Challey check point Germany |
1991/1992 களில் இளையோருக்கான அரசியல் வகுப்புக்கள் ஆங் கா ங்கே யாழ்ப்பாணத்தில் நடைபெற்று வந்நதது.அவற்றுக்கு செல்லும் வழங்கமுடையவனாக இருந்தேன்.இந்த வகுப்புக்களை யாழ்ப்பாணக்கல்லூரியின் அரசியல் ஆசிரியர் திரு குமாரவேல் நடத்தியிருந்தார் என்று நினைவிருக்கிறது.
அப்போது யாழ்ப்பாணத்தின் டச்சுக் கோட்டையை விடுதலைப்புலிகள் கைப்பற்றியிருந்தார்கள். கோ ட்டையின் பின்பக்கத்தில் அடைக்கப்பட்டிருந்த ஒரு வழியை உடைத்து உள்ளிருந்த படையினர் வெளியேறி மண்டைதீவு இராணுவத்துடன் இணைந்து கெண்டதாக அறியப்பட்டது.கோட்டை கைப்பற்றல் கரந்தடி தாக்குதல் என்று வர்ணிக்கப்பட்டாலும் அது ஒரு மரபு வழிப்பட்ட தாக்குதலாகவே இருந்திருக்கிறது.பசிலன் பெயரால் தயாரிக்கப்பட்ட குண்டுகள். கோ ட்டை கைப்பற்றுதலுக்கு உதவியதாகவும் கூட சொல்லிக்கொண்டார்கள்.அது நிற்க இந்த அரசியல் வகுப்புக்கு வருவோம்.
கைப்பற்றப்பட்ட கோட்டை உடைக்கப்பட வேண்டும் என்ற கருத்தை ஆசிரியர் முன்வைத்தார்.400 ஆண்டுகள் தமிழர்களை அடிமைப்படுத்திய சின்னம் இனியும் இருக்கக் கூடாது என்பது தான் அவர் சொன்ன முக்கியமான விளக்கமாக அமைந்தது.அப்போது கிழக்கு (Germany)ஐர்மனியையும் மேற்கு ஐர்மனியையும் பிரிப்பதற்காக அமைக்கப்பட்ட பேர்லின் சுவர் உடைக்கப்பட்டிருந்தது.அதை ஒரு உதாரணமாக சொல்லிய ஆசிரியர் ஐர்மனியை துண்டாடிய அந்த சுவர் எவ்வாறு உடைக்கப்பட்டதோ அதே போல இந்த டச்சுக்கோட்டையும் உடைக்கப்படவேண்டுமென்று குறிப்பிட்டார்.தமது பிரிவினைக்கு வித்திட்ட சுவரை இடித்த மக்கள் அதன் கற்களில் ஒன்றை எடுத்தச் சென்று தமது வீடுகளில் வைத்திருக்கிறார்கள்.அதே போல அடிமைச்சின்னமாக இருந்த கோட்டை வீழ்த்தப்பட்டுள்ளது .அதனை அழித்து அந்த வெற்றியை நினைவுபடுத்துவதற்காக அதன்கற்களை வீடுகளில் வைக்க வேண்டும் என்றார்.
இதன் பின்னர் விடுதலைப்புலிகளால் கைதிகளாகப் பிடிக்கப்படுபவர்களால் கோட்டை சிறுகச்சிறுக இடிக்கப்பட்டது.தற்போது மீண்டும் டச்சு அரசாங்கத்தால் இந்த அடிமைச்சின்னம் மீண்டும் புனர்நிர்மாணம் செய்யப்படுகிறது .நாம் அடிமைப்படுத்தப்பட்டோம் என்பதால் போலும்.
எதிர்காலத்தில் அடிமைச்சின்னத்தைப்பார்க்க அடிமைப்படுத்தியவர்கள் சுற்றுலா வருவார்கள்.நாம் அவர்களுக்கு சுற்றுலா வழிகாட்டிகளாகவும் சுண்டல் விற்பவர்களாகவும் இருக்கப்போகிறோம்.அது போகட்டும்!
இந்த அரசியல் வகுப்புக்களின் பின்னர் Germany பற்றியும் இரண்டாம் உலக யுத்தம்,கிட்லர்,பேர்லின்சுவர் இவை பற்றி ஆங்காங்கே கிடைக்கின்ற போது அறிந்து கொண்டுடிருக்கிறேன் அந்த இடத்தை பார்க்க வேண்டுமென்று ஆர்வப்பட்டிருக்கிறேன் கனவு கண்டிருக்கிறேன்.
எனது கனவு 2010 ஐனவரியில் நனவாகியது Germany தலைநகர் பேர்லினில் உள்ள பேர்லின் யுனிவர்சிற்றிக்கு எனது மனைவி செல்லும் போது குடும்பமாக இ ணைந்து கொண்டோம்.அப்போது இலத்திரனியல் ஊடத்துறையில் உள்ளகப் பயிற்சிக்காக டென்மார்க்கில் இருந்தேன்.ரெயிலில் பயணித்து ஒரு உறை பனிக்காலத்தில் பேர்லின் சென்றோம்.
அங்கு போன அலுவல் முடிந்ததும் கிழக்கு Germany யையும் மேற்கு Germany யையும் பிரித்து அமைக்கப்பட்ட பேர்லின் சுவரின் ஒரு பகுதியை எம்மைப்போன்றவர்கள பார்ப்பதற்காக வைத்திருக்கிறார்கள்.அதோடு முன்பு இரண்டு Germany களிலும் இருந்த சோவியத் காவலரன் நேசநாட்டு காவலரன்களின் மாதிரிகளையும் அங்கே வைத்துள்ளார்கள்.போலியான ராணுவமும் கூட அங்கு உண்டு.அவர்களோடு நின்று ஒரு யுரோ கொடுத்து ஒரு படம் எடுத்துக் கொள்ளலாம்.எங்கெல்லாம் படமெடுக்க முடியுமோ அங்கெல்லாம் படமெடுத்துக் கொண்டோம்.கிடைத்தற்கரிய சந்தர்ப்பம் அது.
No comments:
Post a Comment