Tuesday, 21 November 2023

வானலையில் தமிழ்ஒலி -14 : தமிழ்த் தேசிய வானொலி - புலிகளின் குரல் ( Voice of Tiger)


விடுதலைப்புலிகள் தகவல் தொடர்புத் துறையில் வல்லவர்களாகத் திகழ்;ந்தார்கள் என்ற கருத்து உண்டு.  விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அனைத்து வகையான ஊடகங்களையும் கனகச்சிதமாகப் பயன்படுத்தினார்கள். இந்த வலுவான தொடர்பாடல் திறன் காரணமாக மக்களை வசிகப்படுத்தினார்கள் என்றும் சொல்லலாம். தகவல்தொடர்பு துறை விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் மிக முக்கியமான பிரிவாகும். வெகுஜனத் தொடர்பாடல் மூலம் அரசியல் சூழ்நிலையின் அசாதாரணத்தைப் பற்றி இளைஞர்களுக்குக் மக்களுக்கும் கற்பித்தார்கள். அரசை எதிர்க்க மக்களை ஊக்குவிப்பதற்காக வானொலியைப் பயன்படுத்தினார்கள். இது பல நாடுகளில் நடந்திருக்கிறது.  இலங்கையில்; விடுதலையின் அவசியத்தையும் மகத்துவத்தையும் விடுதலைப் புலிகள் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக வான்வெளிக்குச் சென்றார்கள். அதற்காக ‘புலிகளின் குரல்’ வானொலியை ஆரம்பித்தார்கள். இது வானலையில் புரட்சிகரமானதான தமிழ்ஒலியாகப் பார்க்கப்படுகிறது.



வானொலிக்கு புவியியல் மற்றும் அரசியல் எல்லைகளை மீறும் திறன் உண்டு என்பதை புலிகளின் குரல் வானொலி நிரூபித்திருந்தது. உலகவரலாற்றில் விடுதலை இயக்கங்களும் போராளிகளும் தமது தொடர்பாடலுக்காக தெரிவு செய்யும்  ஊடகமாகவே வானொலி இருந்திருக்கிறது. இந்த வெகுஜன ஊடகம் மூலம்; வெகுஜனங்களை இலகுவில் அடைய முடியும் மற்றும் ஒருவரின் சொந்த நாட்டில் அடிமையாக இறப்பது எவ்வளவு வெட்கக்கேடானது என்று அவர்களுக்கு இலகுவில் சொல்லலாம். விடுதலை இயக்கத்தில் இளைஞர்களைச் சேர்ப்பதற்கான ஒரு வலுவான பிரச்சார ஊடகமாகவும் வானலை பயன்படுத்தப்பட்டுள்ளது. 
அதாவது, விடுதலை இயக்கங்கள் வானொலியை தமது பிரச்சாரத்திற்கு பயன்படுத்தினார்கள் என்று சொல்லமுடியும். இதனால் இவ்வாறான வானொலிகளை ‘பிரச்சார வானொலிகள்’(propaganda Radio என்றும் அழைத்தார்கள். வானொலி ஒலிபரப்பு மூலம்; ஒரு குறிப்பிட்ட தகவல் அல்லது செய்தி வழங்கப்படுவதை பிரச்சார வானொலியாக வரையறுக்கிறார்கள். பிரச்சாரம் என்பது புரட்சிகர தன்மையின் ஒரு பகுதி, இதற்கு வானொலி பயன்பட்டது.  தகவல்களை விரைவாகவும் ஒரே மாதிரியாகவும் பரந்த மக்களுக்கு அனுப்ப அனுமதித்தது. பிரச்சாரங்கள் மூலம் வானொலி விடுதலை இயக்கங்களுக்கான  சக்திவாய்ந்த ஆட்சேர்ப்பு கருவியாக இருந்ததையும் மறுக்க முடியாது.............

தேவநாயகம் தேவானந்த்


No comments:

Post a Comment