தமிழ் தலைவன் மு.கருணாநிதி – 03
‘'வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம். வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்'.’ இது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கருணாநிதியின் முழக்கம்.
கருணாநிதி தனது வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்திருக்கிறார். ஓவ்வொரு போராட்டங்களையும் தனது எழுச்சிமிகு பேச்சாலும் எழுத்தாலும் தொண்டர்களைத் தட்டியெழுப்பி வென்றிருக்கிறார். தனது கடுமையான ஓயாத உழைப்பால் சவால்களை முறியடித்திருக்கிறார். ஆதனால் தான் தன் கல்லறையில் "ஓய்வெடுக்காமல் உழைத்தவன் இதோ ஓய்வுகொண்டிருக்கிறான்’ என்ற வாசங்களை எழுதச் சொல்லியிருந்தார்.
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக்கழகம் என்ற பேரியக்கத்தின் தலைவராக 50 ஆண்டுகள் வழிநடத்தியிருக்கிறார். தமிழ்நாட்டின் முதலமைச்சராக 5 முறை பணியாற்றியிருக்கிறார், தான் போட்டியிட்ட அனைத்துச் சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்று 13 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வாகி சாதனை படைத்தவர.
1924-ஆம் ஆண்டு ஜூன் மாதம் மூன்றாம் தேதி திருக்குவளை என்ற ஊரில் இசை வேளாளர் குடும்பத்தைச் சார்ந்த முத்துவேலர், அஞ்சுகம் தம்பதியருக்கு மூன்றாவது மகனாக கருணாநிதி பிறந்தார். பெரியநாயகம், சண்முகசுந்தரத்தம்மாள் என்ற சகோதரிகளும் இவர்களுக்குண்டு. தட்சிணாமூர்த்தி என்பது இவரது இயற்பெயர்.
திருக்குவளை தொடக்க பள்ளியில் ஆரம்ப கல்வி கற்று, திருவாரூர் போர்டு உயர்நிலைபள்ளியில் 5-ஆம் வகுப்பில் சேர்ந்து படித்தார். வுpளையாட்டில் ஆர்வமுள்ள கருணாநிதி பாடசாலை நாட்களில் பாடசாலை ஹாக்கி அணியில் விளையாடினார். நாடகம், கவிதை, மேடை பேச்சு ஆகியவற்றில் அதிக நாட்டம் கொண்டு விளங்கினார்.
தனது பள்ளி நண்பர்களை ஒருங்கிணைத்து ;இளைஞர் மறுமலர்ச்சி அமைப்பைத் தொடங்கினார். ஆதன் மூலம் ‘மாணவ நேசன்’ என்ற பத்திரிகையையும் நடத்தினார்.
சிறு வயதிலிருந்தே கலைகளிலும் எழுத்திலும் ஆர்வம் கொண்டிருந்த கருணாநிதி, நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பட்டுக்கோட்டை அழகிரிசாமியின் உரைகளால் கவரப்பட்டார். தனது 14 வயதிலிருந்தே அரசியலில் கவனம் செலுத்தினார்.
1937ஆம் ஆண்டு தேர்தலில் இந்தியத் தேசிய காங்கிரசு வெற்றிபெற்று சென்னை மாகாணத்தின் தற்போதைய தமிழகத்தையும், திருப்பதி அடங்கலான தெற்கு ஆந்திரா பகுதிகளையும் உள்ளடக்கியதாகவிருந்த சென்னை மகாணத்தின் முதலமைச்சராக ராஜாஜி பதவியேற்றார். தேர்தல் பிரச்சாரத்தின்போதே ஹிந்தி பயிலவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி வந்தார். தென்னிந்தியர்கள் வட மாநிலங்களில் தனியார்துறையில் வேலை தேட இந்தி பயில்வது மிகத்தேவையானது என அவர் வாதிட்டார். அதன்படியே தான் பதவிக்கு வந்ததும்; ஹிந்தி பயில்வது பாடசாலைகளில் கட்டாயமாக்கப்பட்டது. ஆறு, ஏழு, எட்டு வகுப்புகளில் படிக்கும் மாணவ மாணவியருக்கு இந்தி கட்டாயப் பாடமாக்கபபட்டது. மாணவர்கள் ஹிந்தியைக் கட்டாயமாகப் பயின்று அதில் தேர்வும் எழுதி போதிய மதிப்பெண் பெற்றால் மட்டுமே அடுத்த வகுப்பிற்குப் போக முடியும் என்று அறிவிக்கப்பட்டது.
ராஜாஜியின் இந்தச் சட்டத்தை எதிர்த்து முதலாவதாக, மறைமலை அடிகள், பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் முத்தமிழ் காவலர் கி. ஆ. பெ. விசுவநாதம் ஆகியோர் திருச்சியில் முதலாம் இந்தித் திணிப்பு எதிர்ப்பு மாநாட்டை நடத்தினார்கள். சென்னையில் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ. டி. பன்னீர் செல்வம், ஈ.வே.ரா பெரியார் ஆகியோர் தலைமையில் போராட்டங்களும், பேரணிகளும் நடைபெற்றன. மேலும் மாணவர்கள், வழக்குரைஞர்களின் புறக்கணிப்பு மற்றும் பேரணிகளின் விளைவாக தீவிரமாகப் போராட்டம் பரவியது.
ராஜாஜி ஹிந்தித்திணிப்பில் உறுதியாக இருந்தார். இது தமிழ் உணர்வாளர்களுக்கு ஆத்திரமூட்டியது. தமிழை அழித்து ஹிந்தியை வளர்க்கும் முயற்சியாகப் பார்க்கப்பட்டது. ராஜாஜிக்கும் மற்றும் ஹிந்திக்கும் எதிராக மாநில அளவில் எதிர்ப்பு கிளம்பியது. 1938 டிசம்பர் மூன்றாம் திகதி ஹிந்தி எதிர்ப்பு நாளாக கடைப்பிடிக்கப்பட்டது.
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நடராசன் மற்றும் தாலமுத்து ஆகியோர் சிறைப்பட்டு சிறையில் இறந்தார்கள். பின்னர் இவர்கள் மொழிப்போர் தியாகிகள் என்றழைக்கப்பட்டனர். போற்றப்பட்டனர். பெரியார் உட்பட பலர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
ஹிந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்திற்குப் பெரியாரின் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியினரும் துணை நின்றனர். இப்போராட்டத்தின் தொடர்ச்சியாக பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகவும் பொறுப்பேற்றார். நீதிக்கட்சி பின்னர் திராவிடக் கழகமாக பெயர் மற்ற்ம் செய்யப்பட்டது. ஆப்போது கருணாநிதி கட்சியின் பெயரை தன் இரத்தத்தினால் எழுதினார். ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில்; பெண்களும் பெரும்பான்மையாகப் பங்கேற்றனர். தமிழ் பேசும் இஸ்லாமியர் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர.;;
“வீழ்க ஹிந்தி” என்ற கோ~ம் மாநிலமெங்கும் எதிரொலித்தது.
கட்டாய ஹிந்திக் கல்வியை எதிர்த்து உண்ணாநோன்பு போராட்டங்கள் நடத்தப்பட்டன. "தமிழ்த்தாய்க்கு இன்னும் உண்மையான மகன்கள் இருக்கிறார்கள்" என்று அவர்கள் புகழப்பட்டார்கள்.
ஹிந்தி எதிர்ப்புக்காக ‘தமிழர் படை’ அமைக்கப்பட்டது. 1938 காலகட்டத்தில் பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தினரும் முசுலீம் லீக்கும் இணைந்து எதிர்ப்புப் பேரணியை நடத்தினர். திருச்சியிலிருந்து இவர்கள் நடைப்பயணம் மேற்கொண்டு 42 நாட்களில் சென்னை வந்தடைந்தனர். வரும் வழியில் 234 சிற்றூர்களுக்கும் 60 நகரங்களுக்கும் சென்று 87 பொதுக்கூட்டங்கள் நடத்திப் மொழிப் போராட்டத்திற்கு ஆதரவைத் திரட்டினர். தமிழ்படை தமிழ் காவலர்களாகப்பார்க்கப்பட்டார்கள். அவர்கள் பின்னர் தமிழக அரசியலில் செல்வாக்குமிக்கவர்களாக இருந்தார்கள்.
ஒரு இனத்தின் போராட்டம மொழி உரிமைக்கான போராட்டத்தோடு நெருக்கிய தொடர்புடையது. இதையே இலங்கையில் கற்றுக்கொண்ட பாடங்களும் சுட்டிக்காட்டுகின்றன. தனிச்சிங்களச் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு சிங்களம் ஆட்சி மொழியான போது அதனை எதிர்த்து நடைபெற்ற போராட்டங்கள். தமிழ்நாட்டின் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தோடு சமாந்தரமாக நோக்கத்தக்கன. வாகனங்களின் இலக்கத்தகடுகளுக்கு ‘சிங்களச் சிறி’ அறிமுகமானபோது ‘சிறி’ எதிர்ப்புப்போராட்டம் ஆரம்பிக்கப்ட்டு இனக்கலவரங்கள் உருவாக்கப்பட்ட கறைபடிந்த வரலாறுகள் நினைவுக்கு வருகின்றன.
தமிழநாட்டில் நடைபெற்ற ஹிந்தி எதிர்ப்பு மொழிப் போராட்டம் வெற்றி பெற்றது. இலங்கையில் மொழிப் போராட்டம் தோல்வியடைந்தது எனலாம்.
மொழிப்போராட்ட வெற்றிக்கு கருணாநிதியின் பங்களிப்பு மகத்தானது. தனது பள்ளிப் பருவத்திலேயே கருணாநிதியும் தமிழுக்காக கொடி தூக்கி திருவாரூர் வீதிகளில் போராடினார்.
கட்டாய இந்தி கல்வியை எதிர்த்து தமிழகத்தில் போராட்டம் உச்சகட்டத்தை அடைந்திருந்த நிலையில், 'வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம். வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்' என்று முழக்கமிட்டபடி ஊர்வலங்களை நடத்தினார.
1953ல் அவரது முக்கியமானதும் முதலாவதுமான போராட்டமாக அமைந்தது, கல்லக்குடிப் போராட்டம். கல்லக்குடியை டால்மியாபுரம் என்று பெயர் மாற்றம் செய்ததைக் எதிர்த்து ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து கருணாநிதி போராடினார். தனது போராட்டத்தால் சிறைப்பிடிக்கப்பட்டு ஆறு மாதங்கள் சிறைசென்றார். கல்லக்குடி என்ற பெயரை மீட்டெடுத்தார். இந்தப் போராட்டத்தால், கட்சிக்குள் ஒரு முக்கியமான சக்தியாக கருணாநிதி உருவெடுத்தார்.
துமிழ்நாட்டின் மொழிப் போராட்டங்களின் விளைவாக அப்போதைய இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு 65ஆம் ஆண்டிற்குப் பிறகும் ஆங்கிலம் அரசுமொழியாக விளங்க வழி செய்தார்.
26 சனவரி,1965 நாள் நெருங்கிவந்த காலத்தில் தமிழகத்தில் இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் வலுப் பெற்றது. அவ்வாண்டு குடியரசு நாளை கருப்புதினமாகக் கொண்டாட தி. மு. க அழைப்பு விடுத்திருந்தது. காங்கிரசு கட்சியினருக்கும் தி.மு.க சிலருக்கும் இடையே எழுந்த கைகலப்பு பெரும் கலவரமாக வெடித்தது. பரந்த அளவில் வன்முறை, தீவைப்பு எனப் போராட்டக்காரர்களும் தடியடி, துப்பாக்கிச்சூடு என மாநிலக் காவல் துறையினரும் மோதினர். இக்கலவரங்களில் இரு காவல்துறையினர் உட்பட 70 பேர்கள் (அதிகாரப்பூர்வமாக) இறந்தனர். இந்த நிலைமையைக் கட்டுக்குள் கொண்டுவர அப்போதைய இந்தியப் பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி, இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும் வரை ஆங்கிலமும் அரசுப்பணிகளில் இணைமொழியாக இருக்கும் என்ற உறுதிமொழி அளித்தார். இந்த உறுதிமொழியை அடுத்து மாணவர் போராட்டம் ஓய்விற்கு வந்தது.
1965ஆம் ஆண்டு இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் மாநில அரசுகளின் அரசியல் மாற்றங்களுக்கு வித்திட்டது. 1967ஆம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலிலும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் தி.மு.க பெரும் வெற்றி கண்டது. இந்தத் தோல்விக்குப் பிறகு மாநிலத்தில் மீண்டும் காங்கிரசால் ஆட்சியைக் கைப்பற்ற இயலவில்லை. 1967ஆம் ஆண்டு மத்தியில் ஆட்சியமைத்த இந்திரா காந்தி அரசுமொழிகளாக ஆங்கிலம், ஹிந்தி ஆகிய இரு மொழிகளும் அமையும் என்று சட்டத்திருத்தம் கொண்டு வந்தார்.
'வாருங்கள் எல்லோரும் போருக்குச் சென்றிடுவோம். வந்திருக்கும் இந்திப் பேயை விரட்டித் திருப்பிடுவோம்' என்ற போராட்டம் வெற்றி பெற்றது.
தேவநாயகம் தேவானந்த்
தொடரும்
No comments:
Post a Comment