Wednesday 1 February 2017

முதுகெலும்பில்லாத செயலாளர் -03


விடியக்காத்தால கண்ணமுழிச்சு கட்டிலால எழும்ப கேற்றடியில் “அப்புச்சி….அப்புச்சி “ என்று கூப்பிட்டுக் கொண்டு சொந்தக்காரர் ஒருத்தர் வாசல்ல வந்து நின்றார். அவசரமா வந்த சலத்தையும் அடக்கிக்கொண்டு ஓடிப்போய் கேற்றத் திறக்க “அப்புச்சி நீ உலகம் தெரிஞ்சனி உரெல்லாம் நியாயங்கள் பிளக்கிறாய். இஞ்ச சொந்தத்துக்க நடக்கிற பிடுங்குப்பாடுகள் ஒன்றும் உனக்குத் தெரியாது…”என்று கேற்றத்திறந்து உள்ளுக்க வராதுக்கு முன்னமே அந்தாள் குழறத்தொடங்கிட்டு.


 “பொறு….. பொறு…வந்ததும் வராததுமா ஏன் குளறுறாய். ஆறுதலா வந்து உள்ளுக்க இரு. நீ வாசல்ல இருந்து கத்த பக்கத்து வீடுகள் விடுப்பு பார்க்க யன்னலுக்கால தலையை நீட்டப்  போகுதுகள். உள்ள வந்து இரு. ஆறுதலா கதைக்கலாம். எனக்கு அவசரமா சலம்வருகுது போயிட்டு வாறன். என்று போட்டு ஓடிப் போனன். சும்மாவே சொன்னவங்கள் “ஆத்திரத்தை அடக்கினாலும் மூத்திரத்தை அடக்கேலாதென்று” பாத்றூ}ருமுக்க போக கொமேட்டெல்லாம் பெரிய கறுத்த கட்டெறும்புகள் பொய்ச்சுக் கொட்டிருந்துகள். பின்ன ஒரு வாளி தண்ணி எடுத்து அடிச்சுக் கழிவிப்போட்டு கடமையை முடிச்சு வடவேண்டியதாப் போய்ச்சு.

இந்தக் கட்டெறும்புகளைப் பார்க்க முன்னம் ஒரு நாடகம் போட்டவங்கள் அதுக்கு பெயர் சிஙகப்பூர் டொக்கரர் அது தான் ஞாபகம் வந்தது. அதில் சிஙகப்பூருக்குப் போய் அன்ரண்டன் வேலை பார்த்தவர் ஊருக்குத் திரும்பி வந்து ஒரு கிளிக் சென்ரர் ஒன்று திறந்து தான் ஒரு டொக்ரர் என்று சொல்லி நடத்திறார். அதில சலம் சோதிக்கக் கொண்டு வந்து சனங்கள் கொடுக்குதுகள். அதை போத்தில்ல வாங்கி வைக்கினம். அடுத்தனாள் விடிய போத்தில்ல எறும்பு மொச்சிருந்தா அவருக்கு சலரோகம் இருக்குமென்று தீர்மானிமப்பார் டொக்கரர்.பிறகு அதுக்கு மருந்து கொடுப்பார்.

ஏனக்கும் எறும்புகள் மொச்சுக்கிடந்ததைப்பார்க்க அந்த சிங்கப்பூர் டொக்கர் தான் ஞாபகம் வந்தார். அதில இன்னுமொரு விசயமும் வரும் டொக்கடருக்கு மருந்துகள் அதுகள் பற்றி எதுவும் தெரியாது. உந்த மருந்து விக்கிற பையன் ஏதோ மெடிக்கல் ரெப்பாம் அவன் கொண்டு வந்து ஒரு குளுசையைக் கொடுப்பான் அதுக்குப் பேர் ‘எல்லாமைசின்’ அதை எல்லா வைத்தியத்துக்கும் கொடுக்கலாம் என்று சொல்லுவான். இந்த போலி டொக்டர் தன்னட்ட வாற எல்லாருக்கும் அந்த எல்லாமைசின் குளுசையைத் தான் கொடுப்பார்.

அண்டைக்கு பேரப்பிள்ளை ஒன்றுக்கு சுகமில்லை என்று டொக்டர் ஒருத்தரை போய் பார்த்து காட்டப்போனன். புக்கத்தில இருந்த ஒரு படிச்சவர் சொல்லுறார் இப்ப எந்த டொக்ரரிட்டக் காட்டினாலும் அவை எல்லாரும் ‘ஒக்மன்ரில்’ என்ற மருந்தைத்தான் எழுதியினம்’ என்றார். ஆப்ப நினைச்சன் இப்பவும் சிங்கப்பூர்; டொக்கரர் நாடகத்தில் சொன்னது போல ‘எல்லாமைசின’; என்ற மருந்து வைத்திட்டுது போலவென்று.

 இதை நினைச்சுக் கொண்டு அங்கால திரும்ப பேரப்பினள்ளை சொன்னான் தாத்தா இங்க பாருங்கோ 18 பேர் ரை கட்டிக் கொண்டு நிக்கினம் யார் இவையள்? அப்பதான நானும் திரும்பிப் பார்த்தன் டொக்கரைப்பார்க்க 18 மெடிக்கல் றெப்மார் படைசூழநிற்கினம். இதுகளை மனசுக்க ஓடவிட்டுக் கொண்டு காலைக் கடமைகளை முடிச்சுப்போட்டு வர. வுpடியக்காத்தால சீறிக்கொண்டு வந்தவர். அடங்கி ஒடுங்கி நின்றார். ஏன்ன என்று கேட்க்க ‘உனக்குத் தெரியுமோ….என்ர பக்கத்து வீட்டுக்காரன் உன்ர சகோரன் மதில் கட்டேக்க இரண்டு இங்சி என்ர பக்கத்திற்கு தள்ளிக் கட்டிப்போட்டான். நீ தான் வந்து மத்தியஸ்தம் பார்க்க வேணும்” நான் என்னத்தை மத்தியஸ்தம் பார்க்கிறது. இரண்டிஞ்சி  நிலத்துக்கு துடிக்கிறவர். ஏவ்வளவு நிலம் பறிபோகுது அதைப்பற்றி யோசிக்கிறாங்களே என்று மனசுக்க நினைச்சுக் கொண்டு, “நான் என்னத்தை ம்தியஸ்தம் செய்யிறது.” நீங்கள் தான் பேசித் தீர்க்க வேணும். “அவையளோட பேசேலாது” பேசினா சண்டைக்கு வருகுதுகள். நீதான் பேசவேணும்” என்று ஒற்றக்காலில நின்டான் பாவி . அதுக்கு நான் சொன்னன் பொறு ஐ.நா. வின்ர செயலாளரா இருந்த பான் கீ மூன் இப்ப பிறியாத் தான் நிக்கிறார்.


 ஆவரிட்ட ஒருக்கா கேட்டுச் சொல்லுறன் உன்ர ரெண்டிஞ்சி நிலத்தை மீட்டுத் தரச் சொல்லி” என்று நான் தொடர உடன அவன் கோபப்பட்டு “ உனக்கு எப்பவும் உந்த விண்ணாணக் கதைதான். நான் என்ன பேப்பர் வாசிக்pறதில்லையென்றே நினைச்சாய். அவனை மத்தியஸ்தத்திற்கு கூப்பிட்டா இரண்டிஞ்சி நிலத்திற்குப்பதிலா என்ர இரண்டு பரப்பு காணியையும் பறிகொடுக்க வேண்டி வந்திடும். அவன் ஒரு முதுகெலும்பில்லாதவன் அவனப்போய் என்ர பிரச்சினைக்கு கூப்பிடென்றியாய்” என்று குழறிக்கத்திக் கொண்டு வந்தவன் வெளிக்கிட்டுப் போயிட்டான். மழைவிட்டு ஓய்ந்தது போல இருந்திச்சு. பான் கீ மூனால அவன்ர அறுவையில இருந்து தப்பிச்சன்.
பிறகு,தேத்தண்ணியைக் குடிச்சிட்டு ஓடிப்போய் பேப்பரை வாங்கிக்கொண்டு வந்து பேப்பரைத்திறந்தா ‘பான்கீ மூன் மைத்திரியிட்டை விடைபெற்றுக் கொண்டார்’ என்று இருந்துது. இவன் பாவி மகிந்த அரசாங்கம் தமிழரைக் கொன்று குவிக்க உவன் பான்கீமூன் அதுக்கு சாட்சியா இருந்தவனேயல்லாமல் ஆதைத்தடுத்தவனே. இந்த இரண்டாம் உலக யுத்தம் முடிஞ்சாப்பிறகு அப்பிடியொன்று இனி வரக்கூடாது சண்டையள் சச்சரவுகள் வராமல் தடுக்க வேணும் என்றதுக்காககத் தான் ஐக்கிய நாடுகள் சபை என்ற ஒன்றைத் தொடக்கினவங்கள். ஆனால் எங்கடை விஷயத்தில மத்திய கிழக்கில என்ன நடந்தது. ஐக்கிய நாடுகள் சபையை சாட்சியா வைத்துக்கொண்டே எல்லா அநியாயத்தையும் செய்து முடிச்சுப் போட்டாங்கள்.

உலகத்து மூன்றாம் உலகப்போர் ஒன்றை நாசுக்காகத் தொடக்கிப்போட்டு உவன் பான்கீமூன் போயிட்டான் என்றும் விமர்சிக்கிறாங்கள். மைத்திரியிடமிருந்து விடைபெறுகிற அளவிற்கு உறவு இருந்திருக்குத் தானே பாருங்கோ. சனங்கள் சாகேக்க ஒன்றும் செய்யாமல் பார்த்துக் கொண்டிருந்த உந்தாளை அப்ப ஊடகக்காரர் ‘முதுகெலும்பில்லாத செயலாளர’; என்றளவிற்கு எழுதுனவங்கள். ‘அம்மலத்திலாடினதுகள் படுக்கையிலயிருந்தும் பாயப்பாய பிக்கிறதென்று சொல்லுவினம்.’ அதைபபோல ஐ.நா. பதவியால இறங்கினவன் பாவி சிவனேயறு கிடக்காமல். தென்கொரியாண்ட ஜனாதிபதியை பதிவியிறக்க அதுக்கு நடக்கிற தேர்தலில தென்கொரியாண்ட ஐனாதிபதிப் பதவிக்கு போட்டி போடப் போறானாம். பதவியிலிருந்து ருசிச்சவங்களுக்கு பதவியில்லாமல் இருக்க முடியாது. பலதையும் பத்தையும் நினைச்சுக் கொண்டு பேப்பரை மூடிவைச்சுப் போட்டு விளக்குமாற எடுத்து முற்றத்தை கூட்ட ஆரம்பிச்சன்.

No comments:

Post a Comment