Saturday, 15 February 2025

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் நியமனம் அரசியல் அசிக்கத்தைப் போக்குமா?



Dr. தேவநாயகம் தேவானந்த்

தையிட்டி விகாரை அகற்றப்பட வேண்டும் என்ற போராட்டம் மக்கள் மயப்பட்டுவருகின்ற சூழலில் யாழ்ப்பாண அரசியல் களம் மிகவும் சூடுபிடித்துள்ளது போலும். இந்தத் தருணத்தில் இலங்கையின் பிரதமர் யாழ்ப்பாணம் வந்து சென்றிருக்கிறார். இது உள்ளுராட்சி தேர்தல் பிரச்சார ஆரம்பமாகவும் வளர்ந்து வரும் மக்கள் எதிர்ப்பை சமாளிப்க்கும் முயற்சியுமாகவே பார்க்கமுடிகிறது. இதற்கிடையில் பிரதமர் பொறுப்பு வகிக்கும் உயர்கல்வி அமைச்சின் கீழ் இயங்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்கு தலைவர், மூத்த பேராசிரியர் கபிலா சேனிவிரத்ன, அனைத்து பல்கலைக்கழக பேரவை உறுப்பினர்களுக்கும் அவர்கள் பதவிகளை பெப் 13 திகதிக்கு முன்னர் ராஜினாமா செய்யுமாறு கேட்டு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இங்கு கருத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விடயம் என்னவெனில் ஏன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, தேசிய கொள்கையின் பரந்த அளவிலான மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக அதில் குறிப்பிடப்படுகின்றது.  

இந்த மாற்றம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகப் பேரவையிலும் நடைபெறவுள்ளது. யாழ்ப்பாணப்பல்கலைக்கழக பேரவை நியமனங்கள் கடந்த காலகட்டங்களில் மிகவும்  மோசமான அரசியல் சித்துவிளையாட்டாகவே நடைபெற்று வந்துள்ளது. முன்னால் அமைச்சர் ஒருவர் கடந்த இரண்டு தசாப்தங்களாக யாழ்ப்பாணப்பல்கலைக்கழகப் பேரவை உறுப்பினர் நியமனங்களில் தனது செல்வாக்கைக் கொண்டிருந்ததோடு தனது சககட்சி விசுவாசிகளையும், ஆமாம்சாமிகளையும் நியமித்து யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தின் நிர்வாகத்தை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். நல்லாட்சிக்காலத்தில் சில மாற்றங்கள் இதில் காணப்பட்டாலும் அந்தப்பேரவையும் மிகமோசமான அரசியல் செயற்பாட்டையே விட்டுச்சென்றிருந்தது. இந்தப் பின்னணியில் தற்போதைய பேரவை நியமனம் மிகவும் கவத்தை ஈர்த்துள்ளது.

இது கடந்தகாலத் தவறுகளை எவ்வாறு நிவர்த்தி செய்யப்போகிறது என்பதை நியமிக்கப்படுவோரின் விபரம் பட்டவர்த்தனமாக்கும் என்று நம்பலாம். இந்த நியமனங்களுக்கான முன்மொழிவுகளை ஏலவே யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தில் தேசிய மக்கள் சக்தி சார்பு பேராசிரியர்களும், ஏனையவர்களும் முன்மொழிந்துள்ளதாகத் தெரிகிறது. இவர்கள் தற்போதைய பேரவை உறுப்பினர்களை பதவிவலக்குவதற்கான தொழில்சங்க நடவடிக்கைகளை ஆரம்பித்து அந்தப் போராட்டம் போதைக்கெதிரான போராட்டமாக திசைதிருப்பப்பட அதனை இடைநடுவில் கைவிட்டிருந்தார்கள். ஆகவே பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு எவ்வாறு பொறுப்புடன் செயற்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம். ஆனால் இந்த மாற்றம் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஆழமாகவே எதிர்காலத்தில உணரப்படும். 

இங்கு யாழ்ப்பாணப்பல்கலைக்கழகப் பேரவையின் கடந்த காலச் செயற்பாடுகளை மீள் பார்வைக்குட்படுத்த வேண்டியது அவசியமாகிறது. அதன் செயற்பாட்டின் பின்னணியில் நிலவி வந்த அரசியலை, அந்த அசிங்;கத்தை புரிந்து கொண்டு புதியவர்களை நியமிக்க வேண்டும். இந்தப் புதிய பேரவை இளைஞர் சமூகம் எதிர்கொள்ளும்;, புதிய வேலைப்படைக்கான போட்டிகளை எதிர்கொள்கின்ற உயர்கல்வி சூழ்நிலையை உருவாக்குவதாக அமையுமென்று நம்பலாம். 

ஒரு பல்கலைக்கழகத்தில் பேரவை இரண்டு வகையான உறுப்பினர்களை கொண்டிருக்கிறது. ஒன்று உள்ளக உறுப்பினர்கள் இவர்கள் பல்கலைக்கழக பதவிவழி நியமிக்கப்படுவார்கள். அதாவது பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள் தகுதியான அதிகாரிகளால் பரிந்துரைக்கப்படுவர் அல்லது தேர்தல் மூலம் தேர்வு செய்யப்படுவர்.

வெளிவாரி உறுப்பினர்கள் பல்கலைக்கழக மானிங்கள் ஆணைக்குழு அல்லது உயர்கல்வி அமைச்சின் பரிந்துரையின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர். இவர்களின் எண்ணிக்கை உள்ளக உறுப்பினர்களின் எண்ணிக்கையைவிட ஒன்று அதிகமாக இருப்பதாகப் பார்த்துக் கொள்ளப்படும். மானியங்கள் ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பபெறும் பரிந்துரைகளை மதிப்பீடு செய்து, நியமனத்திற்கான அனைத்து ஆவணங்களும் சரியானதாக உள்ளதா என்பதை உறுதிசெய். பின்னர் இறுதி அனுமதி உயர்கல்வி அமைச்சரால்; வழங்கப்படும். இந்த நியமனம் மூன்றுவருடங்களுக்கானதாக இருக்கும். இவர்கள் கூட்டங்களில் கலந்துகொண்டு, பல்கலைக்கழக வளர்ச்சியில் முக்கிய முடிவுகளை எடுக்க பங்குபெறுதல். நிர்வாக மற்றும் கல்வித் துறைகளுக்கான ஆலோசனைகளை வழங்குவார்கள்.

பல்கலைக்கழக பேரவைக்கு நியமனக்கப்படுபர்களுக்கான தகுதிகளையும் பல்கலைக்கழக மானிய ஆணைக்குழ பரிந்துரைத்துள்ளது. அதாவது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து கல்விப் பட்டம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தொழில்முறை தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் அல்லது தேசிய அல்லது சர்வதேச மட்டத்தில் சிறப்பு சாதனைகள்ஃமேன்மையான செயல்திறன் கொண்டவராக இருக்க வேண்டும், புகழ்பெற்ற நிறுவனங்களில் உயர் மட்ட நிர்வாகப் பொறுப்புகளை வகித்திருக்க வேண்டும் அல்லது தற்போதும் வகித்துவர வேண்டும். மேலும், சிறந்த சுய தன்மையுடன், கல்வி, தொழில்முறை, வணிக, தொழில், அறிவியல் அல்லது நிர்வாகத் துறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேலாக மூத்த நிலை பதவிகளில் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். அவேளை உயர்கல்வி துறையில் ஆர்வம் காட்ட வேண்டும் மற்றும் அதன் கொள்கைகள், சிக்கல்கள் மற்றும் சவால்கள் குறித்து விரிவான புரிதல் பெற்றிருக்க வேண்டும்.

மேலே சொன்ன அடிப்படையிலா கடந்த கால நியமனங்கள் நடைபெற்றன என்ற கேள்வியைக் கேட்டாக வேண்டும். கடந்த காலகட்டங்களில் முன்னாள் அமைச்சர் ஒருவரின் கட்சியில் தேர்தலில் போட்டியிட்டு தோற்றவர்களுக்கு நிவாரணத்திட்டமாக  பல்கலைக்கழக பேரவை உறுப்பினர் பதவிவழங்கப்பட்டுவந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. அதே வேளை முன்னாள் அமைச்சரின் கட்சிப்பணியாளர்களுக்கும் இந்தப்பதவி வழங்கப்பட்டு வந்ததையும் அவதானிக்க முடியும். மேலும், மதஅடிப்படையிலான நியமனங்களையும் அவதானிக்கலாம். இந்து கிருஸ்தவ மதஅடிப்படையில் இந்த நியமனங்கள் காணப்படுகின்றன. சில மதத் தலைவர்கள் நிரந்தர நியமனமாக வாழ்நாள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதையும் காணலாம் அதனால் ஏற்படும் விளை பயன் ஒருபோதும் மிதிப்பிடப்படுவதாக தெரியவில்லை. மதஅடிப்படையான நியமனங்கள் தவிர்க்கப்படுவதும் முறைமைமாற்றத்தில் முக்கியமானதாகும். மேலும் ஓய்வுநிலை பேராசிரியர்கள் தமது ஓய்வுகாலத்தை களிப்பதற்கான ஒரு களமாக பேரவை உறுப்பினர் பதவிகளை பெறுவதில் கவனம்செலுத்துகிறார்கள். ஏலவே பல்கலைக்கழச் உள்ளக சேவையில் இருந்து ஓய்வுபெற்றவர்கள் தங்கள் செல்வாக்கைத் தக்கவைப்பதற்காக இந்தப்பதவிகளை அரசியலவாதிகளை பிடித்து வருகிறார்கள். உயர்கல்வி முறைமையை வெற்றிகரமாக கொண்டுசெல்லாதவர்கள் அல்லது முறைமையின் தோல்வியின் காரணமானவர்களும் நியமிக்கப்படுவதால் என்ன பயன் ? அது தவிர்க்கப்படுவது நல்லது. புதிய பேரவை நியமனமென்பது தறுக்கணித்த ஏலவே இருந்த ஒன்றாகவே கடந்த காலகட்டங்களில் இருந்திருக்கிறது. அதே வேளை துணைவேந்தர் தெரிவை பேரவையே மேற்கொள்வதால்; எதிர்காலத்தில் துணைவேந்தர்களாக வரவுள்ளவர்கள் தாமும் பலரை உயர்கல்வி அமைச்சுக்கு பரிந்துரைக்கிறார்கள்.

வெளிவாரி பேரவை உறுப்பினர்கள் சுயசிந்தனையுள்ளவர்களாக நடுநிலைநின்று செயற்படுபவர்களாக எப்போதும் தம்மை நிலைநாட்ட வேண்டும். இங்கு யாழ்ப்பாணப்பல்கலைக்கழகத்தைப் பொறுத்தமட்டில் பெரும்  முறைகேடு மற்றும் அநீதிக்கான ஏதுநிலைகள் காணப்படுகின்றன. அதாவது உள்ளக பிரச்சினை, பதவிநிலை நியமனம், பதவிஉயர்வு எல்லாவற்றிற்கும் ஒவ்வொரு பேரவை உறுப்பினர் வீடுகளுக்கும் செல்ல வேண்டும் என்ற நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இங்கு முன்செல்பவரின் கோரிக்கைக்கு சார்பாகவே பேரவை உறுப்பினர்கள் செயற்பட்டிருப்பதையும் காணலாம். சுhர்புநிலை நியாயம் வழங்கும் ஒரு சபையாகவே யாழ்ப்பாணப்பல்கலைக்கழக பேரவை செயற்பட்டிருக்கிறது. அந்த அடிப்படையில் அந்த அதிகாரத்தைச் சுவைப்பதற்காகவே பலர் பேரவை உறுப்பினராக எவ்விதப்பட்டும் வந்துவிட வேண்டும் என்று ஆலாய்ப்பறக்கிறார்கள். ஆகவே உயர் அதிகாரம் கொண்ட பல்கலைக்கழக சபை சார்புநிலை நின்று செயற்படாமல் நடுநிலைநன்று நீதியான சபையாக செயற்படும் மாற்றம் உருவாக்கப்பட வேண்டும்.

இங்கு இன்னொரு விடயம் முக்கியமாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அதாவது பல்கலைக்கழகப்பேரவையில் தேவையான அளவில் பாலினச் சமத்துவம் பின்பற்றப்பட வேண்டும். கடந்தகாலத்தை எடுத்துக் கொண்டால் யாழ்ப்பாணப்பல்கலைக்கழகப் பேரவை ஆணாதிக்கச் சபையாகவே தன்னை வெளிப்படுத்தியுள்ளது குறிப்பாக பெண்களுக்கு நீதிகிடைப்பதில் தன்னை தகுதிநிலைப்படுத்திக் கொள்ளவில்லை. இதற்கு சிறந்த உதாரணமாக இருப்பது பல்கலைக்ழக பால் பால்நிலை சமத்துவத்துக்கான குழுவிற்கு கிடைக்கப்பெற்ற பெண்களுக்கு எதிரான 60 மேற்பட்ட முறைப்பாடுகள் கிடப்பில் கிடக்கின்றன. சில் முறைபாடுகளை பதிவுசெய்ய மறுக்கிறார்கள். கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளுக்கு தீர்வுகள் அல்லது நடவடிக்கைகள் எவையும் முன்மொழியப்படாமல் கிடப்பில் வைக்கப்பட்டுள்ன. இதற்கு பேரவையின் ஆணாதிக்கச் சிந்தனை ஒரு முக்கிய காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. 

பல்கலைக்கழக பேரவைக்கு வெளிவாரி உறுப்பினர் நியமனம்; பல்கலைக்கழகங்களின் தரத்தை உயர்த்துவதாக நல்லாட்சியை உறுதி செய்வதாக இயங்க வேண்டிய தேவையுள்ளது. இதனால் இந்த நியமனச் செயல்முறை முற்றிலும் திறந்தவெளியாகவும் தரச்சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் .வடக்கு மாகாணத்தில் கல்வியின் சூரியக்கதிராக நோக்கப்படுகின்ற யாழ்ப்பாணப்பல்கலைக்கழகம் அரசியல் அசிக்கத்திற்குள் இருந்து மீள்வதற்கான ஒரு வாயப்பாக தற்போதைய புதிய பேரவை உறுப்பினர் தெரிவு அமையவேண்டும். 

No comments:

Post a Comment