தொன்னூறுகளில் விடுதலைப்புலிகள், விடுதலை இயக்கத்தின் போராட்ட நோக்கத்தை மக்களுக்கு உணர்த்தவும் இயக்கத்திற்கும்
மக்களுக்கும் இடையே தொடர்பை விரிவுபடுத்தி வலுப்படுத்தவும்; ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டிய நிலையில் இருந்தார்கள். இதற்குக்காரணம் விடுதலைப்புலிகள் ;தமது தலைமறைவு வாழ்வை மெல்ல முடிவுக்குக் கொண்டு வந்து மக்கள் முன் வெளிப்படையாக வந்தார்கள், தமது ஒவ்வொரு செயற்பாட்டுக்கும் மக்கள் முன் விளக்கம் கொடுக்க வேண்டிய கட்டாய நிலை காணப்பட்டது போலும். தமது முகங்களைக்காட்டி பொதுவெளிக்கு வந்த பின்னர் மக்களின் கேள்விகளுக்கு விடைகொடுக்க வேண்டிய சூழல் இயல்பாகவே தோன்றியிருந்தது இதனை புலிகள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதனை எதிர்கொள்வதற்காக ஊடகங்களை நன்கு திட்டமிட்டு தந்திரோபாயமாகப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். இந்தக்காலகட்டம் புலிகள் கரந்தடிப்படையாக இருந்து மரபுவழி இராணுவமாகவும் தம்மை பரிணாம வளர்ச்சிக்குள் இட்டுச் சென்ற செயல் முறையும் நடைபெற்றதை இனங்காண முடியும்.