Tuesday, 17 January 2012

நாங்கள் விழிப்பாக இருக்கிறோமா...............

தே.தேவானந்த்,
பணிப்பாளர்,ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிலையம்,யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம்


கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் கல்வியறிவுடையவர் அல்லது படித்தவர் என்பது என்பது ஒருவர் எழுத வாசிக்கத் தெரிநதிருத்தல் என்பதை குறித்தது.ஆனால் இன்று படித்தவர் என்பதன் அர்த்தம் சற்று வித்தியாசமானதாகும்.அதாவது எழுத வாசிக்கத் தெரிந்திருப்பதோடு வௌ;வேறு வகையான ஊடகங்களை வெற்றிகரமாக கையாள்வதற்கும்,புரிந்து கொள்வதற்கும் வியாக்கியானிப்பதற்கும் தெரிந்திருத்தல் என்பதைக ;குறிக்கிறது.

நிறையத் தகவல்கள் வௌ;வேறு ஊடகங்கள் ஊடாக எமக்கு கிடைக்கின்றன.அவற்றிக்கிடையில் நிறைய முரண்பாடுகளும் வேறுபாடுகளும் காணப்படுகின்றன.

இன்று எமது வாழ்வென்று எதை நாம் கருதுகின்றோம் எமது நாளாந்த பழக்கங்களும் வழக்கங்களும் யாரால் சொல்லித்தரப்படுகின்றன?எதை நாம் மெய்யென்றும் யதார்த்தமென்றும் கருதுகின்றோம்?என்று சிந்தித்தோமானால் எமக்கு கிடைக்கின்ற பதில் மீடியா’ அதாவது ஊடகம்.முன்பெல்லாம் நாம் பத்திரிகையை மட்டுமே ஊடகமாக கருதிவந்திருக்கிறோம்.இதனாலேயே இதழியல்துறை, பத்திரிகைத்துறை என்று அழைக்கின்ற வழக்கத்தைக் கொண்டிருந்தோம்.ஆனால் இன்று அதிகளவில் ஊடகம் என்ற சொல்லை அல்லது பல்லூடகம் என்ற சொல்லைப்பயன்படுத்துகின்றோம்.

‘இன்று ஊடகங்கள் எதை யதார்த்தமென்று அடையாளப்படுத்துகின்றனவோ அல்லது உணர்த்துகின்றனவோ அதுவே இன்று எமது யதார்த்தமாகவும் கருதப்படுகின்றது.ஊடகத்தில் வருவதில் எந்தத்தவறும் இருக்காது.அது கேள்விகளுக்கு அப்பாற்பட்டது அதை அப்படியே நம்பி எமது வாழ்வை மாற்றிக்கொள்ள வேண்டும் அல்லது அதற்கேற்ப செயற்பட வெண்டுமென்ற எண்ணம் எம் அறிவு சார்ந்த தளத்தையும் தாண்டி மேலோங்கிpயிருக்கிறது என்பதை மறுக்கமுடியவில்லை.’

குறிப்பாக இளவயதினரும் சிறுவர்களும் ஊடகத்தால் ஆட்படுவது அதிகமாக உள்ளது.தகவல்களைப்பெற்றுக் கொள்கிறார்கள் அதே வேளை அதற்கேற்றவாறு தங்களை மாற்றிக்கொள்ள நினைக்கிறார்கள்.தான் ஊடகத்தில் பார்த்ததையும் கேட்டதையும் தன் நிஐவாழ்வில் செய்து பார்க்க விரும்புகிறார்கள்.

ஏல்லா ஊடகத் தகவல்களும் நன்கு திட்டமிடப்பட்டவைதமக்கான சொந்த நிகழ்ச்சி நிரலை கொண்டன.உலகு பற்றிய எமது புரிதலை தமக்கேற்ப்ப வழிப்படுததுகின்றன.;.ஒரு விடயம் தொடர்பான ஆலோசனையையும் அபிப்பிராயங்களையும் உருவாக்குவதில் வலுவாகவுள்ளன. இருப்பினும் ஒவ்வொரு தனி மனிதனும் ஒவ்வொரு ஊடகத் தகவலையும் தனித்துவமாகவே புரிந்து கொள்கிறார்கள்

இந்தச ;சூழ்நிலையில் ஊடகங்கள் பற்றிய விழிப்பநிலை பெற்றோர் ஆசிரியர்கள் மற்றும் இளையோர் மத்தியில் அவசியமாகின்றது.ஊடகத்தை கையாள்வது அல்லது தெரிவு செய்வது சார்ந்த அறிவை ,ஆற்றலை வழங்குகின்ற பொறுப்பு பெற்றோர்களிடமும் பாடசாலைகளிடமும் சமய நிறுவனங்களிடமும் உள்ளது எனலாம்.

இங்கு பெற்றோரின் பங்கு என்பது மிக மிக முக்கியமானதாகும்.இதற்கு பெற்றொர்களுக்கு ஊடகம் தொடர்பான அறிவு அவசியமாகின்றது.குறிப்பாக பிள்ளைகள் தொலைக்காட்சி பார்ப்பதை தடைசெய்தல்,கைபேசியை தவிர்த்தல்,கொம்பியூட்டரைத்தவிர்த்தல்,கேம்ஸ் விளையாட விடுவதில்லை என்ற தற்காப்பு நிலையை எடுப்பது புதிய யுகத்தில் இருந்து பிள்ளைகளை பிரித்து வைப்பதாக அமைந்து விடும்.அதனால் அந்த முடிவை பெற்றோர்கள் எடுக்க முடியாது’.நாங்கள்’ முந்தி ரி.வி,கைபெசி,கொம்பியூட்டரில்லாம இருந்தனாங்கள,; படிச்சனாங்கள’; என்ற வாதங்களோ,அவற்றிலிருந்து தூர விலகியிருத்தலோ இன்று சாத்தியமானவையாக இருக்கப்போவதில்லை.

ஆகவே பெற்றோர்கள் ஊடகம் சார்ந்த தமது கவனயீர்ப்பபை அதிகப்படுத்த வேண்டும்.அதற்கு என்ன செய்யலாம என்பதை சிந்தித்தாக வேண்டும்;?

பெற்றோர்கள பிள்ளைகளுக்கு எது அழகானது என்பதை பண்பாட்டின் உணர்வோடு சொல்லிக்கொடுக்க வேண்டும்.விழுமியங்களை நல்லது ,கெட்டதுகளை தெளிவுபடுத்த வேண்டும்.இது போதனையில் மூலம் சாத்தியமாவதல்ல. செயல் மூலம் சாத்தியமாகவேண்டும்.

ஒரு தமிழ் படத்தை பிள்ளையுடன் சேர்ந்து பார்க்கின்ற பெற்றோர் அதில் வருகின்ற கீழ்தரமான வடிவேலுவின் கதைக்கு விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள் அல்லது பலரை இரத்தம் சொட்டச்சொட்ட அடிக்கின்ற கதாநாயகனின் பழிதீர்த்தல் காட்சியைப் பார்த்து ரசித்து கை தட்டுகிறார் என்பதான செயல் பிள்ளைக்கு அங்கே நடப்பவை சரியென்று சொல்வதாகின்றது. மீடியாவில் எதைப் பாராட்டுகிறோம் எதை கேள்விக்குட்படுத்துகின்றோம்.எதை ரசிக்கிறோம் என்பதில் விழிப்பு அவசியமாகின்றது.பிள்ளைகளை வழிப்படுத்த முக்கியமாகின்றது.

ஊடகத்தைப் பார்த்து உணர்ச்சிவசப்படுதல்,மிகைப்படுத்தல் என்பனவற்றினை தவிர்த்து ஒரு விடயத்தை ஏற்றுக் கொள்வதற்கும் கற்றுக் கொள்வதற்கும் பிள்ளைகளை ஊக்கப்படுத்த வேண்டும்.

இன்று வளர்ந்த நாடுகளில் இளவயதினர் நித்திரை கொள்வது மற்றும் பாடசாலை செல்வது தவிர்த்து அதிகமான நேரத்தை ஏதோவொரு மீடியாவில் செலவிடுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நிலை எமது பிரதேசத்துக்கும் வெகு விரைவில் வந்து விடும்.

வுஏஇனுஏனுஃஏஊசுஃஊனு pடயலநசஇஏனைநழ பயஅநள உழளெழடநஇ அழடிடைந phழநெ இஉழஅpரவநச போன்ற ஏதோவொரு இலத்திரனியல் மீடியாவுடன் இன்று இளவயதினர் வாழ்கிறார்கள்.

இன்ரநெற் அதிகளவில் பாவிக்கிறார்கள்.தங்களது சுய விருப்பங்களையும்,விபரங்களையும் கயஉநடிழழம போன்ற சமூக வலைத்தளத்தில் போடுகிறார்கள்.

ஏல்லா வயதினருக்கும் தொலைக்காட்சியும் சினிமாவும் மிகச் செல்வாக்கு செலுத்துகின்ற ஒரு ஊடகமாக இன்றும் இருக்கிறது எனலாம்.ஒருவயதிற்கு குறைந்த பிள்ளைகள் ரி.வி பார்ப்பதும் இரண்டு வயதிற்கு குறைந்த பிள்ளைகள் ரி.வி பார்ப்பதும் அதிகரித்துள்ளது.

ரி.வி பார்ப்பது கூடிவிளையாடுதல்,சமூக ஊடாட்டம் எனபவற்றை தவிர்க்கின்றன.

ஊடகத்தில் காண்பிக்கப்படும் வன்முறை செயற்பாடுகள் அதிகளவு மனவழுத்தத்தை தருவதோடு வன்முறை விரும்பிகளாகவும் ஆக்கி விடுகின்றனஅதிகமான .சிறுவர்கள் விரும்பி பார்கின்ற ரொம் அன் nஐறி கார்ட்டுன் சிறுவர்கள் மத்திpயில் வன்முறை உணர்வை வளர்ப்பதாக ஆய்வுகள் பல வெளிப்படுத்துகின்றன.

மீடியாக்கள் மூலமாக தரப்படுகின்ற விளம்பரங்களால் புதிய யதார்த்தம் சிரு~;டிக்கப்படுகின்றது.உடல் அழகு சார்ந்த சரும நிறங்களை மாற்றுதல் சார்ந்த மிகைப்படுத்தப்பட்ட யதார்த்தத்திற்கு மாறான சிரு~;டிப்புக்களால் பலர் மன அழுத்தத்திற்கும்.வீண்சிரமங்களுக்கும் ஆட்படுகிறார்கள.; தொலைக்காட்சியிலும் சினிமாவிலும் மது அருந்துதல் ஒரு வகையான கதாநாயத் தன்மையுடன் காட்டப்படுவதும் மென்பானங்கள் அருந்தவது நாகரிகமானதாகவும் உயர்குடி அந்த~;துக்குரியதாக,இளம் பெண்களை கவருவதற்கானதாகவும் மிகைப்படுத்தப்படுவதை இளையோரும் பெரியோரும் நம்பி மன உளைச்சல்களுக்கு ஆட்படுகிறார்கள்.

ஊடகங்களின் பாவனையால் இளையோரின் உணவு பழக்கத்தில் மாற்றம் ஏற்படுவதோடு உடல் பருமன் அதிகரித்தல்,பாடசாலை அடைவு மட்டக் குறைவு,உணவில் ஒழுங்கீனம்,நித்திரையின்மை,கருத்தூன்றல் மற்றும் அவதானக்குறைவு போன்ற பிரச்;னைகளுக்கு ஆட்படவதாக பல ஆய்வுக் சுட்டிக்காட்டுகின்றன.

ஆகவே ஊடகங்கள் எம்மை ஆட்கொள்ளாவகையில் எம்மை தயார்படுத்துதல் முக்கியமாகின்றது.ஊடக அறிவுள்ள ஒருவர் தனது ஊடக பாவனையை மட்டுப்படுத்த முடியும்.நல்ல ஊடகங்களை தெரிவு செய்ய முடியும்,ஊடகத்தகவல்களை பகுத்தாய்து முடிவுசெய்யும் ஆற்றலைப் பெற முடியும்.இதன் காரணமாக ஊடகத்தின் பாதகமான தன்மையால் பாதிக்கப்படவது குறைவடையும்.

இதற்காக பெற்றோர்கள் எப்போதும் கேட்க வேண்டிய கேள்வி உங்கள் பிள்ளைகள் எவ்வளவு நேரம் ஊடகங்களோடு செலவிடுகிறார்கள்.வீட்டில் பெரியவர்களுக்கு தெரியாமல் சிறுவர்கள் ரி.வி. மற்றும் இன்ர நெற் பாவிக்கும் வாய்ப்பு உள்ளதா?

ஊடகத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள என்ன செய்யலாம்?

சிறுவர்கள் கவனமாக நிகழ்ச்சிகளை தெரிவு செய்வதற்கு ஊக்கப்படுத்த வேண்டும்.பெரியவர்களும் சிறுவர்களும் செர்ந்து ஒரு ஊடகத்தை பார்ப்பது, அதைப்பற்றிக் கதைப்பது, விமர்சிப்பது என்பன ஆரோக்கியமானவையாக இருக்கும்.

சிறுவர்கள் ஊடகங்களோடு செலவிடும் நேரத்தை மட்டுப்படுத்தலாம்.தவிர்க்க முயற்சித்தல் எதிர் மறையான விளைவுகளைக் கொடுக்கும்.நல்ல மீடியாவை மொடலாகக் காட்டவேண்டும.; பெற்றோர்கள்அதைப் பார்க்க வேண்டும்.

எப்போதும் மனிதர்களுடன் இணைந்து செயற்படுகின்ற செயற்பாடுகளை ஊக்கப்படுத்த வேண்டும்.சிறுவர்களின் வாழ்விடங்களில் இலத்திரனியல் ஊடகங்கள் இல்லாத இடங்களை அதிகளவு உருவாக்க வேண்டும்.

ரி.வி அல்லது ஏதோவொரு இலத்திரனியல் ஊடகத்தை பிள்ளை பராமரிப்பக்கருவியாக பயன் படுத்துவதை தவிர்க்க வேண்டும்.குறிப்பாக இரண்டு வயதிற்கு உட்பட்ட பிள்ளைகள் அதிக நேரம் ரி.வி பார்ப்பதை தவிர்க்க வேண்டும்.அவ்வாறு பார்க்கின்ற பிளளைகளின் மொழி வளர்ச்சியும் மூளை வளர்ச்சியும் குறைவாக உள்ளதாக ஆய்வுகள் சுட்டுகின்றன.எப்போதும் சிறு பிள்ளைகள் பெற்றோர்கள் மற்றும் உறவுகளுடன் ஊடாடுவதே வளரசச்pக்கு உதவும்.

ஊடகங்களில் இருந்து நம்மை பாதுகாத்தலென்பது மிகப்பெரிய பணி அதனை தினம் தினம் விழிப்போடும் அறிவோடும் இருந்தே சாதிக்க முடியும்.பாடசாலைகளில் ஊடக விழிப்புக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்படுதல் சிறந்த ஆக்க பூர்வமான விளைவைப்பெற ஒரு வாய்ப்பாக அமையும்.கல்வியாளர்களும் கல்வித்திணைக்களமும் இதற்கான ஆக்க பூர்வமான பணிகளை முன்னெடுக்க வேண்டும்.



No comments:

Post a Comment