Dr.தேவநாயகம் தேவானந்த்
இலங்கை அரசி மற்றும் தேங்காய்த்தட்டுப்பாட்டில் திண்டாடுகிறது. பாராளுமன்றத்தில் இதற்கு விநோதமான காரணங்கள் தெரிவிக்கப்படுகின்றன. அண்மையில் ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இலங்கையில் அரிசித்தட்டுப்பாட்டுக்குக்காரணம் இலங்கையில் உள்ள நாய்கள் என்று புதிய கண்டுபிடிப்பை வெளியிட்டு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். ஏதிர்காலத்தில் நாய் ஒழிப்புத் திட்டம் ஒன்றுக்கான முன்மொழிவாகவும் அதனைக்கருதலாம். இந்தச் சுழலில் "அரிசிக்கு அரோகரா" என்று சொல்லத் தூண்டுகிறது. இது பொதுவாக அரிசிக்காக வாழ்த்தும் ஒரு கோஷமாக கருதமுடியும்.
