'பின் லேடன்: ஒரு பார்வை'
அல்கைதா அமைப்பின் தலைவர், நிறுவநர் என்ற வகையில் கடந்த பல ஆண்டுகளாக எல்லாருக்கும் நன்கு பரிச்சயமான பெயர் ஒசாமா பின்லேடன்.
செப்டம்பர் 11 தாக்குதலுக்குப் பிறகு மேற்குலகில் வாழும் பலரைப் பொறுத்தவரை உலக பயங்கரவாதத்தின் வடிவமாக அவர் திகழ்கிறார். ஆனால், ஏனையவர்களைப் பொறுத்தவரை அவர் ஒரு காதாநாயகன். ஜிகாத் புனிதப் போரின் பெயரால், உலகின் இரண்டு வல்லரசுகளுக்கு எதிராகப் போராடிய ஒரு உண்மையான முஸ்லிம் அவர்.
சவுதியில் கட்டுமானத் தொழில் துறையில் பிரபலமாக விளங்கும் ஒரு செல்வந்த குடும்பத்தின் ஒரு மகனாகப் பிறந்த பின்லேடன், பல வகைகளிலும் மிகுந்த செல்வச் செழழிப்புடன் வாழ்க்கையை நடத்தியவர். சவுதி அரேபிய வீதிகளில் 80 வீதமானவற்றைக் கட்டியது இந்த குடும்பத்தின் கட்டுமான நிறுவனந்தான். 52 பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் 17 வது குழந்தையாக, 1957 இல் பிறந்தவர் ஒசாமா பின் லேடன்.
பாகிஸ்தான் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டவர்
ஆனால், ஆப்கானிஸ்தானை சோவியத் ஒன்றியம் ஆக்கிரமித்த போது, முஜாஹிதீன் அமைப்பில் இணைந்து அங்கு போராடச் சென்று விட்டார் பின்லேடன். அங்கு தன்னை பின்பற்றிய அரபுக்களுடன் இணைந்துதான் பின்னாளில் அவர் அல்கைதாவை உருவாக்கினார்.
பின்னர் தனது சொந்த நாட்டுக்கு திரும்பி வந்த அவர், சவுதி ஆட்சியாளர்கள், குவைத் மண்ணில் இருந்து சதாம் ஹூசைனின் படைகளை விரட்டுவதற்காக சவுதி மண்ணில் அமெரிக்க படைகளை இடம் தரவே, அதனை எதிர்க்கத் தொடங்கிவிட்டார்.
1998 இல் அவர் அனைத்து அமெரிக்கர்களுக்கும் எதிராக போரை பிரகடனம் செய்தார்.
பொதுமக்கள் மற்றும் இராணுவ இலக்குகள் என்று வேறுபாடின்றி அனைத்து அமெரிக்க இலக்குகளும் தாக்கப்படும் என்று தனது மத ஆணையில் அவர் தெரிவித்திருந்தார்.
அதே ஆண்டில் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் அமெரிக்க தூதரகங்கள் மீது நடத்தப்பட்ட பல குண்டுத் தாக்குதல்களின் பின்னணியில் பின்லேடன் இருந்ததாகவே பரந்துபட்ட அளவில் நம்பப்பட்டது. அதற்குப் பதிலாக அதிபர் கிளிண்டனின் நிர்வாகத்தால், அவரது ஆப்கானிஸ்தான் தளத்தின் மீது நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் இருந்து அவர் உயிர் தப்பிவிட்டார். அந்த தளத்தின் மீது ஏவுகணை தாக்குவதற்கு சற்று முன்னர்தான் அவர் அங்கிருந்து வெளியேறியிருந்தார்.
2000 ஆம் ஆண்டில் ஏடன் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 'யூ எஸ் எஸ் கூல்' என்ற பில்லியன் டாலர்கள் பெறுமதியான அமெரிக்க போர்க்கப்பலில் அவரது அல்கைதா அமைப்பு ஒரு பெருந்துவாரத்தை போட்டு விட்டது.
அதன் பிறகு 2001 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 இல் பயணிகள் விமானங்களை கடத்தி நியூயோர்க்கிலும், வாசிங்டனிலும் மோதச் செய்து பெருந்தாக்குதல்களை அல்கைதா அமைப்பினர் நடத்தினார்கள். அதனை அடுத்து ஒசாமா பின் லேடனை பிடிக்க வேண்டும் என்று அப்போதைய அமெரிக்க அதிபர் புஸ் உறுதிபூண்டார்.
ஆனால், அவரது தலைக்கு 27 மில்லியன் டாலர்கள் சன்மானம் அறிவிக்கப்பட்ட போதிலும், ஆப்கானிஸ்தானில் இருந்து அவர் பாகிஸ்தானுக்கு தப்பிச் சென்றுவிட்டார். அவரை ஒரு உன்னதராக ஆராதிக்கும் மக்கள் பலைரைக் கொண்ட பாகிஸ்தானில், ஆப்கான் எல்லை ஓரமாக இருக்கும் பழங்குடியின மக்கள் அவர் மீது மிகுந்த நேசம் கொண்டவர்களாக இருந்தார்கள். இதனால், தன்னை தேடுபர்வகளை பல காலமாக அவர் ஏமாற்றி வந்தார்.
உலகிலேயே மிகவும் அதிகமாக தேடப்பட்டு வந்த நிலையில் அவர் மிகவும் அபூர்வமாக அறிக்கைகளை இணையத்தில் பிரசுரித்து வந்தார். அத்துடன் தனது அல்கைதாவின் ஆன்மீக தலைமைத்துவத்தை தன்னை ஆலோசனை கூறி வழிநடத்துபவரான எகிப்திய இஸ்லாமியவாதியான டாக்டர். அய்மன் அல் ஷவாஹிரி அவர்களிடம் பின்லேடன் விட்டுவிட்டார்.
ஆனால், மேற்குலகின் மற்றும் மிதவாத அரபு நாடுகளின் நடவடிக்கைகளுக்கு எதிரான வன்செயல்களுக்கு தன்னை பின்பற்றும் எண்ணிக்கையில்லாதவர்களை இட்டுச் சென்ற ஒருவராக, தான் இறந்த பல வருடங்களின் பின்னரும் அவர் கருதப்படுவார்.
'ஒசாமா பின் லாடன் கொல்லப்பட்டார்'
அல்கைதா அமைப்பின் நிறுவநர் ஒசாமா பின் லாடன் அமெரிக்க சிறப்புப்படையினரால் பாகிஸ்தானில் கொல்லப்பட்டார். இந்த செய்தியை அமெரிக்க அதிபர் ஒபாமா வெள்ளைமாளிகையில் அறிவித்தார்.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்துக்கு அருகில் இருக்கும் அபோதாபாத் நகரில் பெரும் சுற்றுச்சுவர்களால் சூழப்பட்டிருந்த மாளிகையில் ஒசாமா பின் லாடன் இருந்ததை அமெரிக்க உளவு அமைப்பான சிஐஏ கண்டுபிடித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமெரிக்க இராணுவத்தின் பயங்கரவாதத்திற்கு எதிரான சிறப்புப் படைப்பிரிவைச் சேர்ந்த படையினர் நான்கு ஹெலிக்கப்டர்களில் அங்கு சென்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கு நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஒசாமா பின் லாடன் தலையில் சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது. அவர் மகன் உட்பட மூன்று பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த மோதலின் போது ஹெலிக்கப்டர்களில் ஒன்று கீழே விழுந்து நொறுங்கியதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர்.
அல்கைதா தலைவரின் உடல் கடலில் அடக்கம் செய்யப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.
அமெரிக்கர்கள் குதூகலம்
ஒஸாமா பின் லாடன் கொல்லப்பட்ட செய்தியறிந்து குதூகலமடைந்த அமெரிக்கர்கள் ஆயிரக்கணக்கானோர் வெள்ளை மாளிகை முன்பாக கொண்டாடிவருகின்றனர்.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு அல்கைதாவின் தாக்குதலில் அழிந்துபோன நியூயார்க்கின் உலக வர்த்தக மையக் கட்டிடங்கள் நின்றிருந்த இடமான கிரவுண்ட் ஸீரோவில் கூடிய மக்கள் அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருப்போம் என்று சத்தியப் பிரமாணம் செய்து கொண்டு தேசிய கீதங்களைப் பாடினார்கள்.
அமெரிக்காவில் வேறு பல இடங்களிலும் மக்கள் இதுபோலக் கூடியிருந்தனர்.
அவ்வாறு கொண்டாடிய பெண்ணொருவர் கூறுகையில், ''இன்று நான் குதூகலிக்கிறேன் என்றாலும் நாளை ஏதாவது பதிலடித் தாக்குதல் வருமோ என்ற அச்சம் எனக்குள் இருக்கவே செய்கிறது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
பாகிஸ்தானுக்கு சங்கடம்
பாகிஸ்தானின் அபோதாபாத் நகரில் அந்நாட்டின் முக்கிய இராணுவப் பயிற்சிப் மையத்துக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில்தான் ஒஸாமா பின் லாடன் கொல்லப்பட்ட இடம் அமைந்துள்ளது என்பது அந்நாட்டின் அரசாங்கத்துக்கு மிகப் பெரிய இக்கட்டைத் தரும் என அவ்வூரில் உள்ள பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
தங்களுக்கு மிக அருகிலே ஒஸாமா ஒளிந்திருந்தார் என்பதை அறிந்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சியில் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹில்லாரி கிளிண்டன், ஒஸாமா பின் லாடன் மறைவோடு அல்கைதாவுக்கும், அது ஒருங்கிணைத்து நடத்துகிற பயங்கரவாதத்துக்கும் எதிரான யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக கூற முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
அல்கைதாவுக்கும் ஆப்கானிஸ்தானில் உள்ள அல்கைதாவின் கூட்டாளிகளுக்கும் எதிராக அமெரிக்கா தொடர்ந்து மோதவே செய்யும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
'உலக பயங்கரவாதத்துக்கு பின்னடைவு'
ஒஸாமா பின் லாடன் கொல்லப்பட்டுள்ளதென்பது உலகெங்கிலும் உள்ள பயங்கரவாத அமைப்புகளுக்கு மிகப் பெரியதோர் பின்னடைவாகும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
பயங்கரவாதத்துக்கு எதிர்த்துப் போராடுவதிலும் பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்பதிலும் சர்வதேச சமூகம் காட்டிவரும் மனோதிடத்தைக் காட்டுவதாக இந்தச் சம்பவம் அமைந்துள்ளதென்று பாகிஸ்தான் அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை கூறுகிறது.
ஒஸாமா பின் லாடன் கொல்லப்பட்டுள்ளதை அவர் பிறந்த நாடான சவுதி அரேபியாவும் வரவேற்றுள்ளது.
அல்கைதாவுக்கும் அவர்களது சித்தாந்தத்துக்கும் கிடைத்த பெரிய அடி இது என்று கூறி சவுதி நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
பாலஸ்தீன காஸாவில் நிர்வகம் செய்துவரும் ஹமாஸ் அரசாங்கம் பின் லாடனின் கொலையைக் கண்டித்துள்ளது. பின் லாடனை ஒரு முஜாஹித் புனிதப் போராளி என்று அது வர்ணித்துள்ளது.
Thanks to BBC

No comments:
Post a Comment