யாழ்பாணத்திற்கு பயணிக்க வேண்டும் என நீண்ட நாள் கனவு அது திரு. தேவானந்த் அவர்களால் நிறைவேற்றப்பட்டது. திரு தேவானந்த் அவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் முன்னாள் இதழியல் மாணவர். கடந்த இரண்டு ஆண்டுகளாக யாழ்பாண மாணவர்களுடன் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் ஊடக வளங்கள் மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் சென்னை பல்கலைக்கழக இதழியல் துறைக்கு வருகை தருவார்;;. அவர் படித்த காலகட்டத்தில் துறையில் ‘முற்றம்’ எனும் நாடகக்குழுவை துவக்கிவைத்தவர்;.ஒரு குழந்தை. திறைமையான நாடகக் கலைஞர்,எதிர்வினைகளை சிந்திக்கும் ஆற்றல் உடையவர் மிகவும் சாதுவானவர், சாது மிரண்டால் நாடு கொள்ளாது எனும் பொருளுக்கு அர்த்தம் உடையவர்.
நான் பயணித்த அந்த நாள் என் வாழ்நாளில் மறக்கவே முடியாது நவம்பர் 27,2011,மண்ணில் விதிக்கப்பட்ட புரட்சி சோலைகளின் திருநாள். கனத்த பாதுகாப்புக்கு ஆட்பட்டு பயணித்து வருவது எதற்க்கு இந்த பயணம் என சிந்திக்கவைத்தது. என் துறைத்தலைவர் பேரா.ரவிந்திரன் என் பயணதிற்க்கு உறுதுணையாக இருந்தார்..
என்னை நானே சோதனை செய்து கொண்டபயணம். ஒவ்வொரு கால் தடமும் கவனமாக பதித்து நடக்கவேண்டும் என கற்றுக்கொண்டேன். யாழ்பாணத்தில் பல்வேறு விஷயங்கள் எனக்கு வியப்பாக இருந்தது. உடனே ஏற்றுக்கொள்ள முடியாத சோதனையும், பாதுக்காப்பும் உண்டு. ஒரு மகிழ்ச்சியை கொண்டாட முடியாத, சுகதுக்கங்களை பகிர்;ந்து கொள்ளமுடியாத, வீட்டில் பிள்ளைகளை தனியே விட்டு செல்லமுடியாமல், எங்கு பார்த்தாலும் மௌன பாதுகாப்பை கண்;டு மனம் தளர்ந்தேன்.
படிக்கின்ற பொழுதே சமயத்தை சார்ந்துதான் படிக்க வேண்டும் என அறிந்தேன், மதங்களின் பெயர்களில் பள்ளிகள் செயல்பட்டாலும் வெள்ளை சீருடை சமசீராக இருப்பதை காண முடியும். வெள்ளை அன்னப்பறவைகள்; போல மிதிவண்டியில் வரும் மாணவர்கள், அழுகு மழலை தமிழ் சொற்கள் என் மனதில் நீங்கா நினைவுகள் கொண்டவை. சங்கீத கீர்தனைகள் உட்புகுந்ததால் ஒரு சில கலைகள் மட்டும் தான் நம் கலைகள் என நினைத்துக்கொண்டு. தன்னை தானே சமாதான படுத்திக்கொண்டார்கள் இம்மக்கள் என முடிவு செய்தேன்.
திரு. தேவா அண்ணன் அவர்கள் என்னை பொறுத்தமட்டில் தான் நினைத்த விசஷயங்களை நிறைவேற்ற தனக்குள்;ளே எண்ணங்களை அசைப் போடும் உளவியல் விஞ்ஞானி. காலத்தி;ற்கு ஏற்ப தன்னையும், பிறரையும் சுழற்றி போடும் அறிவொளி. எனக்கு தெரிந்த தேவானந்த் இலைங்கைகாரர், நாடக நடிகர் என மட்டும் தான்;. ஆனால் நாடகத்தில் நாடக உருவாக்கதில் திறம்பட செயல்படுபவர் என முழுமையாக தெரிந்துகொண்டேன் அதற்;;கு சான்று ஏராளம். அவருடைய நாடக அனுபவம் என்னுடைய வயது என்று சொல்லலாம். பாசமான குடும்ப சூழல், ராம் சகோதரர்கள் தன் பிள்ளைகளை வளர்க்க, கலைகளை கற்று கொடுக்க தவறியவர் அல்லர்.
என் கலைப்பயணத்தில் செயல் திறன் அரங்க இயக்கம்.
இந்த கலைப்பயிற்சியை ஏற்பாடு செய்ய நீண்ட நாட்களாக என்னிடதில் பேசியிருப்பார், கவனமும், கடின உழைப்பும், தொடர்பியலும் அவருக்கு உற்ற தோழர்கள். நாடக பயணத்தில் 35 நாடகங்களை இயற்றி அரங்கேற்றம் செய்திருக்கின்றனர்;. திறம்பட செயல்படும் மாணவர்கள் அவரோடு இருக்கின்றனர்.
அவர்கள் நிகழ்த்தி காட்டுவதற்கு நான் முன்மாதிரியாக இருந்திருக்கவேண்டும் ஆனால் என்னை விட ஆர்வமாக கற்றுக்கொண்டு, சிறப்பாக செயல்பட்டனர். அதற்கு தேவா அண்ணனின் கண்டிப்பும், மாணவர்களின் உழைப்பும் தான் காரணம், ஒரு நாளுக்கு மூன்று பயிற்;சி நேரங்களை செயல் பட செய்தது செயல் திறன் அரங்க இயக்கம். காற்று உள்ள போதே துற்றிக்கோள் என்பதற்கு இவர்கள் விதிவிளக்கல்ல.
யாழ்பாண செயல் திறன் அரங்க மாணவர்களும், தொடர்பியல்துறை மாணவர்களும் என்னை சோதனை செய்தார்கள் என்று கூட சொல்லலாம். நான் கற்று கொடுத்ததை கற்றுக்கொண்டு புதிதாக ஒரு வடிவத்தை என்னிடம் எதிர்பார்தார்கள்;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;. நானும் அள்ளி அள்ளி பருகவேண்டிய அமிழ்தமடா என அடுத்த நடனவடிவத்தை கற்று கொடுத்தேன். ஒரு மணி நேரத்தில் ஒரு ஆட்டவடிவத்தை கற்றுக்கொடுக்கும் அளவிற்;கு நான் அவர்கள் இடத்தில் பயிற்சி பெற்றிருக்கிறேன்….
என்னை நான் நாள் முழுக்க பயிற்;சியில் ஈடு படுத்திக் கொள்ள முடிவு செய்த அனுபவம் உண்டு. உடல் சோர்வுகள் வந்தாலும் என் சகாகளின் ஆர்வம் என்னை புத்துனர்ச்சியாக்கியது. யாருக்கு என்ன சொல்லி தர வேண்டும் என மனக்கணக்கும் போடவைத்தது இப்பயணம் தான். நாளை என்ன சொல்லித் தருவது என சிந்திக்க தூன்டியது புதிய தேடலை உருவாக்கியது. நான் ஒருவன் வாசிக்கும் பறை இசைக்கு 15 நபர் ஆடுவது என்னை 10 நபர் பலம் கொண்டு பறையை வாசிக்க தூன்டியது.
2003ல் நான் பறை பயிற்சியி;ல் ஆடிய பொழுது வாசிக்கத் தெரியாமல் பறையை கிழித்து விட்டேன் அந்த வருத்தம் தான் ஒரு பறையை உருவாக்க தூன்டியது. ஆனால் ;யாழ்பணத்தில் ஒரு மேடைக்கு ஒரு பறை கிழிந்தது என் அனுபவ குறைவும், பறை கிழிந்ததும் என் மனநிலை தடம்புரண்டதையும் என்னால் உணரமுடிந்தது. என் மனதில் அந்த நினைவு காலதிற்;;கும் மறையா வடுவாக இருக்கும். பல்வேறு என்ன ஓட்டங்கள் மனதில் ஓடிக்கொண்டிருக்க மனதை ஒருமுகப்படுத்த தவறியவன் நான்.
கலைக்கு தடையேதும் கிடையாது என்பது உண்மை முதலில் பறையை தொடுவதற்;கு தயங்கிய சகாக்கள், பின் ஆர தழுவிக் கொண்டார்கள் இது எனக்கு கிடைத்த வெற்றி அல்ல என் இசைக்கு கிடைத்த நெடும்பயணம். என் பாடலைக் கேட்டு அனைவரும் அழுதும், பாராட்டியதும், சிறந்த பாடகராக இல்லை என்றாலும் பாடலை சிதைக்காமல் இருக்க வேண்டும் என உறுதிக் கொண்டேன். இதுதான் நான் பாடிய தாயின் பாடல் வரிகள் உங்களை கவர்ந்ததா, இல்லை என் தடித்த குரல் உங்களை கவர்ந்ததா என கேட்க வைத்தது.
தேவா அண்ணனின் தாய் என் பாடலை கேட்டு கண்கலங்கியவர். சிலருக்கு தனியே பாடிகாட்டிய அனுபவமும் உண்டு. உதயன் ஊடகத்தில் “ஆதித்தமிழனின் தப்பு இசை யாழ் மண்ணில்” என தலைப்பிட்டு அனைவரையும் என் பக்கம் திரும்பிபார்க்க வைத்த அண்ணன் பிரேம் அவர்களின் அரவனைப்பும் கிடைத்தது..
நெடும்பயணம்
கலைத்துறையில் நெடும்பயணத்தை,பல்வேறு சாதனை முயற்;சிகளை செயல் திறன் அரங்க இயக்கம் செய்து வருகின்றது. மூர்த்தி சிறிது என்றாலும் கீர்த்;தி பெரிது என்று சொல்வார்கள். அதுபோல் செயல்திறன் அரங்க இயக்கத்தை ஒப்பிடமுடியும். இன்னும் வளர்ச்சி அடையும்.
பறை இசைக்கு மகுடம் சூட்டிய இயக்கம் அதன் இயக்குநர் திரு. தேவானந்த் அவர்கள். யாழ்பாணத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் கைலாசபதி கலை அரங்கில் ஆசிரியர்கள் கலாசாலையில் நம் தமிழர்களின் பாரம்பரிய கலை வடிவங்களை நிகழ்;திக் காட்டச் செய்திருக்கிறார்.3000-க்கும் மேற்பட்ட மாணவர்கள், பேராசிரியர்கள், பொதுமக்கள்; சிந்தனையாளர்கள் இந்நிகழ்வை கண்டார்கள்.
வந்தான் சென்றான் என்று இல்லாமல் என்னை உலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டியது “செயல்திறன் அரங்க இயக்கம்”, இதழியல் துறையும் தான். கலைகளை மீட்டுருவாக்கம் செய்யும் பணியை செயல்திறன் அரங்கம் செய்து வருகின்றது தொடர்ந்து செய்யும். இன்னும் பல்வேறு முயற்;சிகளை மேற்க்கொள்கிறது, வெற்றி வாகையும் சூடும். கலைகாற்றோடு கலக்கவில்லை, கண்ணீரோடும் கரையவில்லை நம் ரத்த நாலங்களில் ஒடிக்கொணடிருக்கின்றது என்பதை உணருங்கள். கலைக்கு நாம் அடிமை அல்ல, கலை நமது அறிவாயுதம். ஒரு நாட்டின் முதல் போராளி கலைஞர்கள் என மாவோ சொல்லியிருக்கிறார்.
கலையை வளர்க்க முன்வாருங்கள் அப்படி இல்லை என்றால் வீட்டுவிடுங்கள் பின்பு வரும் தலைமுறை இப்பணியை செய்யும் வளர்க்;கவில்லை என்றால் கூட பிரவாயில்லை அழிக்காமல் இருங்கள். தமிழன் தனக்கு கிடைத்த ஒவ்வொரு பொருளையும் தனக்கு அயுதமாக பயண் படுத்திகொண்டவன்.
இக்கலைகளை பண்பாட்டு அடையாளமாக நிலைநிறுதுங்;கள். இப்பணிக்கு நான் சார்ந்த சென்னை பல்கலைகழ இதழியல் துறையின் சார்பிலும், ஆதி தமிழர் விடுதலை இயக்கத்தின் சார்பிலும், முற்றம் குழுவின் சார்பிலும் என் நெஞ்சார்ந்த வாழ்துக்களையும் வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
யாழ் நகரில் சரித்திரம் படைக்கவைத்த
மக்களின் அவா!
என்னை மடமாக்கியதும் இந்த
மண் தான்!
என் மனநோகச் செய்ததும் இந்த
மண் தான்!
No comments:
Post a Comment