இலங்கையின் நாடக வரலாற்றில் மிக முக்கியமான ஒரு விடயமாகவும் திருப்பமாகவும் புதியதாக சீன நாட்டின் நிதியுதவியுடன் அமைக்கப்பட்ட நாடகக் மேடைகளைக் கொண்ட கட்டடத்தொகுதி அமையப்போகிறது.
மிகப்பிரமாண்டமாக 3080 மில்லியன் ரூபா செலவில் 2.7 ஏக்கர் பரப்பளவில் அதிநவீன வசதிகளுடன் கூடியதாக இந்த கட்டடத் தொகுதி அமைந்திருப்பதும் ஜந்து மாடிகளைக் கொண்டதாக 14000சதுர அடி பரப்பளவில் 1288 இருக்ககைகளையும் திறந்த வெளி மேடைகள் இரண்டையும் ஒரே நேரத்தில் மூன்று நிகழ்ச்சிகளை நடத்தும் வசதி கொண்டதுமென்பது ஆச்சரியத்தையும் வியப்பையும் தருகின்றது.
பொலறுவையில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தாமரைக்குள வடிவில் அமைந்துள்ள இந்த கட்டடம் அழகுடன்; புது கட்டட வடிவமைப்போடு காணப்படுவது வியப்பைத்தருகின்றது.
இந்த பிரமாண்டங்களுக்கு சொந்தக்காரர்கள்’ இலங்கை தமிழ்,சிங்கள நாடக உலகைச் சார்ந்தவர்கள’; என்று நினைக்கின்ற போது பேரானந்தமாக இருக்கிறது.அதில் நாங்களும் ஒருவர் என்கின்ற போது எமது மகிழ்ச்சிக்கு அளவேது!
நான் கடந்த இருபது ஆண்டுகளாக நாடகத்துறையுடன் இணைந்து செயற்படுகின்றவன்.நாடகத்துறையில் பல்கலைக்கழக பட்டத்தையும் பெற்றுக் கொண்டுள்ளேன்.ஆனால் இத்தனை காலமாக நான் கொழும்பில் நாடகங்களைப்பார்க்கும் வாய்ப்பையோ நாடகங்களை மேடையேற்றும் வாய்ப்பையோ பெற்றுக் கொண்டதில்லை.முயன்று தவறலாக நிறைய நாடகங்களை வௌ;வெறு மோடிகளில் செய்து பார்த்திருக்கின்றோம்.பல்வேறு இடங்களில் மேடையேற்றியிருக்கிறோம்.அதன் மூலம் கிடைத்த அனுபவங்கள் மிகப்பெரியவை.அப்போதெல்லாம் நாம் பேசிக்கொள்கின்ற ஒரே விடயம் நாடகம் போடுவதற்கு ஏற்றதான நல்லதொரு மேடை வேண்டுமென்பதாகும்.
இலங்கை வடபுலத்தில் நாடக மேடையேற்றத்துக்கான மேடைகள் இல்லையென்றே கூறலாம்.குறிப்பாக யாழ்ப்பாணத்தில் எண்பதுகளின் முற்பகுதிகளில் மிக அடிப்படையான வசதிகளுடன் காணப்பட்ட வீரசிங்க மண்டபத்தில்;; மேடையேற்றிய நாடகங்களுக்கு பாவித்த ஒளியமைப்புக்கள் இன்று வரை அற்புதங்களாகத் தெரிகின்றன.அவற்றை மீள நினைந்து மகிழ்ந்திருக்கிறோம்.அந்த அற்ப வசதியையும் போர் தின்று விட நாம் தீ பந்தங்களின் ஒளியின் உணர்வில்’ உயிர்த்த மனிதர் கூத்து’ நாடகம் போட்டது நினைவுக்கு வருகின்றது.’உயிர்த்த மனிதர் கூத்து’ நாடகம் மேடையேற்ற மேடைகள் தேடியலைந்தது நினைவிருக்கிறது.யாழ்ப்பாணப்பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கும் சுண்டிக்குளி மகளிர் கல்லூரியின் மண்டபமும் ஓரளவுக்கு நாடகங்களை மேடையேற்ற உகந்த மேடைகள் என்று குழந்தை ம.சண்முகலிங்கம் போன்ற தமிழ் நாடக விற்பனர்கள் அடிக்கடி கூறுவது என் காதில் இன்றும் ரீங்காரிக்கிறது.இவையெவற்றிலும் அடிப்படை ஒலி,ஒளியமைப்பு வசதிகளெவையும் இல்லையென்பது குறிப்பிடவேண்டியது.எதிரொலி பிரச்னையுடைய மண்டபங்களுக்கு என்ன செய்வதென்று திகைத்து நின்றிருக்கிறோம்.
சரியான நாடக மேடையை காணவில்லையென்றதற்காக நாடகம் போடாமல் இருந்ததில்லை அவ்வாறு இருந்தால் ஆடத்தெரியாதவன் மேடை சரியில்லையென்று சொல்லுகிறானென்று கேலி செய்திருப்பார்கள.; ஊரிலும் தெருவிலும் பள்ளிகளிலும் கிடைத்த வெளிகளையெல்லாம் நாடக மேடையேற்றத்துக்கான வெளியாக மாற்றுவதற்கு எங்கள் உடல் பொருள் ஆவியை நிறையவே செலவிட்டிருக்கிறோம்.
இப்போது மின்சார வசதியுடன் இயங்கும் அசையும் மேடை ,சுற்றிச் சுழலும் கீழும் மேலுமாக அசைக்கும் வசதி. தேவைக்கேற்ப்ப உருவங்களையும் காட்சிகளையும் நொடிப்பொழுதில் மாற்றியமைக்க முடியுமென்ற வசதியுடன் கூடிய நாடக மேடையேற்றத்துக்கான கட்டடத் தொகுதியொன்றைப்பார்க்கின்றபோது மகிழ்ச்சியாக இருக்கிறது.
இனமத பேதமின்று நாமெல்லோரும் நாடகத் துறைசார்ந்த வளர்ச்சிக்கான வாய்ப்பை வரவேற்;க வேண்டும்.இந்த உந்துதலின் விளைவாக தமிழர் பகுதிகளின் நாடக பயிற்சிகள்,மேடையேற்றங்கள்; எதிர்காலத்தில் சர்வதேச தரத்தில் அமையும் என்று நம்பலாம.;.நிறைய தமிழ் நாடகங்கள் இவ்வாறான மேடைகளுக்காகவும் தயாரிக்கப்படவேண்டும்.அதற்கான வாய்ப்புக்கள் அதிகளவில் கிடைக்கப்பபெறவேண்டும்.அதிநவீன பிரமாண்டங்கள் சிறிய கலைஞர்களுக்கும் சிறிய குழுக்களுக்கும் கிடைப்பதற்கான ஏதுநிலைகள் அதிகரிக்கப்படுதல் வேண்டும்.அப்போது தான் இந்த கட்டடத் தொகுதி தமிழ் மற்றும் சிங்கள நாடகத்துறையின் வளர்ச்சிக்கும் அவற்றுக்கிடையிலான கொடுக்கல் வாக்கலுக்குமான மையமாக அமையும் வாய்ப்பைப் பெறும்.அவ்வாறான வாய்ப்புக்களுக்கும் வளர்;ச்சிகளுக்குமான எமது மனமார்ந்த வாழ்த்துக்கள் என்றும் உரித்தாகும்.
No comments:
Post a Comment