிவரும் ஆறு வருடங்களும் இருந்துவிட முடியாது என்பதையும் இந்தத் தேர்தல் தெளிவாக்கி இருக்கின்றது. ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாற்றத்திற்கு உட்பட வேண்டிய சூழ்நிலையில் உள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் செயல்திறன் இன்மை அல்லது ஏகபோக தனித்துவம் காரணமாக எழுகின்ற ஏதேச்சதிகாரப் போக்கு மற்றும் அசமந்தமான இயங்குநிலை தமிழ் மக்களை மேலும் அதளபாதாளத்திற்குள் தள்ளிவிடும் என்பதை மறுக்க முடியாது.

நடந்து முடிந்த தேர்தலின் போது தமிழ் தேசியவாதிகள் என்று தம்மைத் தாமே கூறிக்கொண்டவர்களாலும் புலம்பெயர்ந்த தமிழர்கள் சிலராலும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மீது முன்வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுக்களை முற்று முழுதாக அவதூறு பேச்சுக்கள் என்று கூறி புறம்தள்ளிவிட முடியாது அவற்றிற்கான பதிலிறுப்புக்கள் மிக அவசியமாகும். இந்த நிலையில் நடந்து முடிந்த தேர்தலின் வேட்பாளர் தெரிவு முறை மறுவாசிப்புக்குட்படுத்தப்பட வேண்டும். இதில் குறைகள், நிறைகள் மதிப்பீடு செய்யப்படுதல் வேண்டும். கூட்டமைப்பின் கட்சியொன்று பதினைந்து ஆண்டுகளாக யாழ். மண்ணில் இல்லாமல் இந்தியாவில் வசித்து வந்த ஒருவருக்கு இந்தத் தேர்தலில் பங்கு கொள்ள வாய்ப்பு வழங்கி இருந்தது. இது தரும் செய்தி என்ன? என்பதை நோக்குதல் வேண்டும். அதாவது கட்சிகள் முன்வைக்கும் எந்த ஒருவரையும் தமிழ் மக்கள் எந்தக் கேள்வியும் இன்றி ஏற்றுக் கொள்வார்கள் என்பதாகும். இதுவொரு தான்தோன்றித்தனமான செயற்பாடாகும். இந்த நிலைமை எதிர்காலத்தில் தவிர்க்கப்பட்டு மக்கள் பங்களிப்புடனான ஜனநாயகத் தேர்வு நடைபெற வேண்டும்.



எப்போதும் மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் போது திறந்த, வெளிப்படையான தெரிவே ஆரோக்கியமானது. எதிர்காலத்தில் கட்சித் தலைமைகள் மட்டும் வேட்பாளர்களைத் தெரிவு செய்யாது, மக்களும் மக்கள் அமைப்புக்களும் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டம்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர்காலத்தில் மூடிய தெரிவுகளைச் செய்கின்ற சிறு கட்சிகளின் கூட்டமைப்பாக இல்லாமல் மக்களின் கட்சியாக பரிமளிக்க வேண்ணடும். அதற்கான அரசியல் இயக்கம் முன்னெடுக்கப்பட வேண்டும். இது தவிர கடந்த காலங்களைப் போன்று தேர்தல் முடிந்த பின்னர் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பிலும் பிற நாடுகளிலும் தமது குடும்பங்களோடு வாழ்வதற்கு சென்று விடாமல் மக்களுடன் இருக்க வேண்டியது அவசியமாகும். பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்குக் கிடைக்கக் கூடிய இராஜதந்திர கடவுச்சீட்டை தமிழ் மக்களின் அரசியல் அபிலாi~களை வென்றெடுப்பதற்கான வெளிநாட்டுப் பயணங்களுக்கு இனிவரும் காலங்களில் பயன்படுத்துவார்கள் என்று நம்புவோம்.

தமிழ் மக்கள் ஒரு நாகரீகமான தீர்வுத் திட்டத்தை எதிர்பார்த்துக் காத்துக் கிடக்கிறார்கள். இதற்கு எப்படி பெயர் சூட்டுவது என்பது தொடர்பான விவாதங்களுக்கு மேலாக ஷதந்திரோபாயமான நகர்வுகள்
மிக முக்கியமானவையாகின்றன. உலக அரங்கில் அங்கீகரிக்கக் கூடிய ஜனநாயகம் என்ற போர்வைக்குள் அழைத்துவிடக்கூடிய சொற்பதங்களையும் படிமுறைகளையும் நன்கு நுட்பமாகத் திட்டமிட்டு விரைவாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழ் மக்களின் தீர்வு மக்களுக்கானது, மக்களது என்பது உணரப்படுவதும் உணர்த்தப்படுவதும் அவசியமானது. மக்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன என்பது பற்றிய கருத்துக் கணிப்புக்கள் நடத்தப்படலாம். அதற்கான கூட்டங்களையும் சந்திப்புக்களையும் புலமையாளர்கள் சந்திப்புக்களையும் மேற்கொள்வது அவசியமாகின்றது.

மக்களுக்கான தீர்வுத் திட்டம் இந்தியாவினாலும் அமெரிக்கா மற்றும் மேற்குலகினாலும் ஷபரிசளிக்கப்படும்
என்ற எதிர்பார்ப்பில் சிவனேயென்று இருந்துவிடாது அதற்காக முன்முயற்சிகள் எடுக்கப்படுவது காலத்தின் கட்டாயமாகின்றது.

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், சிறு கட்சித் தலைவர்களுக்கும் சட்ட வல்லுனர்களுக்கும் உரியதல்ல தமிழர்களுக்கான அரசியல் தீர்வு, அது மக்களினுடைய மக்களின் தீர்வு என்பது எப்போதும் மனங்கொள்ளப்பட வேண்டியது மக்களுக்கான தீர்வு மக்களிடம் இருந்து வரவேண்டும். தீர்வுத் திட்டத்தை தயாரிக்கின்ற போது மக்கள் அபிப்பிராயங்கள் அல்லது மக்கள் பங்களிப்பு எந்தவொரு காலகட்டத்திலும் கேட்டறியப்படவில்லை என்பது கடந்தகால வேதனையான அனுபவம். மக்கள் பங்களிப்புக்கான வாய்ப்புக்களும் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு மக்கள் ஆணையைப் பெறுவதற்கான வழிவகைகளை தமிழ் அரசியல் தலைமைகள் மேற்கொள்ள வேண்டும்.

தமிழர்களுக்கான அரசியல் தீர்வுத் திட்டம் பரம ரகசியமாக மேற்கொள்ளப்படுவதற்கு எந்தத் தர்க்க நியாயமும் இருக்க முடியாது. அது வெளிப்படையான உரையாடலுக்குரிய ஒன்றாகும். இந்தியாவும் அமெரிக்காவும் திணிக்கின்ற அல்லது திணிக்க முயல்கின்ற தீர்வுப் பொதிக்காக தமிழ் அரசியல் தலைமைகள் கைகட்டிக் காத்துக் கிடக்காமல் எமக்கான தீர்வுத் திட்டத்தை மக்கள் பங்களிப்புடன் தயாரித்துக் கொள்ளுதல் வேண்டும்.

தற்போது, தமிழ் தேசியக் கூட்டமைப்பு தன்கைவசம் வைத்திருக்கும் தீர்வுத் திட்டம் என்ன என்பது பற்றி மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும். அதன் மீதான ஆரோக்கியமான விவாதங்களை ஊக்குவிக்க வேண்டும். உதாரணமாக இணையத் தளம் ஒன்றை உருவாக்கி இணைய வழி மற்றும் மின்னஞ்சல்வழி விவாதங்களை ஆரம்பிக்கலாம்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு காலதாமதங்களைத் தவிர்த்து வெற்றிக்களிப்பு மமதைகளிலிருந்து விடுபட்டு தீர்வுத் திட்டத்தை தயாரிப்பதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.



தீர்வுத் திட்டமொன்றைத் தயாரிக்கின்ற போது தற்போது முந்திரிக் கொட்டை போன்று துருத்திக் கொண்டிருப்பது இந்திய உபகண்டத்தின் ஷபிராந்திய அரசியல் இது நிச்சயமாக இந்தியாவின் இராணுவ மற்றும் வாணிப வல்லாதிக்க நலன்சார்ந்ததாகவே எப்போதும் இருக்கப் போகின்றது. அண்மையில் தமிழ் மக்கள் பல ஆயிரம் பேரின் அழிவுக்குக் காரணமாக இந்தியா அமைந்திருந்தது என்கிற வலுவான நம்பிக்கை ஈழத் தமிழர்கள் மத்தியில் நிலவுகின்றது. இதுவொரு இந்திய எதிர்பாக பல மட்டங்களிலும் காணப்படுவதை இனங்காணலாம். இந்தச் சூழ்நிலையில் இந்தியாவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நிகழ்ச்சி நிரல் வெளிப்படையாக இருக்க வேண்டும். எதற்காக இந்தியாவுடன் தொடர்பு கொள்கிறோம்? இந்தியாவின் நிகழ்ச்சித் திட்டம் என்ன? நாம் முன்வைக்கும் கோரிக்கை என்ன? இந்தியாவிடம் எதனை எதிர்பார்க்கின்றோம்? என்பன பற்றிய தெளிவான விழிப்பு நிலை மிக மிக அவசியமாகின்றது.

மக்களுக்கு வெளிப்படுத்தப்படாத எந்தவொரு இந்தியத் தொடர்பும் இருக்க முடியாது. அவ்வாறு இருக்குமாயின் அது எதிர்காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் தற்கொலைக்கான முன்முயற்சியாகவே அமையும் எனலாம். அடுத்து முக்கியமானது தமிழ் தேசியக் கூட்டமைப்பு மக்கள் கட்சியாகப் பரிமளிப்பது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த மக்களுக்கு பணியாற்றுதல் வேண்டும். இது கடந்த காலங்களில் நடைபெறவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும். மக்கள் குறைதீர்க்கும் மையங்களை பிரதேச செயலர் ரீதியாக உருவாக்கி பணிபுரிவது பயன் தருமெனலாம்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டோர் பற்றிய தகவல்களை சேகரிப்பதற்கும், புனர்வாழ்வு தேவைகளை இனங்காணுவதற்கும் வசதியாக தமிழர் பகுதிகளில் ஷதகவல் மையங்கள உருவாக்கப்பட வேண்டும். இது தர்க்கரீதியான காரணகாரியத் தொடர்பு நிலையுடன் கூடிய பாராளுமன்ற விவாதங்களை முன்வைக்கலாம்.

தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றம் போகும் போது முன்னாயத்தம் செய்து தரவுகள் மற்றும் தகவல்களுடன் செல்வதில்லை என்ற குற்றச்சாட்டு கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டது கவனத்துக்குரியதாகின்றது. கிரமமாகப் பாராளுமன்ற அமர்வுகளுக்குப் போவதில்லை என்ற விமர்சனமும் இவர்கள் மீது உள்ளது. இந்த நிலைமைகள் தவிர்க்கப்பட்டு ஷஆரோக்கியமான அரசியல் பண்பாடு
வளர்த்தெடுக்கப்பட வேண்டும்.

தமிழ் அரசியல் சூழலில் பெண்களின் பங்களிப்பு மிக மிகக் குறைவாக இருப்பது மக்களை அரசியல் மயப்படுத்தும் பணிக்கு மிகப் பெரும் தடையாக நோக்கப்படுகிறது. இந்த நிலை தவிர்த்து பெண்களுக்காக இயங்குகின்ற பெண்கள் உருவாக்கப்பட வேண்டும். அரசியலில் பங்குகொள்ள அவர்களை ஊக்குவித்தாக வேண்டும்.

அடுத்து முக்கியமானது இன்று வடக்கு, கிழக்கில் அரசியலும் அபிவிருத்தியும் ஒன்றுடன் ஒன்று இரண்டரக் கலந்து கிடப்பதாகும். அதாவது வாக்குகளை நோக்கமாகக் கொண்ட அபிவிருத்திச் செயற்றிட்டங்களே முன்னெடுக்கப்படுகின்றன. அபிவிருத்திப் பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி பாராட்டி வாழ்த்துவதற்குப் பயன்படுத்தப்படுவதும் இங்கு நடக்கிறது. இதில் வேதனையான உண்மை என்னவென்றால் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் வடக்கு கிழக்கின் அபிவிருத்திச் செயற்றிட்டங்களுக்கும் தொடர்பறுந்து காணப்படுகின்ற நிலைமையாகும். இதற்காகப் பல காரணங்களைச் சொல்ல முடிந்தாலும் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த அபிவிருத்திச் செயற்றிட்டங்களுடன் இணைந்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தற்போது முன்னெடுக்கப்படுகின்ற அபிவிருத்திச் செயற்றிட்டங்கள் பிராந்திய அபிவிருத்தி சார்ந்தவையா? என்ற கேள்வி உண்டு. பிராந்திய வளச் சுரண்டல் சார்ந்த அபிவிருத்தியாக இல்லாமல், நீண்டு நிலைத்து நிற்கக்கூடிய அபிவிருத்தித் திட்டங்களை ஊக்குவித்தாக வேண்டும். அபிவிருத்தித் திட்டங்களை அவதானிப்பதற்கும் ஆக்கபூர்வமாக விவாதிப்பதற்கும் ஏற்றதாக ஷநிபுணர் குழுக்கள்
அமைக்கப்படலாம். பன்முக வரவு-செலவுத் திட்ட நிதிகளைப் பயன்படுத்தும் போது மக்கள் பங்களிப்புடன் முற்றிட்டம் தீட்டப்படலாம்.



மொத்தத்தில் தமிழ தேசிய அரசியல் தன்முன் பல சவால்களை கொண்டுள்ளது. இவற்றை எதிர் கொள்வதற்கு இரவும் பகலும் உழைத்தாக வேண்டும். அதற்காக ஷஇளைஞர்கள் பணிக்குழுக்கள்
உருவாக்கப்பட வேண்டும். தாயகத்திலும் புலத்திலும் நிபுணத்துவ ஆலோசனைகள் பெறப்பட வேண்டும்.

புலத்தில் இருப்பவர்களுடன் ஆரோக்கியமான தொடர்பைப் பேணி தாயகத்தில் மக்கள் நலன் சார்ந்த பணிதிட்டங்கள் ஆரம்பிக்கப்பட வேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக ஷதமிழ் தேசியக் கூட்டமைப்பு
என்ற தனிப்பெரும் கட்சி உருவாக்கத்துக்காகப் பாடுபட வேண்டும். அந்தக் கட்சியை மக்கள் தங்களது சொந்தக் கட்சியாக உணருகின்ற, உரிமை கோருகின்ற அல்லது சொந்தம் கொண்டாடும் நிலைமை உருவாக வேண்டும்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு சிறுகட்சிகளின் தளர்வான கூட்டணியாக இல்லாமல் எதிர்காலத்தில் மக்கள் சொந்தம் கொண்டாடுகின்ற தனிப்பெரும் கட்சியாக உருவாவதே தமிழ் தேசிய அரசியலின் வலுவான இயங்குநிலைக்கு உறுதியாக அமையும் எனலாம்.

No comments:

Post a Comment