Sunday, 3 April 2011

யாழ் பல்கலைகழக மருத்துவ பீடத்தை மூடாமல் காத்த பெருமை நந்தியையே சாரும்: ஆறு திருமுகன்

புதன், 30 மார்ச் 2011 23:24,
மருத்துவ உலகில் மட்டுமல்லாது கலை இலக்கிய உலகிலும் நட்சத்திரமாக விளங்கியவர் டாக்டர் நந்தி. தற்போதைய யாழ் பல்கலைகழக மருத்துவ பீடத்தினை மூடாமல் காத்த பெருமை இவரையே சாரும் என தெரிவித்துள்ளார் திரு. ஆறுதிருமுருகன்.

பேராசிரியர் நந்தியின் 84வது பிறந்த நாள் வைபவமும் புத்தக வெளியீடும் இன்று மாலை 4.30 மணி அளவில் திரு. ஆறுதிருமுருகன் தலைமையில் இந்து மாமன்றத்தில் நடந்தது.


திருமதி. நந்தியம்மாள் மங்கள விளக்கேற்ற ஆரம்பமான இந்நிகழ்விற்கு தலைமையேற்று உரையாற்றுகையிலேயே திரு. ஆறுதிருமுருகன் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்.


அவர் தனதுரையில், “மருத்துவ உலகில் மட்டுமல்லாதுகலை இலக்கிய உலகுடனும் நட்சத்திரமாக விளங்கியவர் டாக்டர் நந்தி. தற்போதைய யாழ் பல்கலைகழக மருத்துவபீடத்தினை மூடாமல் காத்த பெருமை இவரையே சாரும்.


நாம் எல்லோரும் நன்றியுடையவர்களாக இருந்தால் சமூகம் சிறக்கும். அந்த வகையிலே நந்தியும் நன்றியுடையவரே. எல்லா துறையினரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய வல்லுநர். இவரது வரலாற்றை எல்லோரும் படிக்க வேண்டும்” என அவர் தெரிவத்தார்.

இவ் நிகழ்வில் பேராசிரியர் சிவலிங்கராஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன், முன்னால் துணைவேந்தர் சண்முகலிங்கன் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.


இன் நிகழ்வின் இறுதியாக பேராசிரியர் நந்தியின் சிங்கப்பூர் டாக்டர் எனும் நாடகமும் காட்சிப்படுத்தப்பட்டது. பேராசிரியர் நந்தியின் நூல் வெளியீடும் இடம்பெற்றது. இவ்விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் நண்பர்கள் உறவினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.



















No comments:

Post a Comment