Sunday, 1 August 2010

நல்லூர் கோவில்



Photo by Thevananth
நல்லூரின் ஆதி கோயில் போத்துக்கேயரால் இடிக்கப்பட்டதாகும்.இது பற்றி குவேறோஸ் சுவாமிகள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.









‘யாழ்ப்பாணத்தை இறுதியாக வென்ற போத்துக்கேய தளபதி பிலிப்டி ஒலிவீரா 1620 இல் நர்லூருக்குச் சென்றான் அங்கிருந்த பெரிய கோயிலிலே கிறிஸ்தவர்கள் அல்லாதவர் மிக்க ஈடுபாடு உடையவர்கள்.அவர்கள் அதனை அழியாது விட்டுச் சென்றால் அவன் விரும்பிய எல்லாவற்றையும் வழங்குவதாகவும் பலமுறை வாக்குறுதி செய்து வந்தனர்.ஆனால் அவன் மதப்பற்றுமிக்க கத்தோலிக்கனாகையால் அவர்களின் நடவடிக்கை அக்கோயிலை அவன் அழிக்கக்கொண்டிருந்த விருப்பத்தை மேலும் அதிளரிக்கச் செய்தது.எனவே அதன் அத்திவாரத்தையும் இல்லாது அழிக்கக் கட்டளையிட்டான்.’

இக்கூற்றை யாழ்ப்பாண வைபவமாலை உறிதிப்படுத்துகிறது.


போத்துக்கேயரால் இடிக்கப்பட்ட பழைய கந்தசுவாமி கோயிலானது தற்போது முத்திரைசந்தியில் அமைந்துள்ள சங்கிலியன் சிலைக்கு முன்புள்ள கிறிஸ்தவ ஆலயத்தை அண்டியுள்ள பகுதியில் இருந்துள்ளது என்பதற்கு சில தொல்லியல் ஆதாரங்கள் உள்ளன.

No comments:

Post a Comment