நடிப்பு முறைகளின் கலப்பு புத்தாக்கம் அல்ல அது புரிதலற்ற செயற்பாடு
------------------------------------------------
பேராசிரியர் மௌனகுரு அவர்கள் இன்று சமூக ஊடகங்களில் (17.04.2026) பிரசுரித்த ‘நடிப்பு முறைகளின் கலப்பு’ என்ற தலைப்பிலான கட்டுரைக்கான ஒரு விவாத களத்தை உருவாக்கும் நோக்குடன் இந்த பதிலிறுப்பு அமைகிறது. துறைசார்ந்தோருக்கிடையிலான மோதல்கள் ஆராக்கியமான விவாதங்களுக்கும் கற்றலுக்கும் வழிவகிக்கும் என்ற நம்பிக்கையில் இதனை பிரசுரிக்கிறேன்.
பேராசிரியர் மௌனகுருவின் இந்தக் கட்டுரை ‘நடிப்பு முறைகளின் கலப்பு’ என்று விளக்குகிறது. ஆனால் இந்த அணுகுமுறை நடிப்பின் அடிப்படை இயல்பை தவறாகப் புரிந்து கொள்ளும் ஒரு பொதுமைப்படுத்தலாகும். நடிப்பு என்பது வெளியில் இருந்து எடுத்துக்கொள்ளப்பட்ட பாணி/கூறுகளின் சேர்க்கை அல்ல; அது நடிகனின் உள்ளார்ந்த அனுபவத்தின் வெளிப்பாடு.
முதலில் பல்வேறு நடிப்பு முறைகள் ஒன்றோடொன்று கலக்கின்றன என்ற கருத்து ஏற்புடையதாக எனக்குத் தெரியவில்லை. இங்கு பாணி என்பது ஒரு கட்டமைப்பு; ஆனால் நடிப்பு உயிர் பெறுவது நடிகனின் செயல்பாட்டின் மூலம் தான். அதாவது பாணி என்பது ஒரு கருவி மட்டுமே நடிப்பு அல்ல.
மேலும் பல பாணிகளை ஒன்றிணைத்தல் என்பது உண்மையில் “கலப்பு நடிப்பு” அல்ல; அது நடிகனின் பயிற்சி பரப்பை விரிவாக்கும் ஒரு செயலாகும்.. நடிகன் பல முறைமைகளை கற்றுக்கொள்வது அவற்றை ஒரே நேரத்தில் கலக்குவதற்காக அல்ல; மாறாக அவற்றைத் தனித்தனியாக உடலில் நிலைநிறுத்திக் கொண்டு தேவையான சூழலில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்துவதற்காக என்றே நான் கருதுகிறேன்.
இதனால் “அனைத்து முறைமைகளையும் ஒன்றிணைத்தல்” என்பது ஒரு கலப்பு அல்ல; நடிப்பு புரிதலுள்ளவர்கள் அவ்வாறு கலக்க முடியாது என்பது தான நிஜம். அது ஒரு நிபுணத்துவப் பயிற்சி . இது ஒரு இசைக்கலைஞன் பல ராகங்களை கற்றுக்கொள்வதுபோல் என்று கொள்ளலாம். அவன் அவற்றை எல்லாம் ஒரே நேரத்தில் கலக்க மாட்டான்; அவற்றைத் தேவைக்கேற்ப பயன்படுத்துவான்.
மேலும் “கலப்பே உண்மை” என்ற வாதம் நடிப்பின் ஒருமைப்பாட்டை பாதிக்கிறது. அதாவது பல அணுகுமுறைகளை ஒரே நேரத்தில் பயன்படுத்தும் போது நடிப்பு வடிவம் குழப்பமடையும் அபாயம் உள்ளது; குறிப்பாக உணர்ச்சி மையமான நடிப்பில், அதிகமான வெளிப்புற பாணி களின் தலையீடு “அரங்கியல் வடிவத்தை” (theatrical form) பலவீனப்படுத்தும்.
அதேபோல்,: “நல்ல நடிப்பு” என்பது பாணிகளின் சேர்க்கையால் வருவது அல்ல; அது ஒரு தெளிவான உள்நிலை (inner logic) மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வெளிப்பாட்டின் விளைவு. கலப்பு அதிகரித்தால், இந்த உள்நிலை சிதைவடையும் அபாயம் உண்டு.
நடிப்பு என்பது முதன்மையாக “உடல் – மனம் -ஆழ்மனம்” ஆகியவற்றின் ஒருங்கிணைந்த செயல்பாடு. நடிப்பு என்பது ஒரு embodied process அது உடலில் உருவாகும் அனுபவம். இந்த அனுபவம் வெளிப்புற பாணிகளை mechanically சேர்ப்பதன் மூலம் உருவாகாது.
அதனால்இ இந்தக் கட்டுரையில் முன்வைக்கப்படும் “நடிப்பு முறைகளின் கலப்பு” என்ற கருத்து, ஒரு தவறான புரிதலுக்கு வழிவகுக்கிறது. உண்மையில் அங்கு நிகழ்வது “கலப்பு” அல்ல; “தேர்வு” .
எனவே,
நடிப்பு என்பது
முறைமைகளின் கலப்பு அல்ல;
அது நடிகனின்
உடல் உணர்ச்சி, ஆழ்மன அனுபவம் மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட வெளிப்பாட்டின் ஒன்றிணைவு.
நடிப்பு முறைமைகள் நடிப்பை வடிவமைக்க உதவும்;
ஆனால் அவை ஒன்றோடொன்று கலந்து புதிய கலப்பு நடிப்பு பாணி உருவாகிறது என்பது தவறான முடிவு. இது புத்தாக்கமல்ல மாறாக புரிதலற்ற செயற்பாடு

No comments:
Post a Comment