Saturday, 25 February 2012

யாழ்பல்கலையில் அப்துல் கலாம் கையொப்பமிட்ட முதலாவது பதிவேடு


Dr.A.P.J Abdukalam writing,Photo by Thevananth

யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் ஆரமபிக்கப்பட்டு 35 வருடங்களுக்கு மேலாகிறது.மிக நெருக்கடியான சூழ்நிலைகளுக்குள்ளாக இந்தப்பல்கலைக்கழகம்       பயணித்திருக்கிறது.பல பெரியோர்களை சமூகத்துக்கு தந்திருக்கிறது.இந்த  வரலாறுகள் பதிவுகளாக்கப்படவில்லையென்பது வேதனைக்குரியது.இந்த பல்கலைக்கழகத்தின் வெள்ளிவிழாக் கொண்டாட்டங்களின் போது இவ்வாறான வரலாற்று பதவுகள் வெளிவந்திருக்க வேண்டும் மாறாக அது வெறும் கொண்டாட்டமாகவே முடிந்து போனது.

பல்கலைக்கழகத்திற்கு பல அறிஞர்களும் பெரியோர்களும் வந்து போயிருக்கிறார்கள் அதற்கான பதிவுகள் எவையும் இல்லை.குறிப்பாக டழப டிழழம இதுவரையில் பேணப்படவில்லை.இந்த சூழ்நிலையில் கடந்த ஐனவரி மாதம் 2012ம் ஆண்டு 23ம் திகதி யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்திற்கு விஐயம் செய்த இந்திய முன்னாள் ஐனாதிபதி டாக்டர் A,P.J அப்துல் கலாம் தனது கையொப்பத்துடன் ஒரு விருந்தினர் பதிவேடு புத்தகத்தை  முதல் முதல் ஒப்பமிட்டு ஆரம்பித்து வைத்தார்.அதனை புகைப்படமெடுக்கும் வாய்ப்பு எனக்கு கடைத்தது.அதனை நான் என்வாழ்நாளின் பேறாகக் கருதுகிறேன்.

No comments:

Post a Comment