Sunday, 6 October 2024

இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடகமாடுகிறார்!! - 02

தேவநாயகம் தேவானந்த் 

இலங்கையில் ராஜபக்ச ஆட்சியல் ஏற்பட்ட பொருளாதார அரசியல் நெருக்கடிச் சூலில் ரணில் விக்ரமசிங்க பதவியைப் பொறுப்பெற்ற போது  மே 17, செவ்வாய்கிழமை நாட்டு மக்களுக்கு உரையாற்னார். அந்த உரையில், அவர் {ஹணு வ(ட்)டயே' நாடகத்தின் குழந்தையைக் காப்பாற்றும் கதாபாத்திரமான க்ரு~h பாத்திரத்தைப் போன்று தான் இருப்பதாக குறிப்பிட்டார். 

‘ஹணு வ(ட்)டயே’ நாடகம் இரண்டு பேரின் கதையை அடிப்படையாகக் கொண்டது. அவையிரண்டும்; இறுதியில் ஒன்றாக வரும் இரண்டு கதைகள் எனலாம். முதலாவது கதை க்ருசா வின் கதை, இரண்டாவது கதை ஆட்சியதிகாரத்தின்; கதை. 

க்ருனிசியாவில் ஒரு நகரத்தை ஆளும் ஒரு பணக்கார ஆளுநருக்கு மைக்கேல் என்ற குழந்தை பிறந்தது, மேலும் அவரது மனைவி நாடெல்லா, பகட்டாரவாரமாக வாழ்கிறார்கள்.  ஈஸ்டர் ஞாயிறு அன்று கிளர்ச்சி நடக்கிறது.; அதில்; கவர்னரைக் கொன்றுவிடுகிறார்கள், ஆளுநரின் மனைவி தனது ஆடம்பரப்பொருட்களை எடுத்துக்கொண்டு தப்பி ஓடுகிறாள் அப்போது அவசரத்தில் தன் குழந்தையை விட்டுச் செல்கிறாள். இதற்கிடையில், க்ருசா என்ற வேலைக்காரப் பெண் அந்தக்குழந்தையை தனியே விட்டுச்செல்ல விரும்பாது தூக்கி செல்ல விளைகிறாள். மற்றவர்கள் தடுக்கிறார்கள் இருந்தாலும் க்ருசா குழந்தையைக்காப்பாற்றிசெல்கிறாள். சதிப்புரட்சியின் குழப்பங்களுக்கு மத்தியில் க்ருசா சைமன் என்ற சிப்பாயும் ஒருவருக்கொருவர் தங்கள் காதலைத் தெரிவிக்கிறார்கள். சைமன் க்ரு~hவுக்கு அவர்களின் நிச்சயதார்த்தத்தின் அடையாளமாக ஒரு சங்கிலியில் ஒரு வெள்ளி சிலுவையைக் கொடுக்கிறான். சண்டைமுடிந்த பின்னர் அவர்கள் இணைவதாகக் கூறி பரிகிறார்கள். 


குழந்தைiயைப் க்ருசா அரண்மனையிலிருந்து பாதுகாப்பான இடத்துக்கு அழைத்துச் செல்ல முனைகிறாள்.  க்ருசா மைக்கேலுடன் கடினமான பயணத்தை ஆரம்பிக்கிறாள். அவர்கள் இருவரும் மலைகளுக்கு நடுவே குளிரில் பயணிக்கிறார்கள். க்ருசாவிடம் பணம் குறைவாகவே உள்ளது, பால் மற்றும் தங்குமிடத்திற்காக அவள் குடிசைகளில் பிச்சை எடுக்கிறாள். இவ்வாறாக மிகக்கடினமான பயணத்தில் குழந்தையைக்காப்பாற்றிச் செல்கிறாள். ஒரு கட்ட்தில்மலைக் கிராமங்களுக்கு செல்லும் ஒரு பனிப்பாறைக்கு க்ரு~h வரும்போது, ஆழமான பள்ளத்தாக்கு வழியாக தப்பிக்க வேண்டும் அதற்கு ஒரு பழைய பாலம் மோசமான நிலையில் இருந்த பாதையைக் கடக்க முயல்கிறார். பாலத்தில் கூடியிருந்த வணிகர்கள் க்ருசாவை அந்த பாதை ஆபத்தானது என்று எச்சரித்தாலும், அவள் பாலத்தில் ஏறி கடந்து ஓடுகிறாள்;. குழந்தையைத் துரத்தும் ஆபத்திலிருந்து தப்பிக்க க்ருசாவுக்கிருந்த ஒரே வழி அதுவாகத் தான் இருந்தது. க்ருசா மைக்கேலை மேலும் மலைகளுக்குள் அழைத்துச் செல்கிறார்.பின் தனது சகோதரன் வீட்டை அடைகிறாள். 


க்ருசாவையும் மைக்கேலையும் சகோதரன் வீட்டில் தங்க வைக்கிறான்;. ஆறு மாதங்களுக்குப் பிறகு, பனி உருகத் தொடங்கியதும், க்ருசாவின் சகோதரன் உள்ளுர் விவசாயப் பெண்ணின் மகனைத் திருமணம் செய்ய ஏற்பாடு செய்கிறான். சைமனுக்கு நிச்சயிக்கப்பட்டதால், க்ருசா எதிர்ப்பு தெரிவிக்கிறார், ஆனால் அந்த நபர்; நோய்வாய்ப்படடவர் விரைவில் இறந்து விடுவார், கணவராக காகிதத்தில் மட்டுமே இருப்பார் என்று வலியுறுத்துகிறார்கள். அவர், மரணத்திற்கு அருகில் இருக்கிறார், அவர் இறந்தவுடன் க்ருசா அவரது நிலத்தையும் அவரது வீட்டையும் பெறுவார் என்று கூறுகிறார்கள்.  வேறு வழியின்றி க்ருசா தன் சகோதரனின் திட்டத்துடன் ஒத்துழைக்கிறாள். அதே வேளை மக்கள் க்ருசினியாவில் அரசியல் அமைதியின்மையைப் பற்றி கிசுகிசுக்கத் தொடங்குகிறார்கள், ஆட்சியை இழந்தவர் மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டார் மற்றும் அனைத்து வீரர்களும் விரைவில் போரில் இருந்து வீட்டிற்கு வருவார்கள் என்ற செய்திகளும் பரவுகின்றன. சைமன் விரைவில் திரும்பி வருவார் என்று க்ருசா நம்புகிறாள்.  அப்போது, க்ருசாவின் புதிய கணவர், மரணப் படுக்கையில் இருந்து திடீரென உயிருடன் எழுந்திருக்கிறார்.



மாதங்கள் செல்ல செல்ல, க்ருசா கடுமையான கோரிக்கைகளை சமாளிக்க வேண்டியதாகவுள்ளது.  தினமும் க்ருசாவை கேலி செய்கிறார்கள்;, மேலும் அவளுடைய அன்பான சைமன் அவளுக்காக ஒருபோதும் வரமாட்டார் என்று கூறுகிறார்கள்;. காலப்போக்கில், சைமன் வருகிறார், க்ருசா மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாள். சைமன், குழந்தையைக் கவனித்து, க்ருசாவுக்கு குழந்தை இருக்கிறதா என்று கேட்கிறார். அது அவளுடையது அல்ல என்று வலியுறுத்துகிறாள். சைமன் க்ரு~hவிடம் கொடுத்த சிலுவையை நீரோடையில் வீசச் சொல்லிவிட்டு வெளியேறுகிறான். இந்த நேரம் மறைந்த ஆளுநரின் மகன்  தான் மைக்கேல் என்று சந்தேகித்து சிப்பாய்கள் மைக்கேலைக் அழைத்துச்செல்கிறார்கள். க்ருசா சிப்பாய்களைப் பின்தொடர்ந்து நகரத்திற்குத் திரும்பினாள், குழந்தை தன்னுடையது என்று உரிமைகோருகிறாள். 

"ஏழையின் நீதிபதி" என்று அறியப்பட்ட ஒருவர் குழந்தையின் வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொள்கிறார். அதே வேளை ஆளுநரின் ஆடம்பர மனைவி மைக்கேலைத் திரும்பப் பெற விரும்புகிறார், ஏனெனில் மைக்கேல் இல்லாமல் அவர் முன்னாள் ஆளுநரின் தோட்டங்களைக் கைப்பற்ற முடியாது. க்ருசா கடந்த இரண்டு வருடங்களாக தான் வளர்த்து வந்த குழந்தையை வைத்துக்கொள்ள விரும்புகிறாள். அனைத்து விவாதங்களையும் கேட்ட நீதிபதி வெண்கட்டியால் ஒரு வட்டத்தை வரைய உத்தரவிட்டார். அதில் அவர் குழந்தையை நடுவில் வைத்து இரண்டு பெண்களையும் வேகமாக இழுக்குமாறு கட்டளையிடுகிறார், எந்தப் பெண் குழந்தையை வட்டத்திலிருந்து வெளியே இழுக்க முடியுமோ அவர் அந்தக் குழந்தையைப் பெறுவார் என்று கூறுகிறார்.  கவர்னரின் மனைவி குழந்தையை வேகமாக இழுக்க, க்ருசா குழந்தைக்கு நொந்துவிடும் என்று கருதி இழுக்காது விட்டுவிடுகிறாள். நீதிபதி  அவர்களை மீண்டும் செய்யுமாறு கட்டளையிடுகிறார், மீண்டும் க்ருசா குழந்தையை இழுக்காது விட்டுவிடுகிறாள். இதைக்கவனித்த நீதிபதி  மைக்கேலை க்ருசாவிடம் கொடுத்துவிட்டு ஆளுநரின் மனைவியை வெளியேறும்படி கட்டளையிடுகிறார். அவர் ஆளுநரின் தோட்டங்களை பறிமுதல் செய்து பொது தோட்டங்களாக மாற்றுகிறார். மேலும்  க்ருசாவிற்கு விவாகரத்து வழங்கி சைமனை திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கிறார். 

இதுவே வெண்கட்டி வட்ட நாடகத்தின் கதை இந்த நாடகம்; 'தி ககாசியன் சாக் சர்க்கிள்' என்று பிரெக்டினால் எழுதப்பட்டது. பின்னர் சிங்கள மற்றும் தமிழ் மொழியல் மொழிபெயர்க்கப்பட்டு தயாரிக்கப்பட்டது. 

இந்தக் கதை இலங்கையின் தற்போதைய நிலையுடன் நன்கு பொருந்துகிறது எனலாம். கதை சீனக்கதையுடன் ஆரம்பமாவது போன்று இலங்கையின் தற்போதைய பிரச்னை சீனாவின் கடன்பொறியுடன் ஆரம்பமாகிறது. குழந்தையின் தாய் பகட்டாரவாரத்தில் கவனம் செலுத்துவது பொன்று ஆட்சியாளர்களும் தமது ஆரம்பரவாழ்வில் திழைத்தார்கள் என்பதை அவர்கின் வீடுகள் தாக்கப்பட்ட போது தெரியவந்தது. 

குழந்தையைக்காப்பாற்றும் போது க்ருசாவிடம் பணம்மில்லை பிள்ளையின் பாலுக்காக வீடுவிடாக பிச்சையெடுக்கிறாள். இலங்கையின் நிலையும் அப்படித்தானே? ரணில் குழந்தையைக்காப்பாற்ற நாடுநடாக பிச்சைப்பாத்திரமேந்த வேண்டியுள்ளது. ஆக,  இலங்கையின் நெருக்கடியில் க்ரு~h பாத்திரமேற்றிருக்கும் ரணிலினால் காப்பாற்றப்ட்டு பின்னர் அவரிடமே இந்தக் குழந்தை வந்தாகவேண்டுமென்று ரணில் நம்புகின்றார் போலும். 

நாடகத்தில் இரண்டு கதைகள் ஒருஇடத்தில் முடிவடைகின்றன. அதே போல இன்றைய இலங்கையைப் பொறுத்தளவில் ரணிலினுடையதும் ராஜப்கசாக்களினதும் கதை இவை இரண்டும் அதிகாரத்தை கைப்பற்றுவதான ஒர் இடத்தில் முடிவடையும். நாடகக் கதையில் ஈஸ்ரர் ஞாயிறு நடந்த சதிப்புரட்சியில் கவனர் கொல்லப்பட குழந்தை தனியே விடப்படுகிறது. இங்கு இலங்கையிலும் ஈஸ்ரர் ஞாயிறு தாக்குதல் தான் ஆட்சி மாற்றத்துக்கானதாக அமைந்திருக்கிறது. இந்த ஆட்சி மாற்றமே இன்றைய நெருக்கடிக்கான தூண்டலாக அமைந்திருக்கிறது.

மேலும் இந்தப்பயணத்தில்; க்ருசா பாத்திரம் போன்று ரணிலும் நாட்டைக்காப்பாற்றுவதற்காக விரும்பாதவர்களை திருமணம் செய்து கொள்ள வேண்டி வரலாம். இது இன்று நடக்கிறது போலும் தான்விரும்பாதவர்களையும் அமைச்சர்களாக நியமிப்பது வேண்டாத திருமணம்போன்றே உள்ளது. சீனா, இந்தியா, அமெரிக்கா,ஐ.எம.எவ் என்று எத்தனை வேண்டாத பல திருமணங்கள் காத்திருக்கின்றன..  இந்த இடர்மிகு பயணத்தில் தனது போட்டியாளர்களை எதிர்கொண்டு வெற்றிபெற்றாக வேண்டும். அந்த வெற்றியில் மீண்டும் ராஜபக்சாக்கள் வந்து அரசாங்கத்தை கோரப்போவது உறுதி எனலாம். இங்கு ரணில் ஒரு நாடகமாடுகிறார். அதில் தானும்மொரு பாத்திரமேற்று ஆடுகிறார். அதன் இறுதியில் நீதிபதிகளான மக்களின் தீர்ப்பு ரணிலுக்கு வெற்றியைப் பெற்றுத் தருமா? அவரது நாடகமாடல் எதில் முடியும்?; என்பதே இன்று பலரது கேள்வி;யாகும்.

வெண்கட்டி வட்டம் தமிழ்மொழிபெயர்ப்பு நாடகத்தில் நடித்த லீலாவதி தான் நடித்த க்ருசா பாத்திரம் பற்றிக் குறிப்பிடும் போது “க்ருசா மனச்சாட்சிக்கு உண்மையாக, பொய்யில்லாமல் யாரையும் ஏமாற்றாமல் வாழப்பழகிக்கொண்ட ஒருவர். நியாயமும் தர்மமும்; ஜெயிக்கும் என்ற நம்பிக்கையில் அந்தக் குழந்தைக்காக தனது எல்லாசுகங்களையும் இழந்து ஒரு வயதானவரை திருமணம் செய்து காதலை இழந்து உறுதியோடு இருக்கின்ற ஒருவர்.” என்று விபரிக்கிறார்.  இந்தக் கூற்றில் உள்ள மனச்சாட்சிக்கு உணமையாக,பொய்யில்லாமல், யாரையும் ஏமாற்றாமல் என்ற விடயங்களை ஒரு அரசியல்வாதியான ரணிலிடமிருந்து எதிர்பார்க்க முடிமா? என்ற கேள்வியுண்டு. இந்த நிஜத்தையும் புரிந்து கொண்டே. ரணிலாடும் நாடகத்தைக் கண்டு களிக்க வேண்டும். 



No comments:

Post a Comment