By:-தேவா
சாவுகள் மலிந்து கிடந்த ஒரு தேசத்தில் இன்று கொண்டாட்டங்கள் மலிந்து கிடக்கின்றன.நொந்த மனதுக்கு மருந்து தடவும் ஒரு சிகிச்சை முறையாகக் கருதவேண்டுமென்ற வாதங்களும் இதற்கு உண்டு.
துயரிலிருந்து மீண்டெழுந்து புதிய வாழ்வை நோக்கி பயணிக்க வேண்டும் அல்லது தொலைந்த வாழ்வை தேடிக்கொள்ள வேண்டும் என்ற முன்னோக்கு தத்துவம் ஏற்புடைய ஒன்றே.
ஆனால் எமக்காக எமது பெயரால் நடப்பவற்றையெல்லாம் நன்மையானவையென்று பேசாது வெறும் பெறுநராக மட்டும் இருந்து விடமுடியாது என்பதையும் இங்கு நாம் நோக்குதல் வேண்டும்.
உள்ளுர் கொண்ணாட்டங்கள்,தேசியக் கொண்டாட்டங்கள் என்று எமது துயர் துடைக்க நடந’;த கொண்டாட்டங்களோடு தற்போது சர்வதேசியக் கொண்டாட்டங்களும் எமக்காக நடக்க ஆரம்பித்திருக்கின்றன.இவையெல்லாவற்றையும் நாம் இன்று உலகம் ஓடிக்கொண்டிருக்கின்ற ‘காசு சம்பாதித்தல்’ என்ற இயங்கு நிலை அச்சாணியோடு பார்க்க வேண்டியதாகவுள்ளதோடு நாடுகளின் நலன் சார்ந்த செயற்பாடாகவும் பாத்தாக வேண்டும்.
தற்போது யாழ்ப்பாணத்தில் சர்வதேச நாட்டார் இசை விழா நடைபெறுகின்நது.இதனை சேவாலங்கா என்ற நிறுவனம் ஒழுங்கு செய்து நடத்துக்pன்றது.இதற்கான நிதியை நோர்வே அரசாங்கம் நேரடியாக வழங்கியிருக்கிறது.இதனோடு யு.எஸ் எயிட் நிறுவனமும் நிதி வழங்கியிருக்கிறது.கிட்டத்தட்ட இரண்டு கோடிகளுக்கு மேற்பட்ட நிதி இதற்காக செலவிடப்படுகின்றது என்று அறிய முடிகிறது.
இந்த விழாவுக்கான ஆரம்பப் பணிகள் ஆறு மாதங்களுக்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டு மிகுந்த ஊடக கரிசனையைப் பெற்றுக்கொண்டு ஊர்களில் நடத்தப்பட்டு பின் யாழ் மாநகர சபை மைதானத்தில் நடை பெறுகின்றது.
ஒதுக்கப்பட்ட நிதியில் எவ்வளவு தொகை யாழ்ப்பாணத்தில் அல்லது வடக்கு கிழக்கில் நாட்டார் இசை விருத்திக்கு பயன் படுத்தப்பட்டன என்ற ஆய்வு மிக முக்கியமாகதாகின்றது.நிச்சயமாக இந்தொகை ஒதுக்கப்பட்ட தொகையில் பத்து வீதத்துக்கும் குறைவாகவே இருக்கும் என்பதில் ஜயமில்லை.
இவ்விழாவின் நோக்கம் என்ன?என்பது தெளிவாகவும் உன்னிப்பாகவும் நோக்கப்பட வேண்டும்.
இதில் இலங்கை இனப்பிரச்சினையை தீர்பதற்காக தலையீடு செய்து மேலும் சிக்கலான துயர் நிறைந்த நிலைக்கு இட்டுச்சென்ற நோர்வே நாடு நேரடியாக களமிறங்கியிருப்பதன் பின்னணியையும் நோக்குதல் அவசியமாகும். கொழுமபுக்கான இலங்கைத் தூதுவர், நோர்வே தூதுவராலய உத்தியோகஸ்தர,;கள் முழு நேரமாக இசை விழாவில் பங்கெடுப்பது ஏன் என்ற கேள்வி இங்கு எழுகின்றது.
இரண்டாம் உலக யுத்தத்தின் பின் ஜரோப்பிய நாடுகள் தங்கள் மீள் எழகைக்கு இவ்வாறான கலை நிகழ்ச்சிகளைப்பயன் படுத்தினார்கள்.அதே தந்திரோபாய உத்தியை இங்கும் பயன் படுத்தி தமிழ் மக்களின் மீளெளிச்சியை ஏற்படுத்த முனைவதாக ஒரு வியாக்கியானம் வழங்கப்படுகின்றது.
இதில் முக்கியமானது நோர்வே மீண்டும் தன்தலையை நுழைத்து தமிழர்களின் மனதையறிவதற்கு இவ்வாறான ஒரு உத்தி முறையைப்பயன் படுத்த ஆரமபித்திருக்கிறது.இது தமிழர்கள் மீதான திட்டமிடப்பட்ட பாரிய அழிவுக்காக முகாந்தரமாக அமைந்து விடாது என்பதை மறுப்பதற்கும் இல்லை.இந்த சர்வதேச இசை விழாவென்பது நோர்வே மற்றும் அமெரிக்க புதிய தந்திரோபாயத்தின் தொடக்கப்புள்ளி இது நிச்சயமாக எமது பிரதேச நலன் சார்ந்ததாக இருக்க போவதில்லை.
சுரி,இந்த இசைவிழாவில் எமது கலைஞர்கள் பலர் தம் திறமைகளைக் காட்டியிருந்தார்கள்.நாமும் நமக்கென்றொரு நலியாக்கலையுடையோம் என்ற மஹாகவியின் வார்த்தைக்கு வலுச் சேர்த்திருக்கிறார்கள்.எமது பிரதேசத்தில் இவ்வாறானதொரு நிகழ்வு நடக்கிறது அதை நன்றாக நடத்திவிடவேண்டுமென்று ஒரு இளைஞர் பட்டாளம் இரவு பகல் உழைத்திருக்கிறார்கள்.அவர்களின் உழைப்பும் எண்ணமும் மதிக்கப்பட வேண்டும்.இவற்றிற்கு மேலாகவும் நாம் சிந்திப்பது அவசியமென்றே நினைக்கிறேன்.
இந்த சர்வதேச இசை விழாவால் விளைந்த பயன் என்ன ?செலவிடப்பட்ட தொகைப்பணத்தில் யாழ்ப்பாணத்தின் நாட்டார் இசை வளர்ச்சிக்கான எவை நடந்திருக்கின்றன?என்பதை சிந்திக்க வேண்டும்.
ஜந்து நாடுகளிலிருந்து இசைக்குழுக்கள் வந்திருக்கின்றன.அவற்றுக்கான செலவு தொகை மிக அதிகமாக இருந்திருக்குமென்பது யாபேரும் அற்pந்த ஒன்றே.இதே போல் தென்னிலைங்கையிலிருந்தும் பல குழுக்கள் வந்திருக்கின்றன முன்பு நடந்த பல கொண்டாட்டங்களுக்கும் இவ்வாறே வந்திரிருக்கின்றன. ஆதற்காக பெரும் தொகையைப் பெற்றிருக்கின்றன.ஆனால் இது வரை யாழ்ப்பாணத்திலிருந்த நாட்டார் குழுக்கள் எவையும் வெளிநாடு ஒன்றுக்கோ தென்பகுதிக்கோ இவ்வளவு செலவு செய்து அழைத்து செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டார்களா? ஏன்றால் இல்லை.வெறும் நிகழ்ச்சியாக நடைபெறும் ஒன்றைப்பார்பதால் மட்டும் நாட்டார் கலையை வளர்த்து விடமுடியாது மாறாக அவையும் சர்வதேச தரத்தில் மதிக்கப்பட வேண்டும்.இவ்வாறாக வெளிநாடுகளில் நடை பெறுகின்ற விழாக்களில் பங்கு பற்றுதல் அந்த தர நிலையின் மதிக்கப்படுவதற்கான குறியீடு.உள்ளுர் என்ற தர நிலை மனப்பாங்கு தவிர்த்து நோக்கப்படுகின்ற தூர நோக்கிருந்தால் தான் இது சாத்தியமாகும்.
நாட்டார் கலைகளை ஒரு வெட்டையில் ஓலைக்கொட்டில் போட்டு கண்காட்சிப் பொருலாக்கியிருப்பதைப் பார்க்கின்ற போது இதுவொரு என்.ஜி.ஓ திட்டமாக மட்டுமே பார்க்கப்பட்டடிருக்கிறதேயன்றி ஆத்மாத்தமான உயிருள்ள நாட்டார் கலையைப் புரிந்து கொண்டு நிகழ்த்ப்பட்ட ஒரு நிகழ்வாக புரிந்து கொள்ளப் படவில்லை என்பதை காட்டுகின்றது.கொழுத்தும் வெயிலில் வயது போன கூத்துக்காரர்களை அத்தனை உடைகளோடும் ஆடவிடுவது என்பது அந்த நாட்டார் கலையின் ஆன்மாரவைப் புரிந்து கொள்ள வில்லை என்பதையே குறிக்கிறது.
எங்கள் நாட்டார் கலைகள் வேகாத வெய்யிலில் கண்காட்சிப் பொருலாகக் கிடப்பதை சகித்துக் கொள்ள முடியவில்லை.யாரோ தீட்டுகிற திட்டங்களை நாங்கள் அப்படியே நடைமுறைப்படுத்துவதில் வருகின்ற வில்லங்கங்கள் இவை.நோர்வே போன்ற நாடுகள் எம்மை பணம் கொடுத்து உலகத்தின் முன் காட்சி பொருளாக்க முனைகின்றன.இதற்கு வலு சேர்ப்பதாக நிகழ்ச்சி ஒழுங்கமைப்பாளர்களின் கவனமெல்லாம் கலை,கலைஞன் மீது இருப்பதற்குப் பதிலாக ஊடகங்களில் இவை வரவேண்டும் என்பதிலேயே இருந்ததையும் சுட்ட முடியும்..
சுpல கலை வடிவங்கள் சடங்கோடு தொடர்புடையவை தாம் வாழும் மண்ணில் வேருண்டியவை அவற்றை மண்ணிலிருந்து பிடுங்கி வெட்டையில் கொண்டுவந்து காட்சிப்பொருளாக்கியிருப்பது நாட்டார் கலைகள் மண்ணோடு இருப்பது இவர்களுக்கு பிடிக்கவில்லையோ என்ற சந்தேகத்தையும் கிளப்புகிறது.
யழ்ப்பாணத்தில் நாட்டார் இசைத்துறை வளர்ச்சிக்கான எந்தவொரு அமைப்பம் இது வரை இல்லை அவ்வாறானதொன்றை உருவாக்குதல் பயலுள்ளதாக இருந்திருக்கும்.நாட்டார் கலை ஆய்வுக்காhன ஆய்வு மையமொன்று மிக அவசியமானதாகும்.,நாட்டார் கலைக்கான ஆவணக்காப்பகம் ஒன்றின் தேவையும் ஆண்டாண்டு காலமாக பேசப்படுகின்றன.
ஏன் இவற்றிக்கெல்லாம் மேலாக யாழ்ப்பாணத்தில் நாட்டார் கலைகளை நிகழ்த்துவதற்கான கலையகம் இல்லை.ஸருடியோ ஒன்று சகலவசதிகளோடு அவசியம் அதுவும் இல்லை.இவ்வாறான் நிண்டு நிலைக்கக் கூடிய பயன்கள் ஏதாவது இந்த சர்வதேச இசை விழாவால் கிடைக்குமென்றால் இவ்விழா உண்மையில் யாழ்ப்பாணத்தின் நாட்டார் இசைக்கு பயன் விளைத்த ஒன்றோ.இந்த கோரி;க்கைகளுக்கு கிள்ளித் தெளித்தவற்றை ஏற்பாட்டாளர் கணக்கு காட்ட மாட்டார்களென்று நம்புவோம்.
No comments:
Post a Comment