Saturday, 31 July 2010

யமுனா ஏரி



நல்லூர் சங்கிலியன் கல் தோரணை வாசலுக்குக் கிழக்கே சில யார் தூரத்தில் அமைந்துள்ளது இந்த யமுனா ஏரி.நல்லூர் ராச தானி காலத்து முக்கிய நினைவுச் சின்னங்களில் ஒன்றாக இது இன்றும் போற்றப்படுகின்றது.



யாழ்ப்பாண அரசர்களில் ஒருவரான சிங்கைப்பரராசசேகரன் என்பவன் தனது சமய ஆர்வமிகுதியால் தானும் குடிகளும் நன்மை பெறக்கருதி 1478 ஆம் ஆண்டில் யமுனா ஆற்றிலிருந்து காவடியாக நீரைக் கொண்டு வந்து பிரதிட்டை செய்ததால் இப்பெயர் பெறப்பட்டதாக முதலியார் இராசநாயகம் தெரிவிக்கிறார்.



‘ப’ வடிவில் அமைந்த இவ்வேரி பொழிந்த முருகைக்கற்களையும்,வெள்ளைக்கற்களையும் கொண்டு கட்டப்பட்டுள்ளது.



இவ்வேரியைச் சுற்றி சில கட்டடத் தொகுதிகள் இருந்திருக்கலாம் என்பதை இங்குள்ள செங்கட்டி வேலைப்பாடுடைய சுண்ணாம்முச் சாந்தினால் ஆன தூண்கள் பழைய ஓடுகள்,பட்பாண்டங்கள் என்பன உறுதிப்படுத்துனின்றன.சிலர் இவ்விடத்தில் அரச மகளீர் குளிப்பதற்கான மண்டபங்கள் இருந்ததாகக் கருதுகின்றனர்.

No comments:

Post a Comment