விடுதலைப்புலிகள் தகவல் தொடர்புத் துறையில் வல்லவர்களாகத் திகழ்;ந்தார்கள் என்ற கருத்து உண்டு. விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அனைத்து வகையான ஊடகங்களையும் கனகச்சிதமாகப் பயன்படுத்தினார்கள். இந்த வலுவான தொடர்பாடல் திறன் காரணமாக மக்களை வசிகப்படுத்தினார்கள் என்றும் சொல்லலாம். தகவல்தொடர்பு துறை விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் மிக முக்கியமான பிரிவாகும். வெகுஜனத் தொடர்பாடல் மூலம் அரசியல் சூழ்நிலையின் அசாதாரணத்தைப் பற்றி இளைஞர்களுக்குக் மக்களுக்கும் கற்பித்தார்கள். அரசை எதிர்க்க மக்களை ஊக்குவிப்பதற்காக வானொலியைப் பயன்படுத்தினார்கள். இது பல நாடுகளில் நடந்திருக்கிறது. இலங்கையில்; விடுதலையின் அவசியத்தையும் மகத்துவத்தையும் விடுதலைப் புலிகள் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக வான்வெளிக்குச் சென்றார்கள். அதற்காக ‘புலிகளின் குரல்’ வானொலியை ஆரம்பித்தார்கள். இது வானலையில் புரட்சிகரமானதான தமிழ்ஒலியாகப் பார்க்கப்படுகிறது.
Showing posts with label Tamil radio. Show all posts

Tuesday, 21 November 2023
வானலையில் தமிழ்ஒலி -14 : தமிழ்த் தேசிய வானொலி - புலிகளின் குரல் ( Voice of Tiger)
விடுதலைப்புலிகள் தகவல் தொடர்புத் துறையில் வல்லவர்களாகத் திகழ்;ந்தார்கள் என்ற கருத்து உண்டு. விடுதலைப் போராட்டத்தின் நியாயத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு அனைத்து வகையான ஊடகங்களையும் கனகச்சிதமாகப் பயன்படுத்தினார்கள். இந்த வலுவான தொடர்பாடல் திறன் காரணமாக மக்களை வசிகப்படுத்தினார்கள் என்றும் சொல்லலாம். தகவல்தொடர்பு துறை விடுதலைப்புலிகளின் போராட்டத்தில் மிக முக்கியமான பிரிவாகும். வெகுஜனத் தொடர்பாடல் மூலம் அரசியல் சூழ்நிலையின் அசாதாரணத்தைப் பற்றி இளைஞர்களுக்குக் மக்களுக்கும் கற்பித்தார்கள். அரசை எதிர்க்க மக்களை ஊக்குவிப்பதற்காக வானொலியைப் பயன்படுத்தினார்கள். இது பல நாடுகளில் நடந்திருக்கிறது. இலங்கையில்; விடுதலையின் அவசியத்தையும் மகத்துவத்தையும் விடுதலைப் புலிகள் மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக வான்வெளிக்குச் சென்றார்கள். அதற்காக ‘புலிகளின் குரல்’ வானொலியை ஆரம்பித்தார்கள். இது வானலையில் புரட்சிகரமானதான தமிழ்ஒலியாகப் பார்க்கப்படுகிறது.
வானலையில் தமிழ்ஒலி 13 : புலிகளின் குரல்
சுதந்திர வானொலி
------------------------------------
வாலையில் தமிழ்ஒலிபரப்பு தொடரில் இது வரை பி.பி.சி தமிழ், வெரித்தாஸ் வானொலியின் தமிழ் ஒலிபரப்பு மற்றும் மொஸ்கோ வானொலியின் தமிழ் ஒலிபரப்புக்கள் பற்றிப் பாரத்தோம். உலகின் ஒலிபரப்பு சேவைகள் அரசுகளின் கட்டுப்பாட்டிலும் தனியாரின் கட்டுப்பாட்டிலுமாக காணப்படுகின்றன. அரச வானொலிகளுக்கு மாற்றாக பல சமுதாய ஒலிபரப்புக்களும் வந்திருக்கின்றன. இவற்றோடு உலகெங்கும் முக்கியம் பெறுவதாக அமைந்திருப்பது. விடுதலை இயக்கங்களின் வானொலிச் சேவைகள். விடுதலை இயக்கங்கள் தமது கருத்தியலை வெளிப்படுத்துவதற்காக வானொலிகளைப் பயன்படுத்தியிருக்கின்றன. இது சட்டவிரோத ஒலிபரப்பாக அரசுகளால் பார்க்கப்பட்டுள்ளன. நாட்டுக்குள்ளேயும் நாட்டுக்கு வெளியேயும் இருந்து இவ்வாறான வானொலிகள் ஒலிபரப்புக்களை மேற்கொண்டிருக்கின்றன.இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைப்புலிகள் இலங்கை அரசோடு போரிட்டார்கள். அந்தச் சூழலில் தமக்கான வானொலியொன்றை உருவாக்கினார்கள்.
Subscribe to:
Posts (Atom)