Kalaikathir 28.01.2025
Dr. தேவநாயகம் தேவானந்த்
யாழப்பாணததின் மையப்பகுதியலில் இருக்கின்ற சிறிய முக்கியமான பகுதி திருநெல்வேலி .இந்தப் பகுதி ஈழத்து நவீன நாடக வரலாற்றில் முக்கியமான பகுதியாக இனம்காணமுடியும்.
திருநெல்வேலியில் அமைந்துள்ள இவரது வீட்டை ஒரு நாடகத்திண்ணையென்று குறிப்பிட விரும்புகின்றேன அதில்; நாடக உரையாடல்கள் தினம் நடந்து வந்தன. குழந்தை ம.சண்மகலிங்கம் தனது 93 வது வயதில் கலமாகியிருக்கிறார.அவர் உலகத் தமிழ் நாடக உலகில் வரலாறாகி நிற்பவர்.தனது நாடக எழுத்துருக்களால் உலகெங்கும் பேசப்படுபவர்.இவரது நாடக எழுத்துருக்கள் இன்றும் இலங்கையின் பல பாகங்களிலும் உலகில் தமிழர்கள் வாழும் பல நாடுகளிலும் மேடையேற்றப்படுகின்றன.இந்த உயர்ந்த கலைஞரை குழந்தை மாஸ்ரர் என்று அன்பாய் அழைப்பது வழமை.இந்தக் குழந்தை தமிழ் நாடகத்திண்ணையின் பேறு என்று சொல்வதில் தவறொன்றும் இல்லை என்று நினைக்கிறேன்.
‘அவா இல்லை வெறி இல்லை முடிஞ்சா செய்வம். சாதிக்க வேண்டும் என்ற பதட்டம் ;இருந்ததில்லை இதனால் என்னால சிலதை சாதிக்க முடிந்தது என்று நினைக்கிறன்’
இது குழந்தை ம.சண்முகலிங்கத்தின் அமைதியான கருத்து.
உலகெங்கிலும் உள்ள தமிழர்கள் மத்தியில் நவீன தமிழ் நாடகத்துக்காக போற்றப்படுபவர் கலாநிதி குழந்தை ம. சுண்முகலிங்கம்.தனது 90வது வயதிலும் நாடகங்கள் எழுதுவதிலும் தயாரிப்பதிலும் நாடகவிடயங்களை தேடிக்கற்றுக்கொள்வதிலும் மிகவும் ஆர்வத்தோடும் துடிப்போடும் இருந்தவர். நாடகத்துறை சார்ந்த பல கட்டுரைகளை மொழிபெயர்ப்புக்களைத் தந்த பேராளுமை.இதுவரையில் நூற்றுக்கு மேற்பட்ட சுய ஆக்க நாடகங்களையும், 60 மேற்பட்ட மொழிபெயர்ப்பு நாடகங்களையும் தமிழ் நாடக உலகிற்கு தந்திருப்பவர்.
நாடகம் பற்றிய உரையாடல்கள் தினமும் நடக்கின்ற ஒரு திண்ணை யாழ்ப்பாணத்தில் எங்கு இருந்தது என்று கேட்டால் நான் துணிந்து உரத்து சொல்வேன் குழந்தையவர்களின் வீட்டின் முன்னால் உள்ள திண்ணையென்று. பல்கலைக்கழகங்களில் அவ்வாறான உரையாடல்கள் ஆங்காங்கே நடக்க வேண்டும்.கல்விக்கூடங்களிலே நடக்க வேண்டும் நாடகக் குழுக்கள் நிறுவனங்களில் நடைபெற்வேண்டும் ஆனால் அவ்வாறு நடைபெறுவதில்லை மாறாக நாடகப்பரீட்சை பற்றியே ஒரு சில நேரங்களில் பேசிக்சொள்கிறார்கள்.என்ன அபத்தமிது தானே தோன்றிய மனிதக்கலை பற்றி பேசுவதற்கும் விவாதிப்பதற்கும் ஒரு பொதுத்தளமின்றி நாடகக்கலை வளர்ந்திருக்கிறதே? போகட்டும் விட்டுவிடுங்கள் இப்போதைக்கு மனதுக்கு ஆறுதல் தருவது நாடக உரையாடல்கள் தினமும் நடந்த ‘நாடகத்திண்ணை’ குழந்தை சணமுகலிங்கம் வீட்டில் இருந்திருக்கிறது என்பது தான்.இதற்கு என்ன காரணம் அவரே சொன்னது போன்று ‘சாதிக்க வேண்டும், பதவியைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும், பட்டம் பெறவேண்டும் என்ற எந்தப்பதட்டமும் இல்லாமை’ என்பதை குறிப்பிடலாம்.
இங்கு அவர் சொன்ன இன்னொன்றையும் நாம் கருத்தில் கொள்ளலாம்.
‘நடிகனின் ஆளுமை முக்கியம் ஆனால் தன்னை வெளிப்படுத்தும் எண்ணம் இருக்கக் கூடாது’
இதனை அவர் சொன்னது மேடையில் நிக்கும் நடிகனுக்கு மட்டமல்ல வாழ்க்கையில் வெவ்வேறு வகிபாகங்களை நடிக்கின்ற நடிகனுக்கும் பொருந்தும்.
எந்த மேடைக்கும் விரும்பிப்போகாத மனிதன்,மாலைக்காக கழுத்து நீட்டாதவர், புகழுக்காக அலைந்து திரியாதவர்,தன்னை வெளிப்படுத்துவதற்காக விழா எடுக்காதவர் எப்போதும் தன்னடக்கத்துடன் சுய விமர்சனத்துடன் வாந்த மனிதரை இனிக்காணமுடியாது என்பது கவலைதரும் விடயம். ஏதற்கெடுத்தாலும் ‘பாராட்டி வாழ்த்துகின்ற புது யுகத்தில’; இப்படியொரு மனிதரா? என்று வியப்பாக இருக்கிறது. நூன் அறிந்த வரை தான் விண்ணப்பிக்காது தன்னைத்தேடிவந்த பல விருதுகளை எந்த ஆரப்பாட்டமும் இல்லாமல் சிறு கடிதமொன்றுடன் நிராகரித்தவர்.
‘நாம் சுதந்திரமாக கௌரவமாக வாழும் சூழலொன்று உருவாகியபின்னர் தான் நான் எந்நப்பட்டங்களையும் வாங்குவதாக உத்தேசித்துள்ளேன். உங்கள் கொரவத்ததை ஏற்றுக் கொள்ளவில்லை’
என்றவாறாக கடிதத்தை எழுதி அமைதியாக இருந்திருக்கிறார். தனக்கு வழங்கப்பட்ட ‘ஐனாதிபதி விருது’,’ஆளுனர் விருது’ அடங்கலான மேலும் பல விருதுகளை அவர் நிராகரித்திருக்கிறார் அந்த நிராகரிப்புக்கள் எவற்றையும் பத்திரிகைகளுக்கு கொடுத்து பிரபல்யம் தேடிக்கொண்டதும் இல்லை. நாடகத் திண்ணையில் உரையாடும் போது மட்டும் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.அவரது அனுமதியில்லாமல் இந்தத் தகவலை பகிர்ந்து கொள்ள வேண்டியுள்ளது என்பதையும் இங்கு சொல்லியாக வேண்டும். பெரும் கலைஞர்கள் என்று இன்று போற்றப்படுகின்றவர்கள் பலர் ஒன்றில் பட்டத்தை வாங்கி பிரபல்யமாக விரும்புகிறார்கள் அல்லது பட்டத்தை நிராகரித்து பிரபல்யமாகிறார்கள். ஆனால் குழந்தை மாஸ்ரருக்கு அவை எவைபற்றியும் கவலையில்லை தான் கொண்ட கொள்கையில் நிக்கிறேன் என்ற ஆத்ம தீருப்திதான் காரணமென்று நினைக்கிறேன். இதனால் தான் அவரது பெயருக்கு முன்னால் கலைப்பேரரசு கலைஞான கேசரி. கலையரசு என்ற சனசமூகநிலையங்கள் வழங்குகின்ற பட்டங்களைக் கூட காணமுடியவிலலை.
‘பேராசிரியர் கா.சிவத்தம்பி குழந்தையின் நாடகங்களில் தீருநெல்வேலி செம்பாட்டு மண்ணின் வாசைனையிருக்குமென்று அடிக்கடி சொல்வார். இதனையே குழந்தையவர்கள் ‘அம்மாவுக்குள்ளால் எனக்குள் பண்பாடு கடததப்பட்டது’ என்கிறார்.
குழந்தை ம.சண்முகலிஙகத்திற்கு நான்கு குழந்தைகள் மூன்று பெண்பிள்ளைகள் ஒரு ஆண் பிள்ளை. திருமணமாகி ஒரு பத்தாண்டுகள் உடுவிலில் வாழ்ந்ந போது நாடகத்துக்கு வராமல் அஞ்ஞாத வாசம் இருந்திருக்கிறார். இந்தக்காலத்தில் எந்த நாடக முயற்சியிலும் ஈடுபடாமல் இருந்திருக்கிறார் மீண்டும் ஊடுவிலில் இருந்து திருநெல்வேலிக்கு வந்ததும் மீண்டும் அவருள் கிடந்த நாடகம் உயிர்பெற்றதென்று அறியமுடிகிறது.
‘ஏன் வாழ்க்கை திட்டம் போட்டு நகர்ந்ததில்லை’என்று சொல்லுகின்ற குழந்தையவர்களின்; பிள்ளைகள் யாரும் இப்போ அவர் அருகில் இல்லை அவரே நகைச்சுவையாக சொல்வார் ‘நான் கனடாவுக்கு பிள்ளைகள் பெற்றனான்’ கனடாவில் உள்ள பிள்ளைகள் அங்கு வந்து இருக்குமாறு இவரை தினமும் வற்புறுத்தினார்கள். தாயத்தை விட்டு வெள்யேறுவதில்லையென்ற தன் கொள்கையுடன் இங்கேயே இருந்து இறந்திருக்கிறார். அதனைக்கூட அவர் எப்போதும் பறைதட்டி சொன்னது கிடையாது. மண்சுமந்த மேனியர் நாடகத்தில் வெளிநாடு போவோரை விமர்சித்தவர்,;.தான் எழுதுவதற்கும் வாழ்வுக்கும் தொடர்பிருக்க வெண்டுமென்ற அடிப்படையில் வாழ்ந்தவர். கலையென்ற வெளியில் ஏதோ படைத்துவிட்டு ஐதார்த்தத்தில் வேறாக வாழ்து விட்டு போகாமல்.பேசுவதும் நடைமுறையும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று முயற்சிக்கிற ஒரு மனிதராகவே அவரைக்காண முடியும்.இப்போதெல்லாம் இவ்வாறானவர்களை நாம் அருந்தலாகவே எம் மத்தியில் காண முடியும்.
யாழ்ப்பாண இந்துக்கல்லூரியில் படித்த குழந்தை ம. சண்முகலிங்கம் தன் பாடசாலை நாட்களைப்பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார் ‘பாடசாலைக்காலம் என்னைக்கண்டு பிடிக்கவில்லை.நானும் பாடசாலைக்காலத்தை பயன்படுத்தி என்னைக்கண்டு பிடிக்கவில்லை. இந்து கல்லூரி மைதானத்தில கால் பதிச்சதும் இல்லை மேடையில ஏறினதும் இல்லை.ஒரு சாதாரண மாணவனாக இருந்தம்’1931 ஒக்ரோபர் பதினைந்தாம் திகதி பிறந்த இவர் நீர் கொழும்பில் பத்து வயது வரை தன் தந்தை வேலை செய்த தென்னை எஸ்ரேட்டில அடிநிலை சிங்கள தமிழ் மக்களோடு வாழ்ந்திருக்கிறார்.நீர் கொழும்பில் தங்கொட்டுவ கிராமத்தில் வாழ்ந்த பசுமையான அனுபவத்தை அடிக்கடி நினைவு கூருவார்.
’கடைசிவரை சிங்களவரை வெறுக்க முடியாது.சிங்களவரை காணுகின்ற போது சந்தோசமாக இருக்கும்’ என்ற அவரது நிலைப்பாடு பேதம் கடந்த அவரது மானுடத்தை சொல்கிறது.
‘நான்வாழ்ந்த கிராமத்தில் தமிழர்கள் இருந்தார்கள் அவர்கள்pன் பேசும் தமிழ் வித்தியாசமானதாக இருந்தது போலவத்தை என்ற கிராமத்தில் தமிழ் பள்ளிக்கூடம்; இருந்தது(1941) ஆனால் இன்று அவர்களின் பிள்ளைகளுக்கு தமிழ் தெரியாது.அங்கு தமிழ் பாடசாலையும் இல்லை’என்று ஆதங்கப்பட்டுக் கொள்கிறார்.
’1956ம் ஆண்டுக்குப்பின்னர் மெல்ல ‘துவேசம்’ வளரத் தொடங்கிச்சுது.அதுக்குப்பிறகு இரயிலில் பயணிக்க வெறுப்பாகவும் பயமாகவும் இருந்தது’ என்றும் கூறுகிறார்
தென்னிந்தியாவில தனது மேற்படிப்புக்காக 1953 தொடக்கம் 1957 வiர் தங்கியிருந்து தனது பி.ஏ பட்டத்தை நிறைவு செய்து .பின்னர் 1958 இல் செங்குந்தா இந்துக்கல்லூரியில் ஆசிரியராக இணைந்து கொள்கிறார்.இதே ஆண்டில் கலையரசு சொர்ணலிங்த்தின் தொடர்வு கிடைக்கிறது.
புக்கத்து வீட்டு சுப்iபா அம்மானை பிரதிபண்ண வெளிக்கிட்டு புரோக்கர் கிழவனா நடிக்க ஆரம்பிச்சது தான் இவரது நாடக ஆரம்பமாக அமைந்தது என்பதை அடிக்கடி நினைவு படுத்திக்கொள்வார்.
‘விருப்பமில்லாத வாய்ப்புக்கள் என்னை உருவாக்கியது. நாடக அரங்கக் கல்லூரி உருவாக்கிய பிறகு ஊர் நாடகக்காரராக இருந்நநிலை மாறி எழுத்தாளர் வட்டத்துக்க வந்தம்’என்று தனது வளர்ச்சி பற்றிக்குறிப்பிடுகிறார்.
‘ஏஸ்.ஏ.விக்கிரமசிங்க(கொமினிஸ்),பீற்றக்கெனமன்(கொமினிஸ் )என்.எம்.பெரேரா(சமசமாசக்கட்சி) போன்ற கொமினிஸ் கட்சித்தலைவர்களின்ர பேச்சுக்களைக் கேட்க விருப்பம். ஆனால் அரசியல் கட்சிகளில் ஈடுபாடு இல்லை கொள்கைகளில் விருப்பம். இந்த கட்சிகளின் இறுக்கங்கள் உடன்பாடாக இல்லை.செயல்முறை அரசியல் இல்லை’என்று தன் அரசியல் ஆர்வம்பற்றி குறிப்பிட்டிருக்கிறார்.
இந்த நிலைப்பாட்டை தான் உருவாக்கிய நாடக அரங்கக் கல்லூரியிலும் நடைமுறைப்படுத்தி வெற்றி கண்டிருந்தார். தான் விரும்பா கொள்கையுடைய தான்சாரா கட்சிக்காரர்களுடன் இணைந்து நாடகம் செய்திருக்கிறார். பேதம் கடந்த பொதுமையைப் பேசி அதை செயல் வடிவத்திலும் காட்டியிருக்கிறார்.
பகையாக இருந்த கட்சிக்காரர்கள் நாடக அரங்கக் கல்லூரியில் நாடகக்காரர்களாக ஒன்றிணைந்து செயற்பட்டார்கள். நாங்கள் ஒருகாலமும் கட்சிகளுக்காக நாடகம் போடவில்லை’என்கிறார் குழந்தை ம. சண்மகலிங்கம்.நாடக அரங்கக் கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட போது பீஐpங் கொங்கிரஸ்,மொஸ்க்கோ கொங்கிரஸ்,தமிழ் கொங்கிரஸ்,தமிழரசுக்கட்சி மற்றும் எந்தக்கட்சிகளுடனும் தொடர்பில்லாதவர்களும் இணைந்து செயல்பட்டிருப்பது வியப்பான ஒரு உண்மை.இந்த சாதனைக்கு சொந்தக்காரர் குழந்தையவர்கள்.
1961 உடுவிலில் மனைவியின் வீட்டில் குடியேறுகிறார்.தனித்திருந்த காலத்தில் திருக்குறளின் நாட்டம் காரணமாக வள்ளுவர் வாழ்க்கை வரலாற்றை ‘வையத்துள் தெய்வம’; என்ற நாடகமாக எழுதுகிறார் எழுதுகிறார.அது அவர் எழுதிய இரண்டாவது நாடகம் இது பின்னாளில் யாழ்ப்பாணத்தில் நடந்த தமிழாராச்சி மகாநாட்டில் மேடையேற்றப்பட்;டது.தான் எழுதிய இந்த நாடகத்தை 12 வருடங்கள் யாருக்கும் காட்டாமல் வைத்திருந்ததும் பின்னர் நாடக ஆர்வலர் திரு செல்வரட்ணம் முயற்சியால் 1973இல் மேடையேற்றப்பட்டதும் வரலாறாக உள்ளது.
இவர் தன் இளமைக்காலத்தில் ஒரு ‘வெக்கறையான பையனாக’ இருந்திருக்கிறார்.இதனால் இவரது தாயார் அயல் வீட்டுப் பெடியங்களை கூப்பிட்டு இவன் பொப்பியைப்பிள்ளைகள் போல் வீட்டுக்க இருக்கிறான்.சனசமூக நிலையத்துக்கு கூட்டிக்கொண்டு போக்கோ என்று சொல்லியிருக்கிறார்.அது தான் நாடகத்துக்குள் இவரை இழுத்துச்சென்ற விசையாக அமைந்து விடுகிறது.
குழந்தையவர்கள் மூச்சுப்பிடிச்சு வசனம் பேசி நடித்து பார்வையாளரின் கைதட்டலைப் பெற்ற காலத்தில் நாடகங்கள் நடித்திருக்கிறார்.அதற்கு முன்னர் தாமாக ஒன்று சேர்ந்து கதையைதீர்மானித்து பேசிப் பறைந்து வசனங்களைத்தீர்மானித்து புத்தாக்கம் செய்து ஒரு பத்து பதினைந்து தரம் ஒத்திகை பார்த்து நகைச்சுவையும் வசனங்களும் மேலேங்கியிருக்கக்கூடிய நாடகங்களை ஊரில் விதானை செல்வரத்தினத்துடன் சேர்ந்து மேடையேற்றிய அனுபவத்தையும் கொண்டிருந்தார். புpன்னர் 1978 ஆண்டு தனது 45வது வயதில் கொழும்பு பல்கலைக்கழகம் நடத்திய நாடக டிப்ளோமா பயிற்சியில் பங்கு கொண்டு நாடகத்தை முறையாகப்பயின்று பின்னர் நாடகங்களை எழுத ஆரம்பிக்கிறார். (தொடரும்)
No comments:
Post a Comment