Saturday, 31 July 2010

மந்திரி மனை

யாழ்ப்பாணம் ,நல்லூர் ,பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோயிலுக்கு சற்றுத் தெற்காக நல்லூரின் பாரம்பரிய வரலாற்றை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது மந்திரி மனை.

இதன் கட்டட அமைப்பும் மரத்தாலான சிற்ப்ப வேலைப்பாடுகள் நூதனமான கலை மரபை எடுத்துக்காட்டுகின்றன.

பொதுவாக வெளித்தோற்ற அமைப்பும் ஒல்லாந்தர் கால கலை மரபைப்பின்பற்றி நின்றாலும் அதில் சுதேச கலை மரபும் கலந்திருப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.இங்கிருந்து ஜமுனா ஏரிக்குப் போவதற்கான சுரங்கப்பாதை காணப்பட்டதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Photo by Thevananth

No comments:

Post a Comment