Monday, 9 January 2023

தங்கத் தட்டில் வைத்து எனக்கு தலைமைப்பதவி தரப்படவில்லை ‘ஜெ


தேவநாயகம் தேவானந்த்

தமிழ்நாட்டு திராவிட அரசியல் நீரோட்டத்தில் புதிய கிளை நதியை உருவாக்கியர் எம.ஜி.ஆர். எம்.ஜி.ஆர். திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு வந்தவர். அதே போல ஜெயலலிதாவும் திரைத்துறையிலிருந்து அரசியலுக்கு வந்தவர். ஏம்.ஜி.ஆர் புரட்சித் தலைவர் என்று அழைக்கப்பட்டார். பன்னர் அவரது வாரிசான nயைலலிதா புரட்சித் தலைவி என்று அழைக்கப்பட்டார். இருவரும் தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். இருவரும் முதல்வராக இரக்கும் போதே உயிர் நீத்தார்கள். இருவரும் அப்பலோ மருத்துவமனையில் அனுமகிக்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்கள். ஜெயலலிதா 75 நாட்கள் அப்பலோவில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தமையை நவீன அறிவியல் படு கொலை என்று அறிவியலாளர்கள் கருதுகிறார்கள்.



மருத்துவத்துறையின் அத்தனை உயர் தொழிலநுட்பங்களும் இந்தப்படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு தலைவர்களும் டிசம்பர் மாதத்தில் உயிரிழந்திருக்கிறார்கள். இருவரும் ஒரே இடத்தில் அடங்கம் செய்யப்பட்டார்கள். இருவரும் மக்களிடையே மிகவும் செல்வாக்கு பெற்றிருந்ததோடு இந்திய அளவில் புகழ் பெற்ற தலைவர்களாகவும் விளங்கினார்கள்.

எம்.ஜி.ஆரின் வாரிசாக ‘புரட்சித்தலைவி’ என்ற பெயருடன்  ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை  ஆரம்பமாகிறது.
ஆனால் அவர் முதலில் திரைத்துறையில் ‘அம்மு’ என்ற பெயரில் தான் பிரபல்யம் அடைந்தார்.

ஆனால் ‘அம்மு’ என்ற பெயர் ஜெயலலிதாவின் தயார் அவரை அழைத்த பெயர். புpன்னர் அவருக்கு மிக நெருக்கமானவர்கள் மட்டுமே அந்தப் பெயரை பயன்படுத்துவதாக இருந்தது. ஒரு காலத்தில் அ.தி.மு கட்சியில் அடிக்கடி உச்சரிக்கின்ற ஒரு பெயராக ‘அம்மு’ இருந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் ஏந்த ஒரு கூட்டத்திலும் எம்.ஜி.ஆர் ‘அம்மு எங்கே ?’ என்று கேட்கத் தவறுவதில்லை. இதனால் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் கிசுகிசுக்களுக்கும் பஞ்சமிருந்ததில்லை.

 இது பற்றி 1989ம் ஆண்டு தொலைக்காட்சியொன்றிற்கு ஜெயலலிதா அளித்த பேட்டியில் தனது நிலைப்பாட்டை மனந்திறந்திருந்தார்.
தனிப்பட்ட மனிதராக எம்.ஜி.ஆர் எப்படிப்பட்டவர்? என்று பேட்டியெடுத்தவர் கேட்ட போது அதற்கு ஜெயலலிதா “மிகுந்த அக்கறையும்இ இரக்கமும் உள்ள மனிதர் அவர். எனது அம்மாவுக்குப் பின்இ என் வாழ்க்கையில் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பியவர் அவர் தான்.” ஏன்றார். அதே தொலைக்காட்சிப் பேட்டியில் நீங்கள் எம்.ஜி.ஆரை காதலித்தீர்களா? அவர் மீது காதல் இருந்ததா? என்று கேட்கப்பட்ட போது “ அவரைச் சந்தித்த அனைவரும் அவரை காதலித்திருக்கிறார்கள் என்று தான் நான் நினைக்கிறேன். கவர்ந்திழுக்கும் ஆளுமையல்லவா அவர்“ என்று எம்.ஜி.ஆர் இறந்த பின்னர் அவர் அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.
ஒரு தமிழ் அக்கிரகாரத்துப் பெண்ணாக அடக்க ஒடுக்கமாக இருந்த ஒருவர் பின்னர் ஆணாதிக்கம்மிக்க சமூகத்தில் தலைவியாக இருந்து ஒரு இரும்புப் பெண்ணாக வர்ணிக்கப்பட்டிருக்கிறார். ஆண்களை தன்காலில் விழவைக்கும் அளவிற்கு அவரது ஆளுமை இருந்திருக்கிறது. இந்த ஆளுமை மிகுந்த போராட்டங்களின் பின்னரே கிடைத்தது எனலாம். 23 வயதில் தன் தாயின் இழப்பு தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துக்கள் கவனத்தில் கொள்ளத்தக்கன. “கண்ணைக் கட்டி காட்டுக்குள் விடப்பட்ட ஒரு சிறு குழந்தையைப் போலஇ திணறிப்போனேன். அதை அப்படித்தான் சொல்ல வேண்டும். அம்மாதான் என்னுடைய முழு உலகமும். அவர் என்னைப் பாது காத்தாரே தவிரஇ வேறு எதையும் எனக்கு சொல்லித் தரவில்லை.எனக்கு குடும்பத்தை நிர்வகிக்கதெரிய வில்லை. மிகுந்த அப்பாவியான குழந்தை ஒன்றை கண்ணை கட்டி காட்டுக்குள் விட்டு விட்டதை போல தான் உணர்ந்தேன்.” ஏன்கிறார்.
ஆனால் பின்னர் 1989-ஆம் ஆண்டு காலட்டத்தில் அதிமுகவினர் அவரை 'மேடம்' என்று அழைத்தார்கள். புpன்னர் அரசியல் வட்டாரங்களில் செல்வி ஜெயலலிதா என்று விளிக்கப்பட்டார். இநதப் பெயர் பல இந்தியத் தலைவர்களால் குறிப்பிடப்படுவதாகவும் பத்திரிகையாளர்களால் விளிக்கப்படுவதாகவும் இருந்திருக்கிறது. இதனைவிட ‘தங்கத் தாரகை’ , ‘ஜான்சி ராணி’  ‘காவேரி தந்த கலைச்செல்வி’ என்ற பட்டப்பெயர்களாலும் ஜெயலலிதா அழைக்கப்பட்டார்.

ஆனால், இவற்றையெல்லாம் விட ‘அம்மா’ என்ற பெயரே நிலைத்துவிட்ட பெயராகும். அது அவரின் உண்மையான பெயர் போல மக்கள் மனங்களில் நிலைத்து விட்டது. அவரது பல திட்டங்களுக்கு ‘அம்மா’ பெயர் சூட்டப்பட்டது. ஏழை எளியவர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட அம்மா உணவகங்கள் மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றிருந்தன. இதனால் அரசுத் திட்டங்களுக்கு தனது சொந்தப் பெயரைச் சூட்டி சுயவிளம்பரம் தேடிக்கொள்கிறார் என்ற விமர்சனங்களும் அவர் மீது வைக்கப்பட்டன.

இந்த அம்மா என்ற ஸ்தானத்தை தான் அடைவதற்கு மிக மோசமான பாதை வழியாக ஜெயலலிதா பயணிக் வேண்டியிருந்தது. ஆ.தி .மு காவுக்குள் சந்தித்த பிரச்சினைகளும் கருணாநிதியுடன் ஏற்;பட்ட தொடர்ச்சியான முரண்பாடுகளும் அவரை சிறந்த பெண் அரசியல்வாதியாக மாற்றியிருக்கின்றது. தனது வளர்ச்சி பற்றி தானே வியந்து கொண்டிருக்கிறார்.
“கண்டிப்பாக. இப்போது நீங்கள் பார்க்கும் இந்தப் பெண் இல்லை நான். எப்போதும் இப்படியான பெண்ணாக இருந்ததில்லை. அதிக கூச்ச முடையஇ அன்னியர்களை சந்திக்க விரும்பாதஇ மற்றவர்களால் கவனிக்கப்படுவதை அறவே வெறுத்த பெண் நான். அரசியல் எனக்கு பிடிக்கா விட்டா லும்இ நான் ஒரு வெற்றிகரமான அரசியல் தலைவர் என்று மக்கள் கூறுகிறார் கள். என்னை பார்த்து நானே ஆச்சரியப் பட்டிருக்கிறேன்.”
தான் விரும்பாத இரண்டு துறைகளுக்குள் நுழைந்து அவற்றின் உச்சி வரை சென்று தமிழ்நாட்டு மக்கள் மனங்களில் நீங்காத இடம்பிடித்துக் கொண்ட பெண் அரசியல் தலைமை அரசியலுக்கு வந்த வரலாற்றைப்பார்க்கலாம்.
1989ம் ஆண்டு எம்.ஜி.ஆர். மறைவை தொடர்ந்து நெடுஞ்செழியன் தற்காலிக முதல்வராக பொறுப்பேற்கிறார்.. நிரந்தர முதல்வராக தானே போட்டியிடப் போவதாகவும் அறிவித்தார் அதை ஆர்.எம்.வீரப்பன் ஏற்றுக்கொள்ளவில்லை. எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளை முதல்வராக்கப் போவதாக அவர் அறிவித்தார். இதனால் அதிருப்தி அடைந்த நெடுஞ்செழியன் ஜெ. வுடன் இணைந்தார்.
நெடுஞ்செழியன்இ திருநாவுக்கரசர் இபண்ருட்டி ராமச்சந்திரன்இ  கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் இஅரங்கநாயகம் போன்ற ஜெ. வின் ஆதரவாளர்கள் ஒன்றுகூடி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக ஜெ.வை தேர்ந்தெடுத்தனர். இதை ஜானகி ஆர்.எம்.வீ. போன்றோர் கடுமையாக எதிர்த்தனர். அந்த நேரத்தில் அ.தி.மு.க.எம்.எல்.ஏ. க்களில் 98 பேர் ஜானகிக்கும் 29 பேர் ஜெ.வுக்கும் ஆதரவளித்தனர்.
1988 ஜன. 7ல் ஜானகி முதல்வராக பதவியேற்றார். மேலும் 3 வாரத்தில் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு கவர்னர் குரானா அறிவித்தார். 62 இடங்கள் வைத்துள்ள காங். ஆதரித்தால் ஆட்சி நீடிக்கும் என முடிவு செய்த ஆர்.எம்.வி. நடிகர் சிவாஜி கணேசன் மூலம் ராஜீவுக்கு துாது விட்டார். ஆனால் பிளவு பட்ட அ.தி.மு.க.இவை ஆதரிக்கப்போவதில்லை என ராஜிவ் கூறிவிட்டார் ஜெ. அணிக்கும் அதே பதிலை சொன்னார். ஜன. 28ல் சட்டசபை கூடியதும் ஜானகி- ஜெ. அணிகளுக்கிடையே அமளி ஏற்பட்டது. ஆட்சி கலைக்கப்பட்டது. பின்  ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.
பின் 1989ல் சட்டசபை தேர்தல் வந்தது.அ.தி.மு.க. இரண்டு பிரிவுகளானதால் இரட்டை இலை சின்னம; முடக்கப்பட்டது. ஜானகி அணிக்கு இரட்டைப்புறா சின்னமும் ஜெயலலிதாவிற்கு சேவல் சின்னமும் ஒதுக்கப்பட்டது. ஜெ. அணி 27 இடங்களில் வென்றது. ஜானகி அணிக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது. ஜெ. முதன்முறையாக எம்.எல்.ஏ. ஆனார். தேர்தல் தோல்விக்கு பொறுப்பெற்று ஜானகி தனது பிரிவை ஜெ. அணியுடன் இணைத்தார். பின் ஒன்றுபட்ட அ.தி.மு.க.வின் பொதுச்செயலர் ஆனார் ஜெ. இரட்டை இலை சின்னத்தையும் மீட்டார். அப்போது தலைமையேற்ற ஜெ. எம்.ஜி.ஆரின் புகழுக்கு சிறிதும் குறை ஏற்படாமல் 27 ஆண்டுகள் கட்சியை கட்டுக்கோப்பாக நடத்தி ஐந்து முறை ஆட்சியிலும் அமர வைத்தார். எம்.ஜி.ஆரை போலவே மக்களிடமும் தொண்டர்களிடமும் அழியாப் புகழ் பெற்றார்.
அரசியல் ஆசான் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார் ஜெயலலிதா. ஒரு முறை கூறுகையில் 'கட்சியைப் பொறுத்த வரையில் எம்.ஜி.ஆர். சொல்வதுதான் கொள்கை. அவர் எண்ணங்களைத்தான் நான் மேடைகளில் பேசுகிறேன். அவர் நினைப்பதையே நான் பிரதிபலிக்கிறேன். எந்த மாதிரி சூழ்நிலையிலும் எம்.ஜி.ஆர். தலைமைக்குக் கட்டுப்பட்டே இருப்பேன். நம்பிக்கைக்குரிய தொண்டராகவே எப்போதும் இருப்பேன்.' என்றார்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வந்த ஜெயலலிதாவின் அரசியல் வாழ்க்கை எந்தவொரு சினிமாக்கதையை விடவும் அதிக திருப்பங்களையும் சிக்கல்களையும் கொண்டதாக அமைந்திருந்தது. அவரை எப்போதும் புயல் தாக்கியிருக்கிறது. ஆனால் அவரது முகம் எப்போதும் ஒரே உணர்ச்சியை வெளிப்படுத்துவதாகவே இருந்திருக்கிறது.
” ஏன்னுடைய உணர்வுகளை எனக்குள்ளேயே வைத்துக் கொள்கின்றேன்.அதை யாருக்கும் வெளிப்படுத்துவதில்லை.பொது இடங்களில் நிதானமிழப்பதில்லை. அழுவதில்லை என்னுடைய உணர்வுகள் என்பது காட்சிப்படுத்துவதற்கல்ல என்பதில் உறுதியாக இருக்கிறேன்” என்று ஒரு பேட்டியில் குறிப்பிடுகின்றார்.
எம்.ஜி.ஆர் இறப்பின் பின்னர் கட்சியைப் பொறுப்பெடுத்து மக்கள் தலைவியாக பரிணமித்தார். அது பற்றி அவர் தெரிவித்த கருத்து இங்கு முக்கியமானது. “ எம்.ஜி.ஆர் அவர் தான் என்னை அரசியலுக்கு  அழைத்து வந்தார் என்றாலும், அந்தப்பாதையை அவர் என்ககு எளிதாகத் தரவில்லை. ஏன்னை யாரும் தலைப் பொறுப்பிற்கு உருவாக்கவில்லை”  இந்தக் குறிப்பின் மூலம் ஜெயலலிதா பல விடயங்களை குறிப்புணர்த்துகிறார். தானே போராடி தானே தலைமையைப் பெற்றுக் கொண்டதை வேதனையுடன் குறிப்பிடுகிறார். ‘தனக்கு தங்கத் தட்டில் வைத்து தலைமைப்பதவி தரப்படவில்லை’ என்பதை அடிக்கடி வலியுறுத்தியிருக்கிறார்.
இந்தக் கூற்று எமக்கு ஒரு விடயத்தைத் தெளிவாக்குகிறது. உலகின் முதல் பெண் தலைவியான சிறிமாவோ பட்டாரநாயக்கா தனது கணவன் உருவாக்கிக் கொடுத்த அதாவது தங்கத்தட்டில் வைத்துக் கொடுத்த தலைமைப்பதவியையே வகித்திருக்கிறார். சிறந்த தலைவரான முன்னால் இந்தியப்பிரதமர் இந்திரா காந்தி நேரு தங்கத்தட்டில் வைத்துக் கொடுத்த பதவியையே வகித்திருக்கிறார். புhகிஸ்தானின் பெனாசிர் பூடு;டோ மியான்மரின் ஆங்சாங்சூகி பங்களாதேசின் காலிதா சியா இலங்கையின் சந்திரிக்கா போனறோர் தந்தையர்கள் தங்கத் தட்டில் வைத்துக் கொடுத்த தலைமைப்பதவிகளையே வகித்தார்கள். ஜெயலலிதா ஒருவர் தான் அரசியல் பரம்பரை சாராது தலைமைப்பதவிக்கு வந்தவர். அது மட்டுமல்லாமல் ‘அம்மா’ என்ற நாமததோடு மக்கள் தலைவியாகவும் மக்கள் மனதில் வாழ்கிறார்.
தமிழ்நாட்டு அரசியலில் ஜெயலலிதாவிற்கும் கருணாநிதிக்குமான மோதல்கள்; முக்கியமானவை அவை தமிழ் நாட்டின் அரசியல் போக்கை தீர்மானித்த சுவாரசியமான சம்பவங்கள் அவை பற்றி அடுத்த தொடரில் பார்க்கலாம்.                        (தொடரும்)

No comments:

Post a Comment