Showing posts with label Popular Dramas. Show all posts
Showing posts with label Popular Dramas. Show all posts

Wednesday, 30 March 2022

அற்புதம், பேரானந்தம்.

சென்னையில் ஒரு ஆத்மாத்தமான நண்பர் ஆமுதன்இ ஆசிரியர் தினமலர் நகரப்பதிப்பு. சென்னை செல்லும் போதெல்லாம் அவரைச்ந்திப்பதும் அவரது வீட்டில் உணவு உண்பதும் அவரோடு ஞாயிறு தினங்களில் கிராமங்களுக்கு பயணிப்பதும் சுவாரிசியமான அனுபவங்கள். மே 03இ 2019 அன்று அவருடன் இருளர் கிராமம் ஒன்றிற்கு சென்றிருந்தேன். பழங்குடிகளில் ஒருவகைமை சார்ந்தவர்கள் இருளர். அவர்களுடன் பணியாற்றும் சிலரை ஊக்குவிக்கும் முகமாக தன்னிடமிருந்த புத்தகச் சேகரிப்புக்கிளில் ஒரு தொகுதியை அந்தக்கிராமத்து சிறிய நூலகத்திற்காக அமுதண்ணா ஒப்படைத்தார் அப்போது அந்தச் சிறார்களோடு சேரந்து சில அரங்கச்செயற்திட்டங்களை செய்து மகிழந்தோம். அற்புதம் பேரானந்தம்.