2024 டிசம்பர் நடுப்பகுதியில் இலங்கை அரசியலில் சலசலப்புக்கு குறைவில்லை எனலாம். அதில் மூன்று சொற்பதங்கள (Jargons) முக்கியம் பெற்றன. அவை சேர் ( ‘Sir’ ); கௌரவத்திற்குரிய (‘Honorable’) கலாநிதி (‘Doctorate’) இவை ஆங்கிலேயரிடமிருந்து எமக்கு கிடைத்த பொக்கிசங்கள் என்றால் மிகையாகாது. ஆங்கிலேயர் அறிமுகம் செய்த அடிமைக் கல்வியைப் பின்பற்றுவதன் விளைவுகள். ஏங்கள் தலைகளில் குந்தியுள்ள அடிமை மனப்பாங்கின் பிரதிபலிப்புக்கள் . இவை முறைமை மாற்றத்திற்கு தடையாக உள்ள சிந்தனைகள் எனலாம். இதிலிருந்து விடுபடுவதான சிந்தனை மாற்றம் ஒவ்வொரு அடிநிலை மட்டத்திலும் ஏற்படுத்தப்படும் போது தான் நாம் பொருளாதார நிலையில் முன்னேற முடியும். ஆப்போது தான் நாம் எமக்கான பாதையை கண்டுபிடிக்க முடியும்.
ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது முதலாவது பாராளுமன்ற உரையில் ‘மக்களின் நலனுக்கான மையமாக பாராளுமன்றம் இருக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டார் மேலும் அவர் குறிப்பிடும் போது,
“தொடர்ந்தும் மக்களிடம் இருந்து தூரமான பாராளுமன்றமாக இலங்கைப் பாராளுமன்றம் இருக்க முடியாது. இந்தப் பாராளுமன்றத்தின் கௌரவம் மற்றும் பாராளுமன்றத்தின் மீயுர்வை பாதுகாக்க வேண்டும். மக்களுக்கு மறைவான நிலையமாக இந்தப் பாராளுமன்றம் இருக்காது. இந்த பாராளுமன்றம் மக்களுக்கு மர்மமாக இல்லாமல், அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்தும் இடமாக இருக்க வேண்டும். மக்கள் பற்றிய முக்கிய பிரச்சினைகளை விவாதிக்கவும் தீர்க்கவும். மக்களின் நலனுக்கான திட்டங்களை உருவாக்கும் அங்கமாக செயல்பட வேண்டும். அதனால்தான், இந்த பாராளுமன்றம் மக்களின் நலனுக்கும் நம்பிக்கைக்கும் மதிப்பளிக்கும் ஆளுமையாக இருக்க வேண்டும்.” என்றார்.
இந்தப் பின்னணியில் கடந்த வாரம் யாழ்ப்பாணத்திலும் கொழும்பிலும் நடந்த விடயங்கள் மக்கள் நலனுக்காக நடந்தனவா ? என்ற கேள்வியைக் கேட்டாக வேண்டும். யாழ் போதனா வைத்தியசாலையில் நடந்த சம்பவம் அதனைத் தொடர்ந்து யாழ்மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் என்பன மக்கள் நலன்சார்ந்த பார்வையில் பார்க்கப்பட வேண்டியதாகின்றது. இங்கு பாராளுமன்ற உறுப்பினரை எவ்வாறு அழைப்பது என்பது முதன்மையான பிரச்னையாக்கப்பட்டிருக்கிறது. அதே வேளை மக்களுக்கு சேவை வழங்கும் அதிகாரியை எவ்வாறு மதிக்க வேண்டும், அழைக்க வேண்டும் என்பது தொடர்பான சர்ச்சைகள் நீடிக்கின்றன. இங்கு மக்களே அதிகாரம் மிக்கவர்கள் அவர்களுக்காகவே அதியுயர் சபையான பாராளுமன்றமும் நீதி நிர்வாகத்துறையும் உள்ளது என்ற நிலை தோற்றுவிக்கப்படுகின்ற போது Sir மற்றும் Honorable என்ற வார்த்தை ஜாலங்கள் தேவையற்றவைகளாகிவிடும். சொற்பதங்களைத் தேடிப்பிடிப்பதற்கு அதிக நேரத்தை செலவிடாது மக்களின் அன்றாடப்பிரச்னைகளை தீர்ப்பதில் அக்கறை செலுத்தப்பட வேண்டும்.
இலங்கை ஜனாதிபதி பாராளுமன்றத்தில் நிகழ்த்திய தனது கன்னிப் பேச்சில் ‘அடுத்த ஆட்சி மாற்றம் நடைபெறும் வரை எம்மை உரசிப்பார்க்கும், பரீட்சித்துப் பார்க்கும் அதிகாரம் மக்களுக்கு உள்ளது என்று குறிபப்பிட்டார். அவர் குறிப்பிட்டது போலவே ஒரு மாதமே நிறைவு செய்திருக்கின்ற அவரது அரசாங்த்தின் பாராளுமன்ற உறுப்பினர்களை மக்கள் உரசிப்பாரத்திருக்கிறார்கள். அந்த முதல் முயற்சியில் அந்தப் பரீட்சையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு அதிர்ச்சியைச் சந்தித்திருக்கிறது. உடனடியாக அற்கான நடவடிக்கையை எடுத்து மக்கள் தம்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்ற முயற்சித்திருக்கிறது. இங்கு நாட்டின் தகைமையை உயர்த்துவதற்காக தம்மிடம் தகைமையுள்ளவர்கள் உள்ளார்கள் என்பதை தமது பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித்தகைமையை முன்வைத்து மார்தட்டிக் கொண்டவர்களுக்கு ஒரு தலைகுனிவாக சபாநாகரின் கல்வித்தகைமையை நிரூபிக்கமுடியாமல் போன சம்பவம் அமைந்திருக்கிறது. கல்வித்தகைமை நிரூபிப்பது தொடர்பான சர்ச்சை கடந்த காலங்களிலும் கிளப்பப்பட்டிருக்கிறது. ஒரு பாராளுமன்னறத்தின் உறுப்பினராக உள்ள ஒருவருக்கு கல்வித்தகைமை எதுவாகவும் இருக்கலாம். அவ்வாறே சபாநாயகர் தெரிவிலும் எந்தக்கல்வித்கமையுள்ளவர்களும் தெரிவாகலாம.; அந்தக் கதிரையில் அமரலாம். இந்த நிலைமையில் சமூகமட்டத்தில் நெருங்கிப்பணியாற்றிய கிராமமக்களுடன் நெருங்கிய தொடர்புடைய அவர்களோடு பணியாற்றி வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி ஏன் கல்வித்தகைமையில் தொங்கிக்கொள்ள முற்பட்டது என்பது எக்குள்ள கேள்வி? இந்த குழப்பங்களால் புதிய அரசாங்கத்தின், அதன் உயர்மட்ட தலைவர்களின் கல்வித் தகுதிகள் குறித்து மக்கள் கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளார்கள். இதனால்;, நம்பகத்தன்மை மற்றும் நேர்மை சோதனைகளை எதிர்கொள்ள வேண்டிய நிலைக்கு புதிய அரசு தள்ளப்பட்டுள்ளது.
மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) உயர் தகுதி வாய்ந்த தலைவர்களை கொண்டு செல்வதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்தது.
நவம்பர் 21 அன்று பாராளுமன்றம் அதன் அதிகாரப்பூர்வ பேஸ்புக் தளத்தில் பத்தாவது பாராளுமன்றத்தின் புதிய சபாநாயகராக கலாநிதி அசோக ரன்வல தெரிவு செய்யப்பட்டார் என்று அறிவித்தது. அவரது கல்வித் தகுதிகள் பற்றிய தகவல்களையும் பாராளுமன்ற செய்தி குறிப்பில் விளக்கமாக குறிப்பிடப்பட்டது. அதில், திரு. ரண்வாலா இலங்கையின் மொரட்டுவா பல்கலைக்கழகத்தில் வேதியியல் பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர் என்றும், ஜப்பானின் வாசேடா பல்கலைக்கழகத்தில் உயிர்வேதியியல் துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவர் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சந்தேகங்கள் எழுந்ததைத் தொடர்ந்து, பாராளுமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் டிசம்பர் 10 திகதி திரு. ரண்வாலாவின் பெயருக்கு முன் கலாநிதி; எனும் பட்டம் நீக்கப்பட்டது. புpன்னர் தொடர் ஆழுத்தங்களினால் அவர்பதவிவிலக நேரிட்டது.
இங்கு கலாநிதிப் பட்டம் என்பது ஒருவர் பெறக்கூடிய அதிகூடிய கல்வித் தகுதியாகும். இது, குறிப்பிட்ட ஒரு கல்வித் துறை அல்லது தொழில்முறை துறையில்; உயர்வாக கற்றறிந்ததைக் குறிக்கிறது. இதற்கு ஒருவர் ஒரு குறிப்பிட்ட துறையில் இளம்கலைப்பட்டம் பெற்றிருத்தல் கட்டாயமாகும். அதே வேளை கலாநிதிப்பட்டங்களுக்கு முதுகலைப்பட்டம் இருக்க வேண்டும் என்று கோரப்படும். இருப்பினும் இளமகலையில் முதல்நிலைச்சித்தியைப்பெற்றவர்கள் நேரடியாக கலாநிதிப்பட்டத்துக்காக பதிவு செய்ய சில பல்கலைக்கழககங்கள் அனுமதிக்கின்றன. குலாநிதிப்பட்டங்கள் குறைந்தது மூன்றுவருடகாலத்தைக் கொண்டமைகின்றன. புpரதானமாக ஆய்வை அடிப்படையாகக் கொண்டது. துறைக்கு புதிய ஆராய்ச்சிகளை உருவாக்குகிறது. இதனை நேரடியான கலாநிதிப்பட்டம் என்று வரையறுக்கின்றார்கள். இதனைவிட தொழில்முறை கலாநிதிப்பட்டங்களும் உண்டு MD (Doctor of Medicine ;), JD (Juris Doctor), EdD (Doctor of Education) போன்ற பட்டங்கள், ஆராய்ச்சியை விட நடைமுறை பயன்பாடுகளில் கவனம் செலுத்துகின்றன. இதே போன்று கௌரவ கலாநிதிப்பட்டங்களும் வழங்கப்படுகின்றன. ஒரு துறையில் அல்லது சமூகத்திற்கு பெரும் பங்களிப்பு செய்தவர்களுக்கு, அவர்களைக் கௌரவிப்பதற்காக வழங்கப்படும் பட்டமாகும்.
இங்கு இலங்கையின் அதியுயர் சபையில் தெரிவிக்கப்பட்ட பொய்யான தகவல் ஒன்றை எமக்கு தெளிவாகச் சொல்கிறது. மேலிருந்து கீழாக இலங்கையின் ஜனநாயகத்தின் மூன்று தூண்களும் பொய்தகவல்களைக் கொண்டிருக்கக்கூடும் என்ற தெளிவான செய்தியைத் தெரிவிக்கின்றன. குறிப்பாக வடக்கில் நீண்டகால யுத்த நிலைமைகளில் தகவல்கள் உறுதிப்படுத்தாமல் பொய்தகவல்களால் நிறைந்து கிடப்பதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. குறிப்பாக கல்வித்துறையிலும் பல்கலைக்கழகத்திலும் பட்டங்கள் மீள்தகவுடைமை செய்யப்பட வேண்டும்.
No comments:
Post a Comment