Showing posts with label Srilankan Tamils. Show all posts
Showing posts with label Srilankan Tamils. Show all posts

Tuesday, 21 November 2023

வானலையில் தமிழ்ஒலி 13 : புலிகளின் குரல்


சுதந்திர வானொலி
------------------------------------



வாலையில் தமிழ்ஒலிபரப்பு தொடரில் இது வரை பி.பி.சி தமிழ், வெரித்தாஸ் வானொலியின் தமிழ் ஒலிபரப்பு மற்றும் மொஸ்கோ வானொலியின் தமிழ் ஒலிபரப்புக்கள் பற்றிப் பாரத்தோம். உலகின் ஒலிபரப்பு சேவைகள் அரசுகளின் கட்டுப்பாட்டிலும் தனியாரின் கட்டுப்பாட்டிலுமாக காணப்படுகின்றன. அரச வானொலிகளுக்கு மாற்றாக பல சமுதாய ஒலிபரப்புக்களும் வந்திருக்கின்றன. இவற்றோடு உலகெங்கும் முக்கியம் பெறுவதாக அமைந்திருப்பது. விடுதலை இயக்கங்களின் வானொலிச் சேவைகள். விடுதலை இயக்கங்கள் தமது கருத்தியலை வெளிப்படுத்துவதற்காக வானொலிகளைப் பயன்படுத்தியிருக்கின்றன. இது சட்டவிரோத ஒலிபரப்பாக அரசுகளால் பார்க்கப்பட்டுள்ளன. நாட்டுக்குள்ளேயும் நாட்டுக்கு வெளியேயும் இருந்து இவ்வாறான வானொலிகள் ஒலிபரப்புக்களை மேற்கொண்டிருக்கின்றன.
இலங்கையில் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக விடுதலைப்புலிகள் இலங்கை அரசோடு போரிட்டார்கள். அந்தச் சூழலில் தமக்கான வானொலியொன்றை உருவாக்கினார்கள்.