Showing posts with label Jaffna Science Association. Show all posts
Showing posts with label Jaffna Science Association. Show all posts

Sunday, 15 May 2022

Narrative Research : Methods & Methodologies by Prof.G.Ravindran (Video)

கதையாடல் ஆய்வு : முறைகளும் முறைமைகளும்
------------------------------------------------------------
யாழ்ப்பாண விஞ்ஞானச்சங்கத்தின் சமூக விஞ்ஞானப் பிரிவு ஒழுங்கு செய்து நடத்துகின்ற சமூக பண்பாட்டு ஆய்வு தொடர் விரிவுரைகளும் களநிலை ஆய்வு முன்னெடுப்புக்களும் பேராசிரியர் கோ. இரவீந்திரன் தலைமையில் நடைபெறுகின்றன. அதில் கதையாடல் ஆய்வு : முறைகளும் முறைமைகளும் என்ற தலைப்பில் அவரது கருத்துரை இங்கு வீடியோ வடிவில் கிடைக்கிறது. ஆய்வுத்துறை ஆர்வலர்களுக்கு இது பயனுள்ள அமர்வு. தனது வேலைப்பழுவிற்கு மத்தியில் இலங்கை வடபுலத்தில் ஆய்வாளர்கள் உருவாகவேண்டும் மற்றும் வட வடபுலத்தின் சமூகபண்பாடு தொடர்பான ஆய்வுகள் மேலெழவேண்டும் என்ற நோக்கம் கருதிய அவரது பணிக்கு நன்றிகள் கோடி.

 

Wednesday, 11 May 2022

இணையவழிக் கருத்தரங்கு : இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் வங்கிகளின் நிலை என்ன?

 இலங்கையின் பொருளாதார நெருக்கடியில் வங்கிகளின் நிலை என்ன? என்ற தலைப்பில் பொருளியல்துறைப் பேராசிரியர் பேராசிரியர் வி.பி.சிவநாதன் அவர்கள் இணையவழி கருத்துரைவழங்குகிறார். எதிர்வரும் 13.05.2022 அன்று மாலை 7.00மணிக்கு இந்தக்கருத்தரங்கு நடைபெறவுள்ளது. ஆர்வலர்களை சூம் செயலிவழியாக இணைந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். (ஐ.டி: 69114783312 கடவுச்சொல்: Jsa@2022)

Thursday, 17 March 2022

Narratives for Research : Methods & Methodologies



யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் - சமூக விஞ்ஞானப்பரிவு

சமூக, பண்பாட்டு ஆய்வுகள் 

யாழ்ப்பாண விஞ்ஞர்னச் சங்கத்தின் சமூக விஞ்ஞானப்பிரிவு ஒழுங்கு செய்து நடத்துகின்ற 'சமூக பண்பாட்டு ஆய்வுகள் என்ற தலைப்பிலான ஆய்வுக்கருத்தரங்கின் இரண்டாம் அமர்வு எதிர்வரும் 17.03.2022 அன்று மாலை 7.30 மணிக்கு இணையவழி நடைபெறும். இந்தக் கருத்தமர்வை தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறைப் பேராசிரியர் கோ.இரவீந்திரனவர்கள் வளவாளராகவிருந்து வழிநடத்துகின்றார். இந்த கருத்தமர்வில் ஆய்வு முறையியல்சார்ந்த விடயங்கள் பேசப்படுவதோடு ஆய்வில் ஈடுபடுபவர்கள் அது விடயமாக உரையாடி உரிய வழிப்படுத்தலைப் பெறும் வாய்ப்புமுள்ளது. இந்த நிகழ்வை 2022/2023 ஆண்டின் சமூக விஞ்ஞர்னப்பிரிவின் தலைவர் தேவநாயகம் தேவானந்த் தலைமையேற்று நடத்துவார். 

Sunday, 13 March 2022

சமூக, பண்பாட்டு ஆய்வுகள்


Very very useful webinar.Prof.Ravindran is very talented and eminent scholar.He has shared many ideas with his research experiences.Thank you very much Thevananth Sir&Janani Miss.You gave me a nice  opportunity to share my ideas & feelings. I hope that I'll do my best in the research field for the betterment of our society with you.

- Dr. Y.Veeramankai 


யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கத்தின் சமூக விங்ஞானப்பிரிவினர் மாவட்டம் சார்ந்த ஆய்வுகளை ஊக்குவிக்கும் நோக்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புக்களில் ஆய்வுகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளனர். இதில் ஒரு குழுத்தலைவர் மற்றும் இரண்டு ஆய்வாளர்கள் அடங்கலாக மூன்று பேர் கொண்ட ஆய்வுக் குழு ஒரு தலைப்பில் ஆய்வுகளை மேற்கொள்ளும். இந்தாண்டு இறுதியில் ஆய்வு முடிவுகள் ஆய்வு மகாநாட்டில் அளிக்கை செய்யப்படும். இந்த ஆய்வுத் திட்டத்திற்கு வளவாளராக தமிழ்நாட்டின்  (இந்தியா) மத்திய பல்கலைக்கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் கோ.இரவீந்திரன் வழிநடத்துவார். ஆய்வுக்குழுவினர் வாராந்தம் தங்கள் களப்பணியுத் தகவல்களை சேகரித்து ஒவ்வொரு வியாழக்கிழமையும் நடைபெறும் இணையவழிக் கலந்துரையாடலில் கலந்து கொள்வார்கள். இதில்  பாடசாலை ஆசிரியர்கள், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சமூகச்செயற்பாட்டாளர்கள் போன்ற யாரொருவரும் கலந்து கொள்ளலாம்.