தமிழ்த் தலைவன் மு.கருணாநிதி -02
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியின் மறைவு உலகத் தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தலைவன் இல்லாத ஒரு நிலையில் இன்று தமிழினம் இருக்கிறது எனலாம். தலைவனைத் தேடும் பணியில் அல்லது தலைவன் வரவுக்காகக் காத்திருக்கும் நிலையில் தமிழ் இனம் இருக்கிறது போலும்.
ஓவ்வொரு தலைவனும் இறக்கும் போது தனக்கு அடுத்தபடியாக தலைவர்களைத் தந்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருப்பது வழமை. கருணாநிதி தனது மறைவுக்கு முன்னரே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையை அறிவித்துச் சென்றிருக்கிறார்.
தென் ஆசியப்பாரம்பரியத்திற்கு ஏற்ப்ப தனது குடும்ப வாரிசிடம் கட்சி சென்றடையக் கூடியதாக கனகட்சிதமாக காய்களை நகர்த்தி ஒரு தலைவனை கட்சிக்குக் காட்டிச் சென்றிருக்கிறார்.
பேரறிஞர் அண்ணா போன்று தன்கொள்கையின் மீதும் சித்தாந்தங்களின் மீது பற்றுறிதிகொண்டதுமான தலைமையை கருணாநிதி இனங்காட்டிச்சொல்ல வில்லை என்பது யாவரும் அறிந்த உண்மை. கருணாநிதி குடும்பம் வழிநடத்திச்செல்கின்ற ஒரு கட்சியாக திராவிட முன்னேற்றக்கழகம் இனி இருக்கப்போகின்றது. ஆனால் கருணாநிதியின் மரணம் தமிழ் தலைமையை கோடிகாட்டிச் செல்லவில்லை என்பது வெளிப்படை. அதே வேளை தமிழ்நாட்டில் திராவிடக்கட்சிகளின் வீழ்ச்சிக் காலம் ஆரம்பித்துவிட்டது என்பதற்கான தெளிவான கோடிகாட்டிச் சென்றிருக்கிறது. ஏம்.ஜி.ஆர் ஆரம்பித்த அண்ணா திராவிட முன்னேற்றக்கழத்தின் வீழ்ச்சி ஜெயலலிதாவின் மறைவோடு ஆரம்பித்திருக்கிறது. ஆக திராவிடக்கட்சிகளின் ஆட்சி முடிவுக்கு வருவதற்கான கட்டியம் கூறப்பட்டுள்ளது.
கருணாநிதியின் மறைவு ஒரு சித்தாந்தத்தில் ஒரு பேரெழிச்சியில் இனவிடுதலை உணர்வின் மறைவு என்றும் கூறலாம். கட்சியில் அடிமட்டத் தொண்டனாக இருந்து ஒரு பாசறையில் வளர்ந்து படிப்படியாக கட்யின் தலைமைக்கு வரும் பாரம்பரிய வழக்கத்தின் முடிவாகவும் பார்க்கப்படலாம். தீவிர கொள்கையின் அடிப்படையில் மக்கள் எழுச்சியின் தலைவர்களாகும் வாய்ப்பு இனி வரும் தமிழ்நாட்டின் அரசியலில் அரிதென்ற நிலைமையே காணப்படுகின்றது.
சினிமா, கலை இலக்கியங்களில் ஈடுபட்டவர் அரசியல் அரங்கில் கோலோட்சும் நிலைமை கருணாநிதியோடு முடிவடைவதையும் காணமுடியும். இன்று தமிழ்நாட்டின் அரசியலில் சினிமா ஊடகத்தின் திரைநாயகர்கள் என்ற பிம்பத்தை மட்டுமே நம்பி கட்சிகளை ஆரம்பித்து ஆட்சி பிடிக்கும் ஆசையில் நடிகர்கள் இறங்கியிருக்கிறார்;கள். அவர்களால் கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்றோர் அளவிற்கு வெற்றிபெற் முடியுமா? என்ற கேள்வி உண்டு. சினிமாக்காரனாகவும் கலைஇலக்கிய விற்பனராகவும் மட்டுமே இருந்திருந்தால் கருணாநிதியால் இத்தனை உச்சங்களைத் தொட்டிருக்க முடியாது. தீவரமான சமூக மாற்றத்திற்கான சித்தாந்தம் இருந்ததால் தான் அவரால் இந்தச்சாதனையை நிகழ்த்த முடிந்திருக்கிறது.
‘கருணாநிதி ஒரு அஸ்தமிக்காத சூரியன்’ என்று குறிப்பிடப்பட்டாலும் அவரது மறைவு திராவிட பாரம்பரியங்கள் பலவற்றின் அஸ்தமனமாக அமையப்போகிறது என்பது கவலையான உண்மை. ஆக, தமிழ் தலைவன் இல்லாது தமிழ் இனம் புதிய வரலாற்றுக்குள் புகுகின்றது.
‘புpறப்பு ஒரு சம்பவமாக இருந்தாலும் மரணம் ஒரு வரலாறாக இருக்க வேண்டும’; என்று கருணாநிதி அடிக்கடி கூறுவார்.
அவரது இறுதி ஊர்வலம் அதைத்தான் காட்டிச்சென்றுள்ளது. இலட்சோப இலட்சம் மக்கள் மெரீனாவில் ஒன்று கூடி அவருக்கு விடைகொடுத்தார்கள். தனது ஆசான் பேரறிஞர் அண்ணா அருகில் உறங்குவதற்கான தனது விருப்பத்தின் படியே அவர் உறங்கயிருக்கிறார்.
அண்ணாவை அவரது குடும்பத்தினர் குடம்ப வழக்கப்படி எரியூட்ட நினைத்த போது அவர் நினைவழியா வகையில் அவரைப் புதைந்து அவருக்கு நினைவிடம் அமைத்து நீங்காப்புகழைத்தேடிக் கொடுத்தவர் கருணாநிதி. அப்போது அண்ணாவின் கல்லறையில் என்ன எழதவேண்டுமென்று கருணாநிதியிடம் கேட்கிறார்கள். அவர் சொன்னார் ‘எதையும் தாங்கும் இதயம் இய்கே உறங்குகின்றது’ என்று எழுதுங்கள் என்றார். அந்த வாசகம் அண்ணாவின் கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ளன. அந்தக்கல்லறைக்கருகில் தான் கருணாநிதியும் உறங்குகிறார். தனது கல்லறையில் என்ன வாசகம் பொறிக்கப்பட வேண்டும் என்பதையும் தனது நெஞ்சுக்கு நீதி நூலில் குறிப்பிட்டிருக்கிறார்.
"ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வுகொண்டிருக்கிறான்” என்ற அவரது வாசகங்கள்
அவர் விரும்பியபடியே அவரது உடல் வைக்கப்பட்ட சந்தனப் பேழையில் பொறிக்கப்பட்டிருக்கின்றன
கருணாநிதி சொன்னது போலவே அவரது வாழ்வும் இறப்பு வரலாறாகியிருக்கிறது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக இல்லாத ஒருவரின் மரணத்துக்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் அஞ்சலி செலுத்தி நாள்முழுமைக்கும்; ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இதற்கு முன் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் உறுப்பினர் அல்லாத ஒருவருக்கும் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதில்லை. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து மறைந்தவர்களுக்கு மட்டுமே நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்படுவது வழமை. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்து இறந்தவர்களுக்கும் மக்களவை மாநிலங்களவை ஆகிய இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டது இல்லை. ஆனால் பதவியில் இல்லாத போது கருணாநிதிக்கு இந்த மரியாதை கிடைத்திருக்கிறது.
தேசியளவில் துக்கதினம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியப் பிரதமர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியிருக்கிறார். இந்தியக்குடியரசுத் தலைவர், சபாநாயகர் ,முன்னாள் சபாநாயகர், எதிர்கட்சித்தலைவர் என்று அனைவரும் இரங்கல் தெரிவத்திருக்கிறார்கள். பல மாநிலங்களின் முதலமைச்சர்கள் நேரில் அஞ்சலி செலுத்தியிருக்கிறார்கள். இறந்த பின்னரும் இறப்பின் போதும் வரலாறாகியிருக்கிறார் கருணாநிதி.
இரண்டு ஆயுதங்களைக் கொண்டுதான் அவர் இந்த வரலாற்றைப்படைத்திருக்கிறார். ஒன்று அவரது பேச்சுத் திறமை, இன்னொன்று எழுத்துத் திறமை. கடடுமையான உழைப்பு அவரது மூலமுதல்.
தமிழ்நாட்டை ஐந்து முறை ஆட்சி செய்த கருணாநிதி தாம் போட்டியிட்ட 13 சட்டமன்றத் தேர்தல்களில் ஒன்றில்கூட தோல்வியடைந்ததில்லை. ஏழு தசாப்தங்கள் பொது வாழ்வில் பங்களித்த மிகச் சில அரசியல் தலைவர்களில் கருணாநிதியும் ஒருவர்.
கருணாநிதிக்கு முன்பு திமுகவின் முன்னணி தலைவர்களாக இருந்த அண்ணாதுரை, மதியழகன் உள்ளிட்டோர் அப்போதே முதுகலை பட்டம் பெற்றவர்களாக இருந்தனர். ஆனால், பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய கருணாநிதி அவர்களைவிட அதிக நூல்களை எழுதினார். எழுத்து மீதான அவரது தீராக் காதல் அவரை பல உயரங்களுக்கு அழைத்துச் சென்றது.
17 வயதிலேயே இந்தித் திணிப்புக்கு எதிராக மாணவர்களை ஒன்று திரட்டிய கருணாநிதி, தமிழ்நாடு மாணவர் மன்றம் என்ற மாணவர் அமைப்பைத் தொடங்கினார்.
கருணாநிதியன் அனைத்துசெயல்பாடுகளுக்கும் சமூக நீதியே அடித்தளமாக இருந்தது.
இந்தியத் தேசிய அரசியலுக்கு கணிசமான பங்களிப்பை கருணாநிதி வழங்கியிருக்கிறார். பிரதமர் பதவிக்கான வாய்ப்புக்கள் வந்தபோதெல்லாம் 'என் உயரம் எனக்குத் தெரியும்,' என்று பெரும் தன்மையோடு ஒதுங்கியிருந்திருக்கிறார்.
மத்தியில் அரசு நிலையாக இருக்க வேண்டும் என வலியுறுத்தினாலும், ஒரே இடத்தில் அதிகாரம் குவிக்கப்படுவதை கடுமையாக எதிர்த்திருககிறார்.
தேசிய முன்னணி அரசை வி.பி.சிங் அமைத்தபோது, ஆட்சியமைப்பதில் கருணாநிதி முக்கியப் பங்காற்றினார்.
வி.பி.சிங் பதவி விலகிய பின்னும், தேவ கௌடா மற்றும் ஐ.கே.குஜ்ரால் ஆகியோரை பிரதமராகத் தேர்வு செய்வதில் கருணாநிதி முக்கியப் பங்காற்றி இந்தியளவில் வரலாற்று நாயகனாகத் திகழ்ந்தார்.
1999இல் பாரதிய ஜனதாவுடன் கூட்டணி அமைத்து மீண்டும் தேசிய அரசியலில் செல்வாக்குச் செலுத்தினார். புhரதிய ஜனதாக்கட்சிக்கு அதரவளித்த போதும் அந்தக்கட்சியின் முக்கிய விடயமாக இருந்த இராமர் விடயத்தில் ‘அது ஒரு கட்டுக்கதை’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். . ஆதற்கு ஆதரவாக
"திராவிடர்கள் மீது தங்கள் மேலாதிக்கத்தை செலுத்துவதற்காக இட்டுக்கட்டப்பட்ட கதையே ராமாயணம் என்று கூறிய ஜவாஹர்லால் நேருவைவிடவும், ராமரைக் காக்க வருபவர்கள் ஒன்றும் பெரியவர்கள் அல்ல," என்று கருணாநிதி அப்போது கூறினார்.
“வாஜ்பாயை போல அத்வானி தமிழர்களுக்கு அனுசரணையாக இல்லை” என்று கூறி 2003இல் திமுக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியது. பின்னர் காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அமைவதில் முக்கிய பங்காற்றினார்.
"கருணாநிதி; அரை நூற்றாண்டு காலமாக பொது வாழ்வில் உள்ளார். அவரது அனுபவமும் அறிவும் நாட்டை நிர்வகிப்பதில் உதவுவது எங்களுக்கு மிகவும் அதிர்ஷ~;டவசமானது," என்று மன்மோகன் சிங் கூறியது இங்கு கவனிக்கத்தக்கது.
- தேவநாயகம் தேவானந்த்
(தொடரும்)
No comments:
Post a Comment