Dr. தேவநாயகம் தேவானந்த்
யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் தமிழர்களின் அடையாளமான பல விடயங்களை கொண்டிருக்கிறது. அதில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி , பொங்கு தமிழ் நினைவிடம், மாவீரர் சதுக்கம் என்று ஈழப்போராட்டத்தின் நினைவுகளைத் தாங்கிநிற்க்கும் நினைவுத்தூபிகள் குறிப்பிடத்தக்கன.
2001 ம் ஆண்டு ஜனவரி 17ம் திகதி யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் மாணவர்களும் பொதுமக்களும், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகளும் ஒன்றுகூடி பொங்குதமிழ் நிகழ்வை நடத்தி பொங்கு தமிழ் பிடகடனத்தையும் வெளியிட்டார்கள்.. 2001 ஆண்டுமிக மோசமான இராணுவ அடக்குமுறைக்குள் யாழ் குடாநாடு இருந்த காலகட்டம், அப்போது வன்னிப்பெருநிலப்பரப்பு புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்தது.
இந்தச்சூழலில் தமிழ்மக்கள் தமக்கான கோரிக்கையாக எதை முன்வைக்கிறார்கள் என்பதை வெளியுலகிற்கு உரத்து சொல்ல வேண்டிய தேவை இருந்தது. குறிப்பாக இராணுவ ஒடுக்குமுறை ஒட்டுக்குழுக்களின் அராஜகம் என்று இருந்த சூழலில் அந்த சுழலைமீறி களத்திலிருந்தான ஒரு உரத்த குரல் தேவைப்பட்டது. சுர்வதேசம் அந்தக்குரலுக்கு செவிசாய்க்க வேண்டிய அல்லது அதனை உற்று நோக்க வேண்டியதாக இருந்தது. இதில் பல்கலைக்கழக சமூகம் ஒருதிரட்சியாக அந்தப்பணியைச் செய்ய பல்கலைக்கழகத்திற்கு வெளியே சிவில் அமைப்புக்கள் இன்னொருவகையில் பலந்த பிரயத்தனப்பட்டு அந்த நிகழ்வை சாத்தியமாக்கினர்.
ஆனால் நிகழ்வு நடந்த அன்று பல்கலைக்கழகத்திற்குள் வெளியார் எவரையும் நுழைய இராணுவம் அனுமதிக்கவில்லை. வீதித்தடைகளைப் போட்டு அடையாள அட்டைகளை சோதித்து தடைகளை ஏற்படுத்தினர். பல்கலைக்கழக சமூகத்தை மட்டுமே உள்ளே அனுமதித்தார்கள். இது முதலில் சமாதானத்துக்கான ஒன்று கூடலாக வெள்ளைக்கொடிகள் கட்டிய கூட்டமாக சில புத்திஜீவிகளால் வழிப்படுத்த முற்பட்டாலும் பின்னர் மாணவர்கள் மஞ்சள் சிவப்பு கொடிகளுடன் ஒரு எழுச்சிக் கூட்டமாக நடத்தத் தீர்மானித்தார்கள். முதலாவது பொங்கு தமிழ் உண்மையில் உணர்வுபூர்மானது, தேவைகருதி பொருத்தமான நேரத்தில் ஒழுங்குபடுத்தப்பட்டது. அது உலகின் கவனத்தை ஈர்த்தது. அதில் பேசிய அப்போதைய துணைவேந்தர் பேராசிரியர் பொ. பாலசுந்தரம்பிள்ளை ‘பல்கலைக்கழக மாணவர் அமைப்பு சுதந்திரம் மற்றும் அமைதிக்கு ஆதரவாக குரல் எழுப்புவதைக் கண்டு பெருமைப்படுவதாக கூறினார். அமைதியை ஆதரித்து தமிழ் மக்களின் குரல்களை எழுப்புவதற்கும், நோர்வேயின் மத்தியஸ்த அமைதி முயற்சிகளின் முக்கியத்துவத்தை அங்கீகரிப்பதற்கும் பொங்கு தமிழ்’ கூட்டம் உத்வேகத்தை அளிக்கும்’ என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அந்த எழுச்சிக் கூட்டத்தில் பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்ட வடக்குக்கிழக்கு தமிழர் தாயகம், தமிழர் இலங்கைத் தீவின் தேசிய இனம்;, சுயநிர்ணய உரிமை என்ற முக்கியமான விடயங்கள் கவனத்தை ஈர்த்தன. இந்த நிகழ்வை வருடாந்தம் மாணவர் அமைப்பு நினைவு கூர்ந்து வருகின்றது. அது ஒரு சடங்காக நடைபெற்று வருவதை அவதானிக்கலாம்.
பொங்குதமிழ் நிகழ்வைக் குறிக்கும் முகமாக யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் நினைவுத்தூபி அமைக்கப்பட்டுள்ளது. 2018 ம் ஆண்டு நினைவுத் தூபியை அப்போதைய துணைவேந்தர் விக்னேஸ்வரன் திறந்து வைத்தார் அதில் உரையாற்றும் போது, ‘பொங்கு தமிழ் நினைவுச்சின்னம் தமிழ் மக்களின் உரிமைகளை அடையாளப்படுத்தும’; என்று கூறினார். இதனால் விக்னேஸ்வரனின் பதவி பறிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக தற்போதைய துணைவேந்தர் பதவியேற்றதும் பல்கலைக்கழகத்திற்குள் நிறுவப்பட்டிருநத முள்ளிவாய்க்கால் தூபியை இரவோடு இரவாக அகற்றி வரலாற்றுத்தவறை இழைத்தார். இது அதுவரை யாழ்ப்பாணப்பல்கலைக்கழக துணைவேந்;தர்கள்; பின்வபற்றிவந்த பாரம்பரியத்தை, வழமையை மீறியசெயலாகவும் தனது எஜமான விசுவாசத்திற்கான வாலாட்டலுமாகவும் அமைந்தது என்று விமர்சிக்கப்பட்டது. அதே வேளை ‘அந்த நினைவுச்சின்னம் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருந்தது’ என்று மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்தது. ‘இறந்த பயங்கரவாதிகளை நினைவுகூர யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள், அனுமதிக்கப்படவும் கூடாது" என்று அப்போது பொது பாதுகாப்பு அமைச்சராகவிருந்த சரத் வீரசேகர கூறினார். பின்னர் மாணவர்களின் பலத்த எதிர்ப்பு உலகம் முழுவதும் நடந்த ஆர்பாட்டங்கள் காரணமாக முள்ளிவாய்க்கால் நினைவு தூபியை மீள அமைத்தார்கள்.
ஆக, யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள நினைவுச்சின்னங்களே ஒரு வரலாறாகி நிற்கின்றன எனலாம். பொங்குதமிழ் பிரகடனம் வெளியிடப்பட்ட வரலாற்று நிகழ்வின் 24ம் ஆண்டு நிறைவுக் கூட்டம். யாழ்ப்பாணப்பல்கலைக்ககழத்தில் நடைபெற்றது. ஆதில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் எஸ். சிவகஜன், சிறப்பான தனித்துவமான உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். . அந்த உரை பல்வேறு விடயங்களைத் தொட்டுச் சென்றிருக்கிறது. தற்போதைய அரசியல் தேக்கநிலைக்கு ஒரு நீரோட்டம் கொடுத்தது போன்றிருந்தது.
யுhழ்ப்பாணப்பல்கலைக்கழகத்திற்குள் நடைபெற்ற இந்த நிகழ்வில் மாணவர் ஒன்றியச் செயலாளர் மட்டுமே உரையாற்றியிருந்தார். அந்த நிகழ்வு அரசியல்வாதிகள் அரசியல் செய்யாத இடமாக இருந்தது தனிச்சிறப்பானது. சுpவகஜன் தனது உரையில்
‘ஒற்றையாட்சி அரசு தொடர்பான எந்தவொரு அரசியலமைப்பு முறையுடனும் உடன்படாத தமிழ் மக்கள் பேரவையால் 2016ம் ஆண்டு முன்மொழியப்பட்ட தீர்வுத் திட்டம், இன்னும் தமிழ் மக்களுக்கு மிகவும் பொருத்தமான தீர்வுத் திட்டமாகும். இலங்கைக்கான புதிய அரசியலமைப்பை உருவாக்கும் போது ஒற்றையாட்சி அரசு என்ற கருத்தை நிராகரித்து கூட்டாட்சி அமைப்பை ஏற்றுக்கொள்ள புதிய அரசாங்கத்தை வலியுறுத்துவதற்காக வடக்கில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான கலந்துரையாடல்கள் நடத்தப்பட வேண்டும்.’ என்ற தெளிவான கருத்தை முன்வைத்திருந்தார். மேலும் உரையாற்றுகையில்
‘பொங்குதமிழ் பிரகடகம், திம்பு பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட் தீர்வுகள், என்பன் இலங்கை அரசாங்கத்தாலும் சர்வதேசத்தாலும் நீர்த்துப்போகச் செய்யப்படுகின்றன. தமிழ்தேசிய நீக்கத்துக்காக முயற்சிகளை மேற்கொள்ளப்படுகின்றன. தமிழர்களின் போராட்டம் அடையாளத்திற்கானதல்ல அது தமிழர் இறைமைக்கான போhட்டம். தமிழர்களின் தீர்வு நிச்சயமாக 13வது திருத்தத்திற்கு மேலானதாக இருக்க வேண்டும். ஒற்றயாட்சியில் தமிழர்களுக்கு தீர்வு இல்லை என்பதை புரிந்து அதற்கேற்ப்ப தமிழ் அரசியல் வாதிகள் செயற்பட வேணடும். ஆனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து ஐக்கிய கூட்டணியொன்றை உருவாக்க வேண்டும’; என்றும் கோரியிருந்தார்கள்.
பல்கலைக்கழகச்சமூகத்தின் ஒரு அங்கமான மாணவர் அமைப்பின் இந்த முன்வைப்புக்கள் நிச்சமாக வரவேற்க்கப்பட வேண்டியவை. கல்வியாளர்களும் சமூகத்தின் மேற்தட்டு வர்க்கத்தினரும, புலமையாளர்கள்,நிபுணர்கள் எனப்பலரும் சிவனே என்று இருந்துவிட இளைஞர்கள் கட்சிசாரா அரசியல் நிலை நின்று தமது கருத்துக்களை ஆணித்தரமாக முன்வைத்திருப்பது நம்;பிக்கையைத்தருகின்றது.
பொங்கு தமிழ் பிரகடனத்தை வருடாவருடம் சடங்காசார நிகழ்வாக மட்டும் நிகழ்த்தாது. ஆதனை ஒரு கட்சி அரசியலாக மழுங்கடிக்காமல் பொது நிலை நின்று மாணவர்கள் வெளியிட்ட அறிக்கை நிச்சமாக நம்பிக்கைதருவது தான். ஆதனை தொடர்ந்து முன்கொண்டு சென்று செய்தி அரசியிலிலிருந்து செயற்பாட்டு அரசியலும் தமிழ் அரசியல் நகரவேண்டும்.
No comments:
Post a Comment