Showing posts with label tamil media. Show all posts
Showing posts with label tamil media. Show all posts

Saturday, 11 January 2025

மக்கள்மயப்படுத்தப்பட வேண்டிய அரசியல்


Dr. தேவநாயகம் தேவானந்த்

அமரர் குமார் பொன்னம்பலத்தின் 25-ஆவது நினைவுப்பேருரையில், "மக்கள்மயப்படுத்தப்பட வேண்டிய அரசியல்" என்ற தலைப்பில் உரைநிகழ்ந்தது. இந்த உரைத் தலைப்பு யாழ்ப்பாணத்தில் நடந்த தேர்தல் முடிவுகளின் பின்னணியில் தமிழரசியல் சூழ்நிலைகளில் உருவாகியுள்ள மாற்றங்களை ஆழமாக ஆய்வு செய்யும் தேவையை முன்வைத்தது. ஆனால் உரையென்னமோ ’அரைத்தமாவை அரைப்பதாகவே’ காணப்பட்டது. இது தற்போது காணப்படும் புலமைத்துவ பின்னடைவை(Intellectual Bankruptcy) சுட்டி நிற்கிறது என்றால் அது மிகையாகாது. ஒரு பல்கலைக்கழக கல்விப்புலம்சார்ந்த ஒருவர் ஒரு மக்கள் தலைவனாகக் கருதப்பட்ட ஒருவரின் நினைவுப்பேருரையை புலமைத்துவ அடைவுளோடு முன்வைத்திருக்க வேண்டும். மாறாக  கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறேன் என்ற கோதாவில் அந்தக்கட்சியின் கருத்துநிலையையே தனது நிலைப்பாடாகச் சொல்வதென்பது அவரது வங்குரோத்து நிலையையே சுட்டுகிறது என்லாம். சரி அது நிற்க, 

Saturday, 21 January 2017

உத்தம வில்லன்


விடிகாலை சலப்பை முட்டி அடிவயிற்றில உதைக்க கண்முழிச்சன். இன்னும் சூரிய வெளிச்சம் முழுசா வரேல்ல. எழும்பி பாத்ரூமுக்க போய் சிரம பரிகாரம் செய்து போட்டு தண்ணியை அடிக்க பிளாஸை பிடிச்சு அமர்த்தினன். அது உடைஞ்சு கையோட வந்திட்டிது. இனி என்ன செய்யிறதெண்டு வாளியில தண்ணியப்பிடிச்சு அள்ளி ஊத்த வேண்டியதாப் போச்சு. இன்றைக்கு உவன் பிளம்பருக்கு பின்னால திரியிற வேலையொன்று வந்து போச்சு.

Monday, 9 January 2017

‘ஜே‘ : 43 வழக்குகளோடு அரசியல் அரங்கில் வெற்றிகளைக் குவித்தவர் -04


தென்னாசியாவில்எந்தவொரு அரசியல் பினபுலமும் இல்லாது பெண்ணொருவர் அரசியலுக்கு வருவதென்பது இமாலயச்சாதனை எனலாம். அதுவும் திருமணமாகாத தனியொருவராக அரசியலில் நிலைப்பபென்பது மிக கடினமான பயணமாகும். சினிமாவிலிருந்து குறிப்பாக வெகுசன ஊடகங்களில் இருந்து ஆண் ஒருவர் அரசியல் தலைமைக்கு வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். ஏம்.ஜி.ஆர் போன்ற தலைவர்கள் திரையில் தோன்றும் தங்கள் பரட்சிகரப்பாத்திரங்களின் பிம்பங்களுடனேயே நிஜவாழ்வில் தோன்றி வெற்றி பெற முடியும்.

Friday, 6 January 2017

' தமிழக மக்கள் தான் தமது சொத்து என்றவர் முதல்வர்” ' ஜெ'



தமிழ்நாட்டு அரசியல் மூன்று முதலமைச்சர்களை தனது பதவிக்காலத்தில் இழந்திருக்கிறது. பேரறிஞர் இண்ணாத்துரை, மக்கள் திலகம் எம்.ஸி.ஆர், புரட்சித்தலைவி ஜெயலிதா. இதில் இரண்டு தலைவர்கள் அண்ணா திராவிட முன்னேற்றக்கழத்தைச சார்ந்தவர்கள். ஆட்சியில் இருக்கும் போது சாவடைவதென்பது அந்த மக்களின் துயரங்களின் எல்லையில்லாத் தன்மையையும் கொடுப்பதோடு ஆட்சி ஆட்டம் காணுவதும் கட்சிகள் பிளவு படுவதும் நடைபெறுகின்ற. எம்.ஜி.ஆர் இறந்தபோது அ.தி.மு ஆட்சி கலைக்கப்பட்டு குடியரசு தலைவர் ஆட்சி கொண்டு வரவேண்டியிருந்தது.

Sunday, 6 November 2016

காலைக்கதிர் பத்திரிகை இதழியல் பரப்பிற்கு புதிய வீச்சைக் கொடுக்கட்டும்.


இலங்கைத் தமிழ் இதழியல் வரலாறு தேசியப்பத்திரிகைகளில் மையம் கொண்டிருந்த காலம் மாற்றமடைந்து பிராந்தியப்பத்திரிகைகளில் மையம் கொள்ள ஆரம்பித்திருக்கின்றது. அதில் யாழ்ப்பாணம்  மையப்புள்ளி எனலாம். இந்த மைய நீரோட்டத்தில் ‘காலைக்கதிர்’ என்ற புதிய தினப்பத்திரிகையும் வந்து கலப்பதையிட்டு பெருமகிழ்ச்சியடைகின்றோம்.