Showing posts with label kavithal/Jaffna/tamil poiem. Show all posts
Showing posts with label kavithal/Jaffna/tamil poiem. Show all posts

Saturday, 14 September 2024

பிறப்பு ஒரு சம்பவமானாலும் இறப்பு வரலாறாக இருக்க வேண்டும்.


தமிழ்த் தலைவன் மு.கருணாநிதி -02


திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியின்  மறைவு உலகத் தமிழர்களை சோகத்தில் ஆழ்த்தி இருக்கிறது. தலைவன் இல்லாத ஒரு நிலையில் இன்று தமிழினம் இருக்கிறது எனலாம். தலைவனைத் தேடும் பணியில் அல்லது தலைவன் வரவுக்காகக் காத்திருக்கும் நிலையில் தமிழ் இனம் இருக்கிறது போலும்.
ஓவ்வொரு தலைவனும் இறக்கும் போது தனக்கு அடுத்தபடியாக தலைவர்களைத் தந்து விட்டுச் செல்ல வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடம் இருப்பது வழமை. கருணாநிதி தனது மறைவுக்கு முன்னரே திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையை அறிவித்துச் சென்றிருக்கிறார்.