Tuesday, 21 February 2012

யாழ் பல்கலையில் ஆண்டாண்டு காலம் ராக்கிங் எதிர்த்து ஓர் மாட்டு வண்டில்


வண்டியை ஓட்டுபவர் ஒரு ஆயுள் வேத டாக்குத்தர் அவர் வண்டியோடுவது இங்கு வியப்பான விடயம்.

ஏன் என்ற கேள்விகளை நிச்சயம் கிளறிவிடும் ?ஆம் அவர் இந்த சிவலை மாடு  இழுக்கிற ஒற்றக்கரத்தை வண்டியை ஒட்டிச்சென்றது மிகச் சுவார்சியமான வரலாற்று நிகழ்வு.


அதை விபரிப்பததற்கு முன்னம் இந்த மாடும் வண்டியும் யாருக்கு சொந்நத மென்பதை விளக்கி விடவேண்டுமென்று நினைக்கிறன்.

1994ம் ஆண்டு ஊரெழு கணேசா மகாவித்தியாலயத்தில் தொழில்கல்வி ஆசிரியராக இருந்த உரும்பிராயைச ;சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது தான் இந்த மாட்டு வண்டி.நண்பன் ஒருவர் மூலமாக கிடைத்த தொடர்பு.



நாம் பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கு வண்டில் வேண்டுமென்று கேட்டு ஒரு மாலைப்பொழுதில் அவர் வீட்டு வாசலில் நின்று கேட்டோம் .’ஏன்?’ என்று கேட்டார் ‘பல்கலைக்கழகத்துக்குள் சைக்கிள்ள சென்றால் காத்துத்திறந்து விடுகிறாங்கள் வால்கட்டையும் பிடுங்குறாங்கள்.கேட்டா சைக்கிள விட்டுட்டு நடந்து போ என்று சொல்லுறாங்கள.ராங்கிங் பிறிட்டில அவங்கள் சொல்லுறபடி கேட்க வேணுமாம்.எங்களால உந்த அடிமைச்சிந்தனைக்கு அடங்கேலாது என்று சொன்னம்.வால்கட்டைய பிடிஙகி;ப்போட்டாங்கள்.

என்ன ஏதென்று போய்கேட்டா பல்கலைக்கழக நிர்வாகம் சொல்லிப்போட்டுது தாங்கள் ஒன்றும் செய்ய ஏலாதென்று.அது தான் நாங்கள் இனிமேல் வால்கட்டை இல்லாத வாகனத்தில வாரதெண்டு சொல்லிப்போட்டு வந்நதனாங்கள்.உங்கட மாட்டையும் வண்டிலையும் தாங்கோ பல்லைக்கழகத்திற்கு கோண்டு போட்டு வாறம்’என்று கேட்டம்.உடன வாத்தியார் சொன்னார் ‘தம்பிமார் என்ர பிள்ளையள் ஒன்றும் கம்பஸ{க்கு போகாதுகள் என்ர வண்டில் மாடாவது கம்பஸ{க்கு போய் வரட்டும் கொண்டு போங்கோ’.மனிசன் நல்ல முசுப்பாத்திக்காரன்;.

ஏங்களுக்கு வண்டில் ஓடத் தெரியாது எங்கட அரியாலை ஆயுள் வேத வைத்தியர் பாஸ்கரன் எங்களோட நாடகங்கள் செய்யிறவர் துணிஞ்ச கட்டடை தான் வண்டில் ஓடி வாரனென்று சொல்லத் தான் இந்த ஐடியா வேலை செய்ய ஆரம்பிச்சது.அவர் வண்ணடில் ஓடி வர நாங்கள் சைக்கிள்களிலில ஓடி வந்து நாச்சிமார் கோயிலில வண்டிலக்கட்டினம்.இரவு மாட்டுக்கு சாப்பாடு போடுற வேலை நண்பன் சங்கரிட்ட கொடுத்துட்டு வீடுகளுக்கு வந்து சேர்ந்தம்.

உண்மையில என்ன நடந்ததென்றால் நான் 1991 தொடக்கம் நாடக ஈடு பாடு காரணமாக உயிர்த்த மனிதர் கூத்து என்ற நாடகத்தை நடிக்க பேப்பர் விளம்பரம் பார்த்து நாடக அரங்கக் கல்லூரி என்ற ஒரு அமைப்பில் போய்சேர்ந்தம்.நாடகம் ஒரு வருஷமா போட்டம்.நாளடைவில அது ஒரு நாடகக் குழவா நாடக அரங்கக்ளல்லூரிக்க நிலைச்சு நின்றுது.பல நாடகங்கள் களப்பயிற்சிகள் செய்தம். பிறகு அதுக்க வந்த மூன்று பேருக்கு நாடகத்தை ஒரு பாடமாக கொண்டு யஃட எடுக்கிற ஐடியா வர.விண்ணப்பிச்சுப்போட்டு கடைசி இரண்டு மாதமும் பணிக்கர் வளவில இருந்த சிதம்பரநாதன் சேர் வீட்டில அஞ்ஞாத வாசம் இருந்து படிச்சு மூன்று பேரும் கம்பஸ{க்கு போனம்.அப்ப சிதம்பரநாதன் சேர் தான் எல்லாத்துக்கும் உந்து சக்தி அவர் சொல்லுற சமூக மாற்றம் அதற்கான அரங்கு இதுகளைப் பற்றி நிறைய கதைக்கிறது வாசிக்கிறது என்று திரிஞ்ச காலம்.கொஞ்சம் முத்தல்களா வில்லங்கமான சிந்தனையோட 1994 நவம்பர் கம்பஸ{க்க போறம்.முதல் மாதம் ராங்கிங் சினியர் சொன்ன படி கேட்க வேண்டும்.முடியுமானவரை அவர்களுக்கு அடிமையா அவர் சொல்வதை செய்ய வேண்டும்.;அவர்கள் கட்டைளையிட்டால்  ஆடை துறந்து உடலைக்காட்டி அவர்கள் முன்னால் சுய இன்பம் காணவேண்டும் அது எழுதப்படாத சட்டம்.எப்பிடி இதை ஒத்துக் கொள்வது .ஒரே வார்த்தை ‘முடியாது’,சீனியரை மதிக்காட்டி படிக்கேலாது.அடிப்பாங்கள் நோட்ஸ் எடுக்கேலாது.’என்ன சொன்னாலும் ராங்கிங் வாங்க முடியாது.’அப்ப அன்ரி ரக்கரா இருக்கப் போறீங்களா?’இல்லை நாங்கள் நாங்களா இருக்கப்போறம’.விளையாட்டு கலை நிகழ்ச்சி எதிலையும் பங்கு பற்ற விடமாட்டம்’முடிஞ்ச வரை வெருட்டினார்கள்.புலி வாலுகள் வெருட்டுறது போல .

நாங்களும் கொண்டது விடேல்ல.அன்ரி ரக்கர்களா வலம் வந்தம்.அது பொறுக்காமல் எங்கட சைக்கிள காத்துத் திறந்து விட்டார்கள்.பரவாயில்லையே!காத்தடிச்சு மீண்டும் சைக்கிள் ஓடிப்போனோம்;.பொறுக்க வில்லை சீனியர்களுக்கு.வால்கட்டையை புடிங்கினார்கள்.மார்சல் அலுவலகம் சென்று முறையிட்டோம்.பாவம் பொருந்தாத பதவியில் உட்காந்து கொட்டாவிவிடுபவர்.ஏதோசொல்லி சமாளித்து சீனியர்கள் சொல்லும் இடத்திலேயே சைக்கிள விடுங்கோ அது தான் பாதுகாப்பானதென்றார்.’முடியாது’ நாங்கள் சைக்கிள் ஓடி வந்து எமக்கான விரிவுரைகள் நடைபெறும் கட்டிடங்களுக்கு அருகில் உள்ள தரிப்பிடத்தில் தான் நிறுத்துவோம். ஏன்றோம் ‘அப்படியென்றால் எங்களால ஒன்றும் செய்ய முடியாது’என்றார் அந்த மார்சல்.சரி நாங்கள் இனிமேல் வால்கட்டையில்லாத வாகனத்திலதான வருவோம்.அது உங்கட இஸ்ரம் என்றார்.பாவம் புரியாமல்.

வந்ததும் வராததுமா நாளைக்கு வண்டில்ல போவம் என்றேன்.நண்பன் கிரி அதிர்ந்து போனான்.பின்னர் ஒருவாறு ஒத்துக்காண்டு. வண்டில் மாடு எடுத்து வந்தோம்.எந்த அடிப்படையில் புது முக மாணவர்கள் வண்டிலில் போக முடியும் நண்பர் சங்கர் என்னிடம் கேட்டான்.பல்கலைக்கழக கை நூலை எடுத்து காட்டினேன் ஒரு மாணவன் எந்தவொரு வாகனத்திலும் பல்கலைக்கழகத்து வர முடியும்.அப்படியாயின் நாங்கள் மாட்டு வண்டிலில் பல்கலைக்கழகம் செல்வது சட்டப்படி செல்லும்.

காலையில் விஞ்ஞான பீட மாணவன் வள்ளுவன் பல்கலைக்கழக வாசலில் நின்று தங்கள் மாணவர் அமைப்பின் தேவைக்காகத் தான் வண்டில் வருவதாக சொல்ல வாயிற்காப்போர் வண்டிலை உள்நுழைய விட்டனர்.வண்டில் உள்ளுழைந்ததும் காத்திருந்நத நாங்கள் இருவரும் ஓடிச்சென்று வண்டிலில் ஏறி நின்ற படி விரிவுரை மண்டபத்தக்குள் செல்கிறோம்.

தொடரும்………..;

No comments:

Post a Comment