By Thulasi Muthulingam
Monday, 26 May 2025
Cultivating Children's Creativity through the Arts
சிறுவர் மகிழ்களம் மற்றும் நாடக இரவு : சிறுவர்கள் மகிழ்ந்திருப்பதற்கான அற்புதமான களம்
இ.தே.தே
தமிழர் சமூகத்தில் கல்வி ஒரு அடையாள மதிப்பாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் இந்த கடுமையான கல்வி நம்பிக்கையால் குழந்தைகள் தங்கள் குழந்தைப் பருவத்தை இழந்து வருகிறார்கள். அவர்கள் கல்விச் சுமையில் சிக்கிக்கொண்டுள்ளார்கள் என்பது ஒரு மறுக்க முடியாத யதார்த்தம். ஐந்தாம் வகுப்பு புலமைப்பரிசுத் தேர்விலிருந்து ஆரம்பித்து, G.C.E சாதாரணதரம் தொடக்கம் உயர்தரம்வரை, கல்வி கற்றல்; ஒரு போட்டிப் பயணமாகவே மாறியுள்ளது. பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகளை மருத்துவராகவும், பொறியியலாளராகவும்; வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்ற ஆசையில், சிறுவர்கள் மீது அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள்.
விளையாட்டு, நட்பு, குடும்ப உறவுகள், இயற்கையுடனான தொடர்புகள், கலாசார பங்கேற்புகள் என அனைத்தும் சிறுவர்கள் மத்தியில் குறைவடைந்துள்ளன. ஒற்றை பிள்ளை குடும்பங்கள் அதிகரித்துள்ள நிலையில், பெற்றோர்கள் வேலைபார்க்கும் சூழலில், குழந்தைகள் அதிக நேரத்தை ஸ்மார்ட்போன்களில் கழிக்கின்றனர். இந்த மெய்நிகர் உலகம் அவர்களுடைய உண்மையான மனித உறவுகளை பாதித்து வருகிறது. இதன் விளைவாக தனிமை, மன அழுத்தம், தற்கொலை எண்ணங்கள், நடத்தை பிரச்சனைகள் போன்றவை அதிகரித்து வருகின்றன. படி படி என்ற அழுத்தத்தைக் தினமும் கொடுத்தாலும் இறுதியாக பெறுபேறுகளைப் பொறுத்தவரை யாழ் மாவட்டம் நாட்டின் மிகக் குறைந்த தரவரிசையில் இடம் பெற்றிருப்பதைக் காணலாம். இது மனசோர்வு மற்றும் உளவியல் ஆதரவு இல்லாத கல்வியால் ஏற்படும் பின்விளைவுகளைக் காட்டுகிறது.

