Thursday, 5 October 2023

வானலையில் தமிழ் ஒலி -18 : சமுதாய வானொலியாக புலிகளின் குரல்




வானொலிகளில் முக்கியமானதாகக் கருதப்படுவதும் போற்றப்படுவதும் சமுதாய வானொலி, இது வணிக மற்றும் பொது ஒளிபரப்புக்கு மாற்றான மூன்றாவது வானலையை உருவாக்கும் முயற்சியாகும்.. சமுதாய வானொலிகள் குறித்த எல்லைப் பரப்புக்குள் உள்ள, அதாவது வரையறுக்கப்பட்ட புவியியல் எல்லைகளை உடைய சமூகங்களுக்கு சேவை செய்கின்றன. உள்ளுரின் குறிப்பிட்ட பார்வையாளர்களுக்கு பிரபலமான மற்றும் பொருத்தமான உள்ளடக்கத்தை அவை ஒளிபரப்புகின்றன, ஆனால் அவை பெரும்பாலும் வணிக அல்லது வெகுஜன ஊடக ஒளிபரப்பாளர்களால் கவனிக்கப்படுவதில்லை. சமுதாய வானொலி நிலையங்கள் அவர்கள் சேவை செய்யும் சமூகங்கத்தினரால் இயக்கப்படுகின்றன எனலாம். அவர்களுக்கு அது சொந்தமானது என்ற உணர்வைக் கொடுக்கின்றன. அவர்களின் மீது செல்வாக்கு செலுத்துகின்றன. பொதுவாக இவ்வாறான சமுதாய வானொலிகள் இலாப நோக்கற்றவை மேலும் தனிநபர்கள் குழுக்கள் மற்றும் சமூகங்கள் தங்கள் கதைகளைச் சொல்லவும் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும் வாய்ப்பை வழங்குகின்றன. 
சமுதாய வானொலியில் மக்கள்; படைப்பாளர்களாகவும் பங்களிப்பாளர்களாகவும் மாறுவதற்கு ஒரு பொறிமுறை காணப்படும். இந்த அத்தனை பண்புகளையும் புலிகளின் குரல் வானொலி கொண்டிருந்திருக்கிறது. அதனால் அதனை ஒரு சமுதாய வானொலியென்றும் சொல்லலாம்.

சமுதாய வானொலிகள்  உலகின் பல பகுதிகளிலும் காணப்படுகின்றன.  சமூகம் மற்றும் தன்னார்வத் துறை, சிவில் சமூக ஏஜென்சிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் குடிமக்கள் இணைந்து இந்த ஒலிபரப்பை நடத்துகிறார்கள். கூடுதலாக சமூக மேம்பாட்டு நோக்கங்களுக்காக இணைந்து பணியாற்றுவதற்கான ஒரு வாகனமாக சமுதாய வானொலி செயல்படுகிறது. சமூக வானொலி நிலையங்கள் உள்ளுர் பகுதிக்கு, புலம்பெயர்ந்த அல்லது சிறுபான்மை குழுக்களின் முக்கிய ஊடகமாக பணியாற்றுகிறது. அவர்களுக்கான செய்தி மற்றும் தகவல் நிரலாக்கத்தை கொண்டு செல்லுகிறது.. சிறப்பு இசை நிகழ்ச்சிகளும் பெரும்பாலும் பல சமுதாய வானொலி நிலையங்களின் முக்கிய அம்சமாகும். இவை அந்தப் பிராந்தியத்திற்கு மதிப்புமிக்க சொத்துகளாக இருக்கும்.

No comments:

Post a Comment