Tuesday, 21 November 2023

வானலையில் தமிழ்ஒலி 13 : புலிகளின் குரல்


சுதந்திர வானொலி
------------------------------------



வாலையில் தமிழ்ஒலிபரப்பு தொடரில் இது வரை பி.பி.சி தமிழ், வெரித்தாஸ் வானொலியின் தமிழ் ஒலிபரப்பு மற்றும் மொஸ்கோ வானொலியின் தமிழ் ஒலிபரப்புக்கள் பற்றிப் பாரத்தோம். உலகின் ஒலிபரப்பு சேவைகள் அரசுகளின் கட்டுப்பாட்டிலும் தனியாரின் கட்டுப்பாட்டிலுமாக காணப்படுகின்றன. அரச வானொலிகளுக்கு மாற்றாக பல சமுதாய ஒலிபரப்புக்களும் வந்திருக்கின்றன. இவற்றோடு உலகெங்கும் முக்கியம் பெறுவதாக அமைந்திருப்பது. விடுதலை இயக்கங்களின் வானொலிச் சேவைகள். விடுதலை இயக்கங்கள் தமது கருத்தியலை வெளிப்படுத்துவதற்காக வானொலிகளைப் பயன்படுத்தியிருக்கின்றன. இது சட்டவிரோத ஒலிபரப்பாக அரசுகளால் பார்க்கப்பட்டுள்ளன. நாட்டுக்குள்ளேயும் நாட்டுக்கு வெளியேயும் இருந்து இவ்வாறான வானொலிகள் ஒலிபரப்புக்களை மேற்கொண்டிருக்கின்றன.
இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைப்புலிகள் இலங்கை அரசோடு போரிட்டார்கள். அந்தச் சூழலில் தமக்கான வானொலியொன்றை உருவாக்கினார்கள். 



ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் போராட்டச் சம்பவங்களை, கள நிலமைகளை. அரசியல் நகர்வுகளை, போராட்டப் பிரச்சாரங்களை மக்களிடத்தே கொண்டு சென்று சேர்ப்பதற்கு நடு நிலையான ஊடகம் ஒன்று இல்லையே என்று ஆதங்கப்பட்ட புலிகள் அமைப்பினரின் முதல் முயற்சியாகப் புலிகளின் குரல் எனும் பெயர் கொண்ட பத்திரிகை 1988ம் ஆண்டின் நடுப் பகுதியில் ஆரம்பிக்கிறார்கள். காலவோட்ட மாற்றத்தில் புலிகளின் குரல் எனும் பத்திரிகையினைப்  புலிகளின் குரல் எனும் பெயரில் வானொலியாக மாற்றம் செய்து மக்களுக்கு தமது செய்திகளைப் பகிரும் முயற்சியை ஆரம்பித்தார்கள். புலிகளின் குரல் (ஏழiஉந ழக வுபைநச ) தனது முதலாவது ஒலிபரப்பு முயற்சியினை 21.11.1990 அன்று ஆரம்பிக்கிறது..
“எதிரியின் பொய்ம்மையான கருத்துப் போருக்கு எதிராக உண்மையின் ஆயுதமாக எமது வானொலியின் குரல் ஒலிக்க வேண்டும். ஒரு சத்திய யுத்தத்தின் போர் முரசாக புலிகளின் குரல் ஒலிக்க வேண்டும்” என்று புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் குறிப்பிடுகிறார்.
விடுதலை இயக்கங்கங்கள் தமக்கான வானொலியை உருவாக்குவதை தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸிலிருந்து இனங்காண முடியும். அதன் வரலாற்றை சற்று உற்று நோக்குவது புலிகளின் குரல் ஒலிபரப்பை புரிந்து கொள்ள உதவியாக இருக்குமென்று எண்ணுகிறேன்.

 தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸ் ‘சுதந்திரம் வானொலி’ என்ற எண்ணக்கருவை முதலில் முன்வைக்கிறது. நிறவெறிக்கு எதிரான வெகுஜன எதிர்ப்பின் முதல் அலையின் போது அறுபதகளில்; சுதந்திர வானொலி உருவாகின்றது. 1960 ஆம் ஆண்டில், ஜோகன்னஸ்பர்க்கிற்கு தெற்கே உள்ள ஒரு நகரத்தில் வன்முறையற்ற எதிர்ப்பாளர்கள் கூட்டத்தின் மீது பொலிசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர் இதில் 69 பேர் கொல்லப்பட்டனர். இதன் பின்னர் தென்னாபிரிக்க தேசிய காங்கிரஸ் ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தார்கள். ஆயுதப் பிரிவின் முதல் தளபதியாக இருந்த மண்டேலா, கொரில்லா பயிற்சிக்காக எத்தியோப்பியாவுக்குச் சென்றார், பின்னர் தென்னாப்பிரிக்காவுக்குள் நுழைந்து 190 க்கும் மேற்பட்ட குண்டுவெடிப்புகளையும் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தினார். பின்னர் அவர் கைது செய்யப்பட்டார்.
ஜூன் 1963 இல், சுதந்திர வானொலி நிலையம் உருவாக்கப்பட்டு முதல்  ஒலிபரப்பு ஜோகன்னஸ்பர்க்கின் வடக்கே ஒரு பண்ணையில் ஆயுதப் பிரிவின் மறைவிடத்திலிருந்து நடைபெற்றது. "தென்னாப்பிரிக்காவின் எங்கிருந்தோ நான் உங்களுடன் பேசுகிறேன்" என்று கட்சித் தலைவரும் மண்டேலாவின் வழிகாட்டியுமான வால்டர் சிசுலு அறிவித்தார். இதுவே சுதந்திர வானொலியின் முதலாவது ஒலிபரப்பாகும். தொடர்ச்சியாக தென்னாபிரிக்காவிலிருந்து சுதந்திர வானொலி இயங்க முடியாமல் போனது பின்னர்  தான்சானியா, எத்தியோப்பியா மற்றும் மடகாஸ்கர் போன்ற கறுப்பு நாடுகளிலிருந்து ஒளிபரப்பப்பட்டது. எவ்வாறாயினும், காலப்போக்கில், 1964 ஆம் ஆண்டில் ஆங்கிலேயரிடமிருந்து சுதந்திரம் பெற்ற சாம்பியா - யுNஊ-in-நஒடைந இன் தலைமையகமாக மாறியது. இது சுதந்திர வானொலியின்; வீடாகவும் மாறியது. இந்த வானொலி நிலையத்தின் அறிப்பாளர்கள் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் எல்லோரும் நெதர்லாந்து முதல் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஜெர்மனி வரை உலகம் முழுவதும் பயிற்சி பெற்றன. சாம்பியாவுக்குத் திரும்பியதும், அவர்கள் தங்கள் நிபுணத்துவத்தை தமது ஒளிபரப்புகளில் சேர்த்தனர்.

1984 ஆம் ஆண்டு சுதந்திர வானொலியின் அறிவித்தல், "பிரிட்டோரியா தனது கொலைகார பிரச்சாரத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளது. எதிரியின் பிற்போக்கு வன்முறைக்கு நாம் இப்போது நமது சொந்த புரட்சிகர வன்முறையுடன் பதிலளிக்க வேண்டும்.” என்று ஒலிபரப்பானது
மேலும், அறிவிப்பாளர் தனது கேட்போருக்கு வெள்ளை வீடுகளில் இருந்து துப்பாக்கிகளைத் திருடவும், வீட்டில் வெடிகுண்டுகளை தயாரிக்கவும், தனிமைப்படுத்தப்பட்ட காவல் நிலையங்களைத் தாக்கவும் அறிவுறுத்தினார். இதனால் சுதந்திர வானொலியைக் கேட்பவர்கள் கைது செய்யப்பட்டார்கள். ஆனாலும் ஒரு வானொலி நிகழ்ச்சியைக் கேட்டதற்காக கைது செய்யப்படுவதைப் பற்றி யாரும் கவலைப்படவில்லை.  அதே வேளை சுதந்திர வானொலி தூரத்திலிருந்தே எழுச்சியை நிர்வகிக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தது.
1986 "மனித மைக்ரோஃபோன்" (மனித ஒலிபெருக்கி) என்ற எண்ணக்கரு விருத்தியாகியிருந்தது. அதாவது  இரவில் சுதந்திர வானொலி; கேட்டார், மறுநாள் காலையில், அவரகள்; கேட்டதை சத்தமாக, பொது இடங்களில் மீண்டும் மீண்டும் கூறினார்கள். அதனையே  மனித மைக்ரோஃபோன்  என்று குறிப்பிட்டார்கள்.
சுதந்திர வானொலியின் பணியால் பிப்ரவரி 1990 இல், மண்டேலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது நாடுகடத்தப்பட்ட தனது தோழர்களை சந்தித்தார் அப்போது,
"வரலாறு என்பது மன்னர்கள் மற்றும் தளபதிகளால் அல்ல, மாறாக மக்களால் உருவாக்கப்பட்டது என்ற வெளிப்பாட்டை நான் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறேன்," என்று அவர் கூறினார். சுதந்திர வானொலி அதனை ஒலிபரப்பியது. இதன் பின்னர் சுதந்திர வானொலி தனது தாய்நாடான தென்னாபிரிக்காவிற்கு மீண்டது.
தொடரும்)



No comments:

Post a Comment