தொன்னூறுகளில் விடுதலைப்புலிகள், விடுதலை இயக்கத்தின் போராட்ட நோக்கத்தை மக்களுக்கு உணர்த்தவும் இயக்கத்திற்கும்
மக்களுக்கும் இடையே தொடர்பை விரிவுபடுத்தி வலுப்படுத்தவும்; ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருந்தார்கள். இதற்குக்காரணம் விடுதலைப்புலிகள் ;தமது தலைமறைவு வாழ்வை மெல்ல முடிவுக்குக் கொண்டு வந்து மக்கள் முன் வெளிப்படையாக வந்தார்கள், தமது ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் மக்கள் முன் விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலை காணப்பட்டது போலும். தமது முகங்களைக்காட்டி பொதுவெளிக்கு வந்த பின்னர் மக்களின் கேள்விகளுக்கு விடைகொடுக்க வேண்டிய சூழல் இயல்பாகவே தோன்றியிருந்தது இதனை புலிகள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதனை எதிர்கொள்வதற்காக ஊடகங்களை நன்கு திட்டமிட்டு தந்திரோபாயமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இந்தக்காலகட்டம் புலிகள் கரந்தடிப்படையாக இருந்து மரபுவழி இராணுவமாகவும் தம்மை பரிணாம வளர்ச்சிக்குள் இட்டுச் சென்ற செயல் முறையும் நடைபெற்றதை இனங்காண முடியும்.
ஆக தமது பக்க நியாயங்களையும் விடுதலைக்காக தமிழ்மக்கள் போராட வேண்டும் என்ற வேணாவையும சொல்வதற்கு போராட்டத்தின் பாடுகளை வெளிப்படுத்தி ஆதரவு திரட்டுவதற்கு ஊடகங்களை நம்பத் தொடங்கினார்கள். விடுதலைப்;புலிகளைப் பொறுத்தவரை, மக்களை அணிதிரட்டுவது மற்றும் சிங்கள தேசத்தின் ஊடகயுத்தத்தை முறியடிப்பது இவற்றோடு சர்வதேசத்திற்கு விடுதலைப்போராட்டத்தின் நியாயத்தை எடுத்தியம்புவது. உலகெங்கும் வாழும் தமிழர்களை ஈழவிடுதலையை நோக்கி கவர்ந்திழுப்து என்ற பணிகளுக்காகவும், போராளிகளின் மனோதிடத்தை எதிரியின் பரப்புரை குலைத்துவிடாமல் இருப்பதிலிருந்து பாதுகாப்பதற்காகவும் பல்வேறு வகைப்பட்ட ஊடகங்களை பயன்படுத்தத் தொடங்கினார்கள். இது யுத்தம் முடிவடைந்த முள்ளிவாய்க்கால் வரை நீடித்தது.
1986 இல் யாழ்ப்பாணக் குடாநாட்டில் “நிதர்சனம்” என்ற பெயரில் தொலைகாட்சி ஒளிபரப்புத் தொடங்கப்பட்டது. இதனை விடுதலைப்புலிகள் அமைப்பைச்சார்ந்த பரதன் ஆரம்பிக்கிறார். பின்னர் நிதர்சனம் தனியான தொலைக்காட்சி ஒளிபரப்புப் பிரிவாகவும் புலிகளின்குரல் வானொலியாகவும் தனிப்பிரிவானது. புலிகளின் குரல் ஆரம்பம் முதல் அதனை ஒரு கட்டமைப்பாக வளர்த்தெடுத்த பணியை பரதன் மேற்கொண்டிருந்தார் என்று அறிய முடிகிறது. ............
தேவநாயகம் தேவானந்த்
மக்கள் இதழில் இயக்கம்
No comments:
Post a Comment