தேவநாயகம் தேவானந்த்
இலங்கையில் ராஜபக்ச ஆட்சியல் ஏற்பட்ட பொருளாதார அரசியல் நெருக்கடிச் சூலில் ரணில் விக்ரமசிங்க பதவியைப் பொறுப்பெற்ற போது மே 17, செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்னார். அந்த உரையில், அவர் {ஹணு வ(ட்)டயே' நாடகத்தின் குழந்தையைக் காப்பாற்றும் கதாபாத்திரமான க்ரு~h பாத்திரத்தைப் போன்று தான் இருப்பதாக குறிப்பிட்டார்.
‘ஹணு வ(ட்)டயே’ நாடகம் இரண்டு பேரின் கதையை அடிப்படையாகக் கொண்டது. அவையிரண்டும்; இறுதியில் ஒன்றாக வரும் இரண்டு கதைகள் எனலாம். முதலாவது கதை க்ருசா வின் கதை, இரண்டாவது கதை ஆட்சியதிகாரத்தின்; கதை.
க்ருனிசியாவில் ஒரு நகரத்தை ஆளும் ஒரு பணக்கார ஆளுநருக்கு மைக்கேல் என்ற குழந்தை பிறந்தது, மேலும் அவரது மனைவி நாடெல்லா, பகட்டாரவாரமாக வாழ்கிறார்கள். ஈஸ்டர் ஞாயிறு அன்று கிளர்ச்சி நடக்கிறது.; அதில்; கவர்னரைக் கொன்றுவிடுகிறார்கள், ஆளுநரின் மனைவி தனது ஆடம்பரப்பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடுகிறாள் அப்போது அவசரத்தில் தன் குழந்தையை விட்டுச் செல்கிறாள். இதற்கிடையில், க்ருசா என்ற வேலைக்காரப் பெண் அந்தக்குழந்தையை தனியே விட்டுச்செல்ல விரும்பாது தூக்கி செல்ல விளைகிறாள். மற்றவர்கள் தடுக்கிறார்கள் இருந்தாலும் க்ருசா குழந்தையைக்காப்பாற்றிசெல்கிறாள். சதிப்புரட்சியின் குழப்பங்களுக்கு மத்தியில் க்ருசா சைமன் என்ற சிப்பாயும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலைத் தெரிவிக்கிறார்கள். சைமன் க்ரு~hவுக்கு அவர்களின் நிச்சயதார்த்தத்தின் அடையாளமாக ஒரு சங்கிலியில் ஒரு வெள்ளி சிலுவையைக் கொடுக்கிறான். சண்டைமுடிந்த பின்னர் அவர்கள் இணைவதாகக் கூறி பரிகிறார்கள்.
குழந்தைiயைப் க்ருசா அரண்மனையிலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல முனைகிறாள். க்ருசா மைக்கேலுடன் கடினமான பயணத்தை ஆரம்பிக்கிறாள். அவர்கள் இருவரும் மலைகளுக்கு நடுவே குளிரில் பயணிக்கிறார்கள். க்ருசாவிடம் பணம் குறைவாகவே உள்ளது, பால் மற்றும் தங்குமிடத்திற்காக அவள் குடிசைகளில் பிச்சை எடுக்கிறாள். இவ்வாறாக மிகக்கடினமான பயணத்தில் குழந்தையைக்காப்பாற்றிச் செல்கிறாள். ஒரு கட்ட்தில்மலைக் கிராமங்களுக்கு செல்லும் ஒரு பனிப்பாறைக்கு க்ரு~h வரும்போது, ஆழமான பள்ளத்தாக்கு வழியாக தப்பிக்க வேண்டும் அதற்கு ஒரு பழைய பாலம் மோசமான நிலையில் இருந்த பாதையைக் கடக்க முயல்கிறார். பாலத்தில் கூடியிருந்த வணிகர்கள் க்ருசாவை அந்த பாதை ஆபத்தானது என்று எச்சரித்தாலும், அவள் பாலத்தில் ஏறி கடந்து ஓடுகிறாள்;. குழந்தையைத் துரத்தும் ஆபத்திலிருந்து தப்பிக்க க்ருசாவுக்கிருந்த ஒரே வழி அதுவாகத் தான் இருந்தது. க்ருசா மைக்கேலை மேலும் மலைகளுக்குள் அழைத்துச் செல்கிறார்.பின் தனது சகோதரன் வீட்டை அடைகிறாள்.
.jpg)
