Sunday, 1 January 2023

‘பொன் விளையும் பூமியிலிருந்து வெளியேறு’ என்ற குரல் அடங்கியது.


- சமூகப்பணியாளர் அமரர் எஸ்.பரமநாதன் பற்றிய குறிப்பு

தலைவர் அரசசார்பற்ற நிறுவனங்களின் இணையம்
‘மக்கள் சேவையே மகேசன் சேவை’   என்று மக்கள் பணி செய்து கிடந்த அமரர் எஸ்.பரமநாதனின் இழப்பு ஈடுசெய்ய முடியாதது. தனது பணி ஓய்வுக்காலத்திலும் ஓயாது உழைத்தவர். தமது பக்கபலமான ஒரு தோழனைஇ சக பணியாளனை இழந்த துயரில் சமூகப்பணியாளர்கள் பலரும் உள்ளார்கள்.அவர்களோடு நாமும் துயருகி;றோம். வையத்துள் வாழ்ந்தவர்களில் சிலரே அவர்களின் இறப்பின் பின்னரும் போற்றப்படுகிறார்கள். தாமும்இ தமது குடும்பமும் என்று சிவனே என்று கிடக்கின்ற இன்றைய எமது சூழலில் அமரர் பரமநாதன் மகத்தானவர், போற்றப்பட வேண்டியவர்.



எமது மக்கள் கையறு நிலையில் இருந்த யுத்த காலகட்டத்தில் குறிப்பாக தொண்ணூறுகளில் மக்கள் பிரச்சனைகளை வெளிக்கொண்டு வருவதற்கு குரல்கள் இல்லை என்றதான நிலைமையில் மக்கள் குரல்களாக ஒலித்தவர்களில் பரமநாதன் ஐயா முக்கியமானவர். அவரது ஆங்கிலப்புலமையும்இ பன்முக அறிவும் அவரை ஒரு தலைசிறந்த மக்கள் குரலாளனாக உயர்த்தியிருந்தது எல்லோருக்கும் தெரியும்.
தனது காணியும்இ வீடும் கொல்லன்கலட்டியில் உயர்பாதுகாப்பு வலையத்துக்குள் அகப்பட்டு சிதைந்து போவதையும் வலிவடக்கு முழுமையும் ஆக்கிரமிக்கப்பட்டு அழிந்து போவதையும் தாங்காது  துடித்தவர். அதனை விடுவிப்பதற்காக அவர் நடத்திய போராட்டங்கள் எண்ணிலடங்காதன. அவர் நிலவிடிவிப்புக்காக எழுதிய கடிதங்கள் ஒவ்வொன்றும் எமது வரலாற்றைக் கூறும் ஆவணங்கள். அவை பேணப்பட வேண்டும்.  உரத்து உணர்ச்சி தளும்ப அரசாங்கத்துடனும்இ சர்வதேச சமூகத்துடனும் குறிப்பாக இராணுவத்தினருடனும்; அவர் நடத்திய விவாதங்களும்இ சண்டைகளும்இ அவரதுகணீரென்ற குரலும் இன்றும் எங்கள் மனங்களில் நிழலாடுகின்றன.
தன்னலம் கருதாது தன்னால் முடியாததாயினும் மக்களுக்கு உதவியவர். வடக்கின் நில ஆக்கிரப்பிப்புகளுக்கெதிராக அவர் நடாத்திய ‘யுத்தம்’ எப்போதும் எம் புருவங்களை உயர்த்தியிருக்கிறது.
அமரர் பரமநாதன் ஐயா கனவு கண்டார். தனது பிறந்த மண் ஆக்கிரமிப்பிலிருந்து விடுபட வேண்டுமென்று கனவுகண்டார். அதற்காகப் போராடினார். சில வெற்றிகளையும் கண்டார். அவருக்கு மேலும் கனவுகள் இருந்தன. எமது மூதாதையர்களின் சமாதிக் கோவில்கள் நிறைந்து கிடக்கின்ற கீரிமலையை இந்துப்பண்பாட்டின் பிரந்தியேகமான மையமாக்க வேண்டுமென்று வேணவாக்கொண்டிருந்தார்.
கீரிமலையில் கட்டப்பட்டிருக்கின்ற ஐனாதிபதி மாளிகை அங்கிருக்கக் கூடாதென்று குரல்கொடுத்தார். அந்தக்கட்டிடத்தை மையமாகக் கொண்டு ஒரு இந்துப்பல்கலைக்கழகம் வரவேண்டும் என்று பலதரப்பட்டவர்களுக்கும் அழுத்தம்கொடுத்தார்.
அவரது கனவுகள் நனவாக பொது அமைப்புக்களும்இ மேலும் பலரும் ஒன்றிணைந்து போராடுவது தான் அவரின் சமூகப்பணிக்கு நாம் செய்யும் பணியாக அமையும்.
பரமநாதன் ஐயாவின் குரலின்றி எந்தவொரு சிவில் சமூகக்கூட்டமும் சிறப்பெய்தாது.  அவர் கருத்துக்கள் கூட்டத்தை சிறப்புச் செய்தன. அவர் குரல் இனி எந்தவொரு கூட்டத்திலும் ஓலிக்காது என்று எண்ணுகின்றபோது நெஞ்சு கனக்கிறது.
யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனங்களோடு கடந்த கால் நுற்றாண்டுகளுக்கு மேலாக நெருங்கிய தொடர்புடையவராக திகழ்ந்தவர் அமரர் பரமநாதன் அவர்கள். வடபுல தமிழர் வாழ்வியலோடு நீண்ட தொடர்பை  அரசாசர்பற்ற நிறுவனங்களும்இ அதன் ஒருங்கிணைப்பு மையமாக விளங்குகின்ற இணையமும் விளங்குகின்றது. 1995 பாரிய இடம்பெயர்வின் பின்னர் சமூக நிறுவனங்கள் இயங்க முடியாத ஒரு துயரமான சூழல் காணப்பட்டது. இந்தக்காலகட்டத்தில் துயருறும் மக்களுக்கான சேவையை வழங்குவதற்கான வளங்களைத்திரட்டுவது, அரச அதிகாரிகளுடன் இணைந்து மக்கள் பணியாற்றுவது, இராணுவக்கெடுபிடி மத்தியில் மக்கள் பணியாளர்களைக் காப்பாற்றுவது, அடைபட்டுக் கிடந்த யாழ்ப்பாணத்தின் நிலைமைகளை வெளியுலகிற்குத் தெரியப்படுத்தி  மக்கள் துயரங்களைக் குறைப்பதற்கான வழிவகைகளைக் கண்டு; கொள்வது என்று தலைக்கு மேல்கிடந்த பெரும்சுமையைத் தாங்கிய பல தன்னார்வத் தொண்டுப்பணியாளர்களி;ல் பரமநாதன் ஐயாவும் ஒருவர். யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனத்தை 1996 தொடக்கம் 1998 வரையான காலகட்டத்தில் வழிநடத்தியர். ஒரு நிறுவனப் பண்பாட்டின் பாதுகாவலனாக இருந்து அந்த நிறுவனத்தை பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கையளித்தவர்.
இவரது காலகட்டத்தில் இவர் வெளியிட்ட யாழ்மாவட்ட நிலவர அறிக்கைக்காக பல வெளிநாட்டு உயர்ஸ்தானிகராலயங்கள் காத்திருந்தன. அது ஒரு நடுநிலைமையான நிலவர அறிக்கையாகப் பார்க்கப்பட்டது. இவர் சமாதானத்துக்காகவும் பணியாற்றியிருந்தார். பேரணிகள் நடத்த முடியாதஇ சந்திரிக்கா அமமையார் நடத்திய ‘சமாதானத்துக்கான யுத்தம்’ நடைபெற்ற காலகட்டத்தில் பேரணிகளை நடத்தி மக்கள் ஒன்றுகூடி குரல் கொடுக்கும் எண்ணத்தை விதைத்தவர்களில் இவரும் ஒருவர்.
புதிய அரசியல் அமைப்பு தொடர்பான தனது காத்திரமான விமர்சனத்தை எழுத்து மூலமாக முன்வைத்திருக்கிறார். ஏல்.எல்.ஆர்.சி அறிக்கையை வாசித்து அதன் ஒவ்வொரு விடயங்களையும் விரல்நுனியில் சுட்டிக்காட்டுமளவிற்கு அதனைப் படித்திருக்கக்கூடியவர்.  நாட்டின் ஒவ்வொரு முக்கிய விடயங்கள் மீதும் தனது கரிசனையைஇ கவனத்தை எப்போதும் தொடர்ந்தேச்சியாக வெளிப்படுத்தயிருப்பவர். அவ்வாறானவர்களைக் காண்பது அரிது தனது எண்பது கடந்த வயதிலும் அவரது ஞாபக சக்தியும் புலமைத்துவ அறிவும், கடுமையான உழைப்பும்  எம்மை வியக்க வைத்தன.
வலிவடக்கு செம்மண்பூமி அதில் பொன்விளையும். அந்தப் பொன்விளையும் பூமியை ஆக்கிரமித்தவர்கள்  வெளியேற வேண்டும் என்று ஓயாது குரல் கொடுத்த குரல் ஓய்ந்திருக்கிறது. அவர் பணி மேலும் ஆழமும் அகலமும் பெறுவதாக.

தேவநாயகம் தேவானந்த்
19.12.2017

No comments:

Post a Comment