- துளசி முத்துலிங்கம் / ஆங்கில ஊடகத்துறை
உலகின் பிற பகுதிகளைப் போலவே, யாழ்ப்பாணத்திலும் மக்கள் தொகை குறைந்து வருகின்றது. இதற்கு வேகமான புலம்பெயர்வு ஒரு காரணமாக இருந்தாலும். குழந்தைகள் பிறக்கும் வீதம் குறைந்து வருவதும் முக்கியமான காரணமாகும். இப்போது யாழ்ப்பாணத்தின் பெற்றோர்கள் குறைந்த குழந்தைகளையே பெறுகிறார்கள். தற்போது யாழ்ப்பாணத்தில் பெரும்பாலான குடும்பங்களில் அதிகபட்சமாக இரண்டு; குழந்தைகள், பலர் ஒரு குழந்தையுடன் நிறுத்திக் கொள்கிறார்கள். இப்போது குழந்தை இல்லாதவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. சில ஆண்களும்,; பெண்களும் திருமணம் செய்யாதும் இருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையும் அதிகரித்துவருகின்றது. இங்கு தனிப்பட்டவர்களின் முடிவின் மீது நான் கேள்வி கேட்கவில்லை - இந்த பொருளாதார நெருக்கடியில், திருமணம் செய்வதும் ,அதிக குழந்தைகளைப் பெறுவதும் முடியாது தான், அதனை ஏற்றுக்கொண்டாக வேண்டும்.