(Yarl Thinakural Article ,02.02.2025 )
Dr. தேவநாயகம் தேவானந்த்
2025 ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக மீண்டும் பதவியேற்றது குறிப்பிடத்தக்க உலகளாவிய கொள்கை மாற்றங்களுக்கு வழிவகுததிருக்கிறது. குறிப்பாக , வெளிநாட்டு உதவி மற்றும் சர்வதேச வளர்ச்சி தொடர்பாக இவரது முடிவுகள் உலகளவில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. டிரம்ப் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே, அனைத்து அமெரிக்க வெளிநாட்டு உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார், இந்த முடிவுகளால் இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு ஒரு பெரிய சவாலை முன்வைக்கிறது, இது மனித உரிமைகள் மற்றும் சமூக மேம்பாட்டில் முயற்சிகளை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தக்கூடும். இந்த நிதி வெட்டுக்கள் நடைமுறைக்கு வரும்போது, நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளைத் தக்கவைத்துக்கொள்ளவும், அத்தியாவசியத் திட்டங்கள் தொடர்வதை உறுதி செய்யவும் புதிய வழிகளைக் கண்டறிய வேண்டும். இந்தக் குறைப்புகளின் விளைவாக எதிர்காலத்தில் பல அரசசார்பற்ற நிறுவனங்கள் காணாமல் போகக்கூடும். இந்தக்கணத்தில் பலவிடயங்களை நாங்கள் சிந்தித்தாக வேண்டியதாகிறது. இந்த அமெரிக்க நிதியுதவிகள் வடக்குக்கிழக்கில் எதை செய்தன என்பதையும் பார்த்தாக வேண்டும். இலங்கையில் உள்ள அரசசார்பற்ற நிறுவனங்கள் போர்காலத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்கிவந்தன, பின்னர் போருக்குப் பிந்தைய காலத்தில்நல்லிணக்கம், பொருளாதார மேம்பாடு மற்றும் ஜனநாயக நிர்வாகத்தை ஆதரிப்பதில் முக்கிய பங்கு வகித்து வருகின்றன. இந்த அமைப்புகளில் பல, ருளுயுஐனு மற்றும் பிற அமெரிக்க நிறுவனங்கள் உட்பட சர்வதேச நன்கொடையாளர்களிடமிருந்து கணிசமான நிதியைப் பெறுகின்றன. இலங்கை நிதி அமைச்சின் கூற்றுப்படி, 1956 தொடக்கம் அமெரிக்கா 2 பில்லியன் டாலர்களுக்கு மேல் உதவியை வழங்கியுள்ளது,
சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகளால் வடக்கு கிழக்கு பகுதிகளில் நன்மைகள் பல இருந்தாலும் பாதிப்புக்களும் இருந்திருக்கின்றன. அதில் வடக்கு கிழக்கில் தனித்துவமாக மக்கள் அமைப்புக்களாக இருந்த பல அரசார்பற்ற நிறுவனங்களை செயலிக்கச் செய்தததைக் குறிப்பிடலாம். இதன் பயன் இன்று சர்வதேச
அரசசார்பற்ற நிறுவனங்களின் ஓலமாக ஒலிக்கும் சிவில் அமைப்புக்கள் செயலிழந்து போயுள்ளன, அவை விளைத்திறனுடன் இல்லை’ என்பதைக் கேட்க முடிகிறது. இந்த வினைத்திறன் இன்மைக்கு என்ன காரணம் என்று சிந்தித்தாக வேண்டும்.
இங்கு கடந்த 30 ஆண்டுகளாக வடக்கு மற்றும் கிழக்கில் சிவில் அமைப்புக்களை திட்டமிட்டு செயலிழக்கும் வேலையை சர்வதேச அரசசார்பற்ற நிறுவனங்கள் செய்துவந்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. குறிப்பாக யு.எஸ்.எயிட், ஐக்கியநாடுகள் சபையின் அமைப்புக்கள், மற்றும் பலநாடுகளின் நேரடிநிதியளித்தல்கள் இந்தக்கைங்கரியத்தை சிறப்பாக செய்திருந்தன.
இதற்காக அவர்கள் செய்த முக்கியமான பணி தமக்கு தலையாட்டும் பல அரசசார்பற்ற நிறுவனங்களை புதிது பதிதாக உருவாக்கினார்கள். இவ்வாறு தமது செல்லப்பிள்ளைகளை’ உருவாக்கி அவர்களுக்கு பலமில்லியன் நிதியை வாரிஇறைத்து அவர்களை சிவில் அமைப்புக்களாகக் காட்டினார்கள். அவற்றை வைத்தே புதிய பல வலையமைப்புக்களை உருவாக்கினார்கள். இதில் என்ன கொடுமையென்றால்; தனியாள் (ழுநெ அயn ளாழற) அமைப்புக்களை மக்கள் அமைப்புக்காளாக காட்டி வலையமைப்புக்களை உருவாக்கினார்கள். இதற்கு நல்ல உதாரணமாக தற்போது ருNழுPளு இன் சிவில் அமைப்புக்களை வலுப்படுத்தும் ஆறாண்டுத் திட்டத்தைக் குறிப்பிடலாம். இது ஒரு கண்துடைப்புத் திட்டம் பல சிவில் அமைப்புக்களை இணைத்து அதில் மிகச்சிலவற்றிற்கு மிகச்சிறிய உதவிகளை வழங்கி தாம் பரந்துபட்டளவில் சிவில் அமைப்புக்களை வலுப்படுத்துவதாகக் காட்டும் ஒரு போலியான திட்டம். இதே போன்றே ஐக்கியநாடுகள் சபையின் ஏனைய பல அமைப்புக்களின் பல திட்டங்களும் மக்களுக்கு நன்மையை வழங்காத வெறும் கண்துடைப்பு திட்ங்களே என்பது இங்கு மனம் கொள்ளத்தக்கது. இந்த திட்டமிடப்பட்ட செயலழிப்பில் செயலிழந்துபோன ஒரு அமைப்பு யாழ்மாவட்ட அரசசார்பற்ற நிறுவனம்.
யுத்தகாலத்தில் வளங்களைத் திரட்டுதல், பாதிக்கப்பட்ட மக்களுக்கு பகிர்ந்தளித்தல் அரச இயந்திரத்துக்கு மக்கள் சேவையில் உறுதுணையாக இருத்தல் என்று சிறப்பாக பணியாற்றி வந்த இந்த நிறுவனம் தற்போது இயங்கமுடியாமல் தத்தளிக்கிறது. 28 அங்கத்தவர்கள் அங்கத்துவமாக இருந்தாலும் பாதிக்கும் குறைவானவர்களே இயங்குநிலையில் உள்ளார்கள். அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு நிதிவழங்கும் நிறுவனங்கள் தங்கள் மிகக் குறுங்காலத் திட்டங்களில் சிவில் அமைப்புக்களை வலுப்படுத்துவதாக குறிப்பிடுவதே ஒரு போலியானதாகும். அதிலும் தாமே தமது உத்தியோகத்தர்களினூடாக ஆரம்பித்த நிறுவனங்களை தமது நிதியிலும் தமது கட்டுப்பாட்டிலும் வத்திருக்கும் நோக்கம் கருதிய செயல்பாடுகளால் மக்களிடம் தொடர்பில்லாத, மக்களை அணிதிரட்டமுடியாத போலி அமைப்புக்கள் உருவாகியிருக்கின்றன. இவர்களை தேசியமட்டத்தில் சிவில் அமைப்புக்களாகக்காட்ட முற்பட்டதன் விளைவும் ஏலவே இருந்த சிவில் அமைப்புக்களின் செயலிழப்புக்கு காரணமாகிறது. பாரிய நிதி அனுசரணை இல்லாது மக்கள் பணி;நடைபெறமுடியாது என்ற நிலைப்பாடும் உருவாக்கப்பட்டுள்ளது. இப்போது எந்தவொரு அரசசார்பற்ற நிறுவனங்களும் தமது சொந்த மக்களை அபிவிருத்தி செய்யும் எந்தவொரு திட்டத்தையும் கொண்டிருப்பதில்லை மாறாக நிதிநிறுவனங்கள் கோரும்; திட்டங்களையே தமது திட்டங்காகக் கருதுகின்றார்கள். இதிலும் நிதிநிறுவனங்களின் மனதைப்புரிந்த அவர்களோடு அவர்களின் மொழியில் பேசவல்லவர்களாக கொழும்பில் உருவாகியிருக்கும் ஒரு வகையான மேட்டுக்குடிகள் அந்த நிதிகளை வடக்கு கிழக்கு சார்பாக எடுத்துக் கொண்டு வடக்கு கிழக்கில் உள்ள தமது ஒத்தோடிகளுக்கு கொஞ்சத்தை கிள்ளித்தெளித்து நிர்வாக இதரசெலவுகளுக்கு பெருந்தொகையை செலவிடுகிறார்கள்.
இங்கே மக்கள் தொடர்பற்ற நிறுவனங்கள் கணக்குகாட்டலுக்காக சிலவற்றை செய்து அழகான அறிக்கைகளை எழுதுகிறார்கள். ஆனால் திட்டங்கள் பல அடிநிலை மக்களை அடைவதில்லை அவர்களை தொடுவதில்லை. இந்த நிலைமைகள் தனித்துவமான சுயசிந்தனை சிவில் அமைப்புக்களை உருவாக விடுவதில்லை என்ற நிலைமைதான் காணப்படுகின்றது.
இந்த நிலையில் டிரம்பின் அறிவிப்புக்கள் இலங்கை அரசசார்பற்ற நிறுவனங்களைப் பொறுத்தவரை, விளைவுகள் கடுமையானவை. உதவி நிறுத்தப்படுவதற்கு முன்பே இலங்கை அரசசார்பற்ற நிறுவனங்கள் ஏற்கனவே நிதி நெருக்கடியை எதிர்கொண்டன. டிரம்பின் உதவி முடக்க அறிவிப்பு உடனடி பின்னடைவை ஏற்படுத்தினாலும், இந்தப் புதிய யதார்த்தம் உண்மையான அடிநிலைமக்கள் சார்பான நிலைத்த அமைப்புக்களை நிலைநிறுத்தும், அவை நிலைமைக்கேற்ப்ப தகவமைத்துக் கொள்ளவும், பரிணமிக்கவும் கூடிய ஆற்றலைக் பெற்றுக்கொள்ளும். நிலைத்த தன்மையைப் பேண புதுமையான நிதி உத்திகள், வலுவான உள்ளுர் ஈடுபாடு மற்றும் சர்வதேச ஒத்துழைப்பைப் பெறவேண்டும். இதன்வழி செயலிழக்கப்பட்ட உள்ளுர் நிறுவனங்கள் மீள்புத்துயிர் ஊட்டப்படுவதும் தமது பணிக்கான நிதிதிரட்டலுக்கான புதிய உத்திகளையும் வழிகளையும் கண்டறிய வேண்டியதும் அவசியமாகிறது.
No comments:
Post a Comment