Showing posts with label Cinema ciritics. Show all posts
Showing posts with label Cinema ciritics. Show all posts

Saturday, 18 April 2026

நீளிரா: சினிமா விமர்சனம்


யுத்த நினைவுகளின் சினிமா

 

 Dr.தேவநாயகம் தேவானந்த்

 

சினிமா என்பது வெறும் பொழுதுபோக்கு  மட்டுமல்ல; அது ஒரு மொழி. குறிப்பாக, ஒடுக்கப்பட்ட அல்லது சிறுபான்மை இனங்களுக்கு, தமது வரலாறு, நினைவுகள் மற்றும் அரசியல் அனுபவங்களை வெளிப்படுத்தும் சக்திவாய்ந்த காட்சிமொழியாக அது செயல்படுகிறது. ஈழத் தமிழர்களின் யுத்த அனுபவங்களும் அதனுடன் தொடர்புடைய மனநிலைகளும்  சினிமா வழியாகவும் பதிவு செய்யப்பட வேண்டிய அவசியம் உள்ளது. அந்த வகையில், நீளிரா திரைப்படம் ஒரு கலைப்படைப்பாக மட்டுமல்லாது, ஒரு இனத்தின் நினைவுகளையும் குரலையும் வெளிப்படுத்தும் முக்கியமான முயற்சியாகக் கருதப்படக் கூடியது.

ஈழத் தமிழ் சினிமாவை யுத்தத்திற்கு முன், யுத்தகாலம் மற்றும் யுத்தத்தின் பின் என்று பிரித்து பார்க்க வேண்டியுள்ளது. எமக்கான சினிமா, எமக்கான வானொலி, எமக்கான தொலைக்காட்சி தேவை என்பதை நீண்ட நாட்களாகவே ஈழத் தமிழர்கள் உணர்ந்து வந்துள்ளனர். இதன் காரணமாக, ஈழ விடுதலைப் போராட்ட காலத்தில் இத்துறைகளுக்கான கடினமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.